Published:Updated:

டான் பிரவுன்... டாம் ஹேங்க்ஸ்...ராபர்ட் லாங்டன்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இன்ஃபெர்னோ? படம் எப்படி

Vikatan Correspondent
டான் பிரவுன்... டாம் ஹேங்க்ஸ்...ராபர்ட் லாங்டன்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இன்ஃபெர்னோ? படம் எப்படி
டான் பிரவுன்... டாம் ஹேங்க்ஸ்...ராபர்ட் லாங்டன்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இன்ஃபெர்னோ? படம் எப்படி

'தி டா வின்சி கோட்', ' ஏஞ்சல்ஸ் & டீமோன்ஸ்' நாவல்களுக்குப் பின், திரைப்படமாகி இருக்கும் டான் பிரவுனின் மூன்றாவது நாவல் தான் இன்ஃபெர்னோ .முதல் இரண்டு படங்கள் உலக முழுவதும் பயங்கர ஹிட் அடிக்க, இன்ஃபெர்னோவிற்கு எதிர்பார்ப்பு எகிறியது. ரிசல்ட்?

உலக மக்கள் தொகை வைரலாக ஏறிக்கொண்டே செல்கிறது. வைரஸ் ஒன்றை பரப்பி எண்ணிக்கையை பாதியாக்க முயல்கிறார் ஒரு விஞ்ஞானி. அதை முறியடித்தாரா டாம் ஹேங்க்ஸ் என்பதை சொல்லும் படம் தான் 'இன்ஃபெர்னோ'. உலகைக் காப்பாற்றும் ஹீரோக்கள் வரிசையில் சூப்பர்ஹீரோ ஜேம்ஸ் பாண்டுக்கு புதிய ஃப்ரெண்ட் டாம் ஹேங்க்ஸ்.

ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசியரான ராபர்ட் லாங்டன் தலையில் காயத்துடன் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.கடந்த சில நாட்களின் நிகழ்வுகள், அவரது நினைவில் இல்லை.இத்தாலி நகரம் ஒன்றில் இருக்கும் ராபர்ட்டை கவனித்துக்கொள்கிறார் மருத்துவர் சியன்னா ப்ரூக்ஸ். ராபர்ட் லாங்க்டனுக்கு நினைவுகள் ஷார்ட் டெர்மில் அவ்வப்போது வருகிறது. 
பணக்காரரான ஜோப்ரிஸ்ட், உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அழிவை நோக்கி காத்திருக்கும் அடுத்த உயிரினம் மனிதன் தான் என எச்சரிக்கிறார். ஒரு வைரஸை உருவாக்கி மக்களை கொல்ல திட்டமிடுகிறார்.ஜோப்ரிஸ்ட் இறந்துபோக, வைரஸ் எங்கு இருக்கிறது என்ற  புதிர்கள் மூலம் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள். ' CERCA TROVA' , ' மேப் ஆஃப் ஹெல்'  , ' மர்சியானோ போர் காட்சி ஓவியங்கள்'  என புதிர்கள் அடுக்கப்படுகின்றன. ராபர்ட்டைக் கொல்ல திட்டமிடும் கும்பல், அமெரிக்க தூதரக அதிகாரிகளா, இத்தாலி காவல்துறையா, வைரஸ் கும்பலா என திரைக்கதை சுழல ஆரம்பிக்கிறது. 

இறுதியில் எல்லோரும் எதிர்ப்பார்த்த சில ட்விஸ்டுகளுடன் உலகைக் காக்கிறார் டாம் ஹேங்க்ஸ். தமிழ் ரசினுக்கு படம் தசவாதாரத்தில் ஆரம்பித்து, விஸ்வரூபத்தில் முடிவது போல் ஒரு ஃபீல் தரும் என்பதில் சந்தேகமில்லை. 
மயக்க நிலையில் இருந்து எழும் நாயகனுக்கும், பார்வையாளனுக்கு ஒவ்வொரும் புதிரும் ஒன்றாகவே தெரிய வருகிறது. முன்னணி கதாப்பாத்திரத்துடன் நாமும் சேர்ந்து பயணம் செய்வது எளிதாகவும், ஆர்வத்தை தூண்டும்படியாகவும் இருக்கிறது. அந்த ஐடியா மட்டும் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.


டான் பிரவுன் படைப்புகளில் ஐரோப்ப வரலாற்று சுவாரஸ்யங்கள் கொட்டிக்கிடக்கும். இன்ஃபெர்னோவும் விதிவிலக்கல்ல. புத்தகமாக வாசிக்கும்போது நமது கற்பனையும் சேர்ந்து ஒரு உன்னத அனுபவம் கிடைக்கும். அதைக் காட்சிகளாக பார்க்கும் போது பார்வையாளனின் கற்பனைக்கு அதிகம் இடமில்லை. அதனால், நடிப்பும்,  இசை இன்னபிற இத்யாதிகளும் சுவாரஸ்யத்தை சேர்க்க வேண்டும். எந்த ஒரு நாவலை படமாக்கினாலும் இந்த சவால் உண்டு. இன்ஃபெர்னோவில் அந்த சுவாரஸ்யம் போதுமான அளவு கைக்கூடவில்லை. டாம் ஹேங்க்ஸ் தன்னால ஆன மேஜிக்கை நிகழ்த்தினாலும், நகராக திரைக்கதை படத்தை சோர்வாக்குகிறது., பார்வையாளனை பெரிதும் ஈர்த்தது ஹான்ஸ் ஜிம்மரின் இசை தான். 

படத்தின் டிரெய்லர்

டாம் ஹேங்க்ஸின் டெர்ரிஃபிக் நடிப்பு, இந்திய மார்க்கெட்டிற்காக தலை காட்டும் இர்ஃபான் கான் பில சில விஷயங்களுக்காக படத்தைப் பார்க்கலாம். ஆனால், அதைத் தாண்டி சீட் நுனி த்ரில்லரோ, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்களோ எதிர்ப்பார்த்து போனால், கஷ்டம் ப்ரோ.