Published:Updated:

கல்லா கட்டுவானா இந்த கணக்கு பிள்ளை? தி அக்கவுன்டன்ட் -படம் எப்படி?

கல்லா கட்டுவானா இந்த கணக்கு பிள்ளை? தி அக்கவுன்டன்ட் -படம் எப்படி?
கல்லா கட்டுவானா இந்த கணக்கு பிள்ளை? தி அக்கவுன்டன்ட் -படம் எப்படி?

கல்லா கட்டுவானா இந்த கணக்கு பிள்ளை? தி அக்கவுன்டன்ட் -படம் எப்படி?


டாம் ஹேங்க்ஸின் இன்ஃபெர்னோ ரிலீஸ் ஆனாலும்,தி அக்கவுன்டன்டுக்கு ஏக எதிர்பார்ப்பு. பென் அஃப்லக் ரசிகர்கள் அவர்கள் ஸ்டைலில் படத்தை வரவேற்று கொண்டாடினார்கள். IMDB போன்ற தளங்களில் அக்கவுன்டன்ட் நல்ல ரேட்டிங் பெற்றாலும் விமர்சகர்கள் நையபுடைத்து விட்டார்கள். உண்மையில், இந்த அக்கவுன்டன்ட்டின் பேலன்ஸ் ஷீட்டில் இருப்பது லாபமா, நஷ்டமா?

ஒரு எக்ஸ்ட்ரார்டனரி அக்கவுண்டட் ஒருவரின் நிகழ்காலமும், கடந்தகாலமுமே கதை.

 “ஒரு தடவ முடிவு பண்ணிட்டனா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்” டைப் ஹீரோ. சிறு வயதில் இருந்தே வித்தியாசமானவன் க்றிஸ் வுல்ஃப். அவனது ஃபோகஸ் தவறவே தவறாது. ஆனால், ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை முடித்துவிட வேண்டும். இல்லையேல், அவனை அவனாலே கட்டுப்படுத்த முடியாது. அப்பா அம்மா பிரிய இன்னும் பாதிக்கப்படுகிறான். இது கடந்தகாலம்.

நிகழ்காலத்தில், கிறிஸ் ஒரு பக்கா அக்கவுன்டன்ட். உலகின் மிகப்பெரிய கடத்தல் மன்னன்கள் கூட தங்கள் கணக்கு வழக்கில் ஏதேனும் சிக்கல் என்றால் “கூப்பிடுறா கிறிஸ்ஸை” என்பார்கள். எந்த இடத்தில், யார் தவறு செய்து பணத்தை ஆட்டையை போட்டார்கள் என்பதை ரோபோ சிட்டி வேகத்தில் சொல்லிவிடுவான் கிறிஸ். அப்படி ஒரு நிறுவனத்துக்கு கிறிஸ் அசைன்மென்ட் செல்கிறான். 

நல்ல லாபம் பெற்றுக்கொண்டிருக்கிறது அந்த ரோபாடிக்ஸ் நிறுவனம். ஆனால், பேலன்ஸ் ஷீட்டில் பணத்தைக் காணவில்லை. 15 வருட ரெக்கார்டுகளை ஒரே இரவில் புரட்டுகிறான் கிறிஸ். பணத்தை வழித்து எடுத்தவர் நிறுவனத்தின் சி.எஃப்.ஓ என நெருங்கும்போது, அவர் அவுட். மறுநாள், ஓனரே வந்து மீதி பணத்தைக் கொடுத்து “முடிச்சிக்கலாம்ப்பா” என்கிறார். ஆனால், எதையும் எடுத்துவிட்டால் முழுமையாக முடிப்பது ஹீரோ வழக்கம் ஆச்சே! விடாமல் தொடர்கிறார். அதனால் பல இடங்களில் இருந்து ஆபத்து அவரையும், நாயகியையும் தேடி வருகின்றது. எல்லாவற்றையும் சமாளிக்கிறான் கிறிஸ்.

கிறிஸ்ஸை டிரெஷரி ஏஜென்ட் ஒருவரும் தேடுகிறார். அவர் ஏன் தேட வேண்டும் என்பதையும், கிறிஸ் ஏன் இப்படி தவறான வழிகளுக்கு போனான் என்பதையும் நி...தா...ன..மா..க சொல்கிறார்கள். அந்த ஏஜென்டாக நடித்தவர் “விப்லாஷ்’ படத்தில் மிரட்டிய ஜே..கே.சிம்மன்ஸ் என்பதுதான் ஆறுதல்.

ஆட்டிசம் நோய் பற்றியும், அந்த குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றியும் சின்ன மெசெஜ் சொல்லி முடிக்கிறார்கள். அதற்காக நிச்சயம் பாராட்ட வேண்டும். “இந்த குழந்தைகள் அபார ஆற்றல் பெற்றவர்கள். ஆனால், அதை அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியவில்லை. அல்லது நம்மால் அவர்களைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை” என்ற விஷயம் பளார் என முகத்தில் அறைகிறது. எல்லோரும் கரையேற வேண்டிய சமயம் இது. சிறப்பு குழந்தைகளைக் கையாளும் நாமும் இன்னும் சிறப்பாக இருந்தே ஆக வேண்டும்.

அந்த நல்ல முடிவு தாண்டி படத்தில் ஸ்பெஷலாக தெரிவது பென் அஃப்லக் மட்டும்தான். பெரிதாக உணர்ச்சிகளை முகத்தில் காட்ட முடியாத கேரக்டர். ஆனால், அந்த “அமைதியான உடல்மொழியில்” கூக்குரல் எழுப்புகிறார். “தட்றா க்ளாப்ஸ” என மனதுக்குள் திமிறி எழுந்தாலும் நம்மையும் சைலன்ட் மோடிலே ரசிக்க வைத்தவருக்கு தரலாம் ஆயிரம் ஆஸ்கர்கள்.

ஒரு செம ஐடியாவை கூட, சுமாரான எக்ஸிக்யூஷன் சொதப்பிவிடும் என்பதற்கு அக்கவுன்டன்ட் ஒரு உதாரணம். நல்ல சினிமா எக்ஸ்பெர்ட்டை வைத்து இந்த அக்கவுன்டன்ட்டின் பேலன்ஸ் ஷீட்டில் எங்கு லீக் இருக்கிறது என ஆராய்ந்தால், திரைக்கதையை கை காட்டிவிடுவார். அதை அடைத்திருந்தால் மில்லியனில் நனைந்திருப்பான் அக்கவுன்டன்ட்.

அக்கவுன்டன்ட் சாதனையாளன் அல்ல; சாதித்திருக்க வேண்டியவன்.  

அடுத்த கட்டுரைக்கு