Published:Updated:

பைரவா'ல நடிக்கும் பப்ளியான பொண்ணு நான்'-றெக்க 'மாலா அக்கா' மகிழ்ச்சி! #VikatanExclusive

பைரவா'ல நடிக்கும் பப்ளியான பொண்ணு நான்'-றெக்க 'மாலா அக்கா' மகிழ்ச்சி! #VikatanExclusive
பைரவா'ல நடிக்கும் பப்ளியான பொண்ணு நான்'-றெக்க 'மாலா அக்கா' மகிழ்ச்சி! #VikatanExclusive

றெக்க படத்தில் "ஐ லவ் யூ மாலா அக்கா" என சின்னவயசு விஜய் சேதுபதி சொல்லுவதும், பின் அடியாட்களை பறக்கவிட்டு ஃபைட்டில் இறங்குவதும் இவருக்காக தான். படத்தில் வரும்  'கண்ணம்மா' பாட்டு மூலம் ஹீரோயினைவிட அதிகம் கவனம் ஈர்த்தார்.

 யாருடா அந்த மாலா அக்கா புதுசா இருக்காங்களேன்னு போயி பார்த்தா ஏற்கனவே அவங்க தமிழ்ல ரெண்டு படத்துல நடிச்சு நாம தான் கவனக்காம விட்ருக்கோம். சிஜா ரோஸ் என்னும் அந்த கேரளத்து பெண்ணுடன் ஒரு சிட்-சாட்.

"சிஜா ரோஸோட சினிமா என்ட்ரி எப்படி?"
நாலு வருஷத்துக்கு முன்னாடி 'உஸ்தாத் ஹோட்டல்'மலையாள படத்தில் துல்கருடைய அக்காக்கள்ல ஒரு அக்காவா நான் நடிச்சிருந்தேன். அதுக்கப்பறம் தமிழ்ல 'கோழிகூவுது'னு ஒரு படத்தில் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அடுத்ததா தமிழ்லயே  'மாசாணி'ன்னு ராம்கி சார் ஹீரோவா நடிச்ச ஒரு படத்தில் ஒரு ரோல் நடிச்சேன். நல்லா வேலை செய்தும் நம்மள யாரும் கவனிக்கலையோனு தோணுச்சு. 2 வருஷம் பிரேக்எடுத்துக்கிட்டு சினிமாவை பத்தி இன்னும் கத்துக்க ஆரம்பிச்சேன். அந்த அனுபவம் தான் இப்போ மாலா அக்கா ரூபத்தில் உங்க கிட்ட என்ன கொண்டு சேர்த்திருக்கு. 


"நீங்க உதவி இயக்குநரா வேற இருந்தீங்களாமே?"
ஆமா, சினிமால நடிகையாகணும்ங்கறது என்னோட ஐடியாவே இல்ல. அதுக்காக  நான் இங்க வரவும் இல்ல. சமீபத்துல மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்கின 'மிலி'(மலையாளம்), 'டிராபிக்' (ஹிந்தி)  படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அதுக்கு முன்னாடியே அன்வர் ரஷீத் சாரோட பல விளம்பரங்கள்ல வேலை பாத்துருக்கேன். மாஸ்  மீடியா மேல எனக்கு இருந்த ஆசைதான் அதுக்கு காரணம்.


"எங்க ஊருல 'மாலா அக்கா'க்கு ஏகபோக மரியாதைனு உங்களுக்கு தெரியுமா?"
படம் ரிலீசானப்போ சென்னை வரமுடியலைனாலும் அந்த கதாபாத்திரத்துக்கு இங்க கிடைச்ச வரவேற்பை பத்தி கேள்விப்பட்டேன். மாலா அக்கா என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு கதாபாத்திரம். படத்தோட இயக்குனர் ரத்தின சிவா சாருக்கும் பெர்சனலா அந்த கதாபாத்திரம் ரொம்ப முக்கயமான ஒன்னு."மாலா அக்கா, ஐ லவ் யூ"னு படத்தைப் பார்த்த ரசிகர்கள் சாருக்கு மெஸேஜ் பண்றாங்கன்னு அவர் சொன்னார். ரொம்பவே சந்தோஷமா இருந்தது. எனக்குமே ட்விட்டர்,ஃபேஸ்புக் மூலமா ரசிகர்கள் பாராட்டையும் அன்பையும் தெரிவிச்சாங்க. அவங்க எல்லாருக்குமே என்னுடைய நன்றி.


"ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம்லாம் எப்படிஇருந்ததது? மக்கள் செல்வன் என்னசொன்னார்?"
நான் பண்ணது கொஞ்சம் சீரியஸான ரோல்ங்கிறதுனால கட் சொன்னதுக்குப் பிறகும் கூட சிரிக்க நேரம் இருக்காது.சீரயஸான மூட்லயே தான் ஷூட்டும் போச்சு. அதனாலேயே அந்த கேரக்டருக்கு தேவையான விஷயங்களை ஸ்க்ரீன்ல கொண்டு வரவும்முடிஞ்சுது. விஜய் சேதுபதி சார் கூட ஒர்க் பண்ணது ரொம்பவே கம்பர்டபிளா இருந்தது. என்னோட நடிப்பை கவனிச்சுட்டே இருந்து அடிக்கடி பாராட்டுவார். எப்பிடி நடிச்சா நல்லாருக்கும்னு சில ஆலோசனைகளும் சொல்லுவார்.


"உதவி இயக்குனர் - நடிகை ரெண்டுல எதுபிடிச்சிருக்கு? எது நல்லாருக்கு?"

என்னால ரெண்டையும் ஒப்பிட்டு பாக்கமுடியல. ரெண்டுமே சுத்தமா வேற வேறவிஷயங்கள். ஆனா, நடிகையா இருக்கறத விட இயக்கத்தில் இருக்கறது இன்னும் கொஞ்சம் சிரமமான வேலைதான். நாள் பூரா நிக்காம ஓடிட்டே இருக்கணும்னாலும் அப்படி சமயத்துல தான் நடிகர்களோட நடிப்பை பக்கத்துல இருந்து உன்னிப்பா கவனிச்சு நிறைய கத்துக்கிட்டேன். மத்தபடி இயக்கம் நடிப்பு ரெண்டுமே ரெண்டு கண்ணு மாதிரி. எது வேணும்னு கேட்டா நிச்சயமா ரெண்டுமே வேணும்னு தான் சொல்லுவேன். 


 

"குடும்பம், படிப்பு  பத்தி சொல்லுங்க. அப்பா அம்மா என்ன சொல்றாங்க?

அப்பா அம்மாக்கு நான் ஒரே பொண்ணு. அப்பா 'ஓமன் டெயிலி நியூஸ்பேப்பர்'ல ரிப்போர்ட்டரா இருக்காங்க. அம்மா இல்லத்தரசி. பள்ளி படிப்பை மஸ்கட்ல முடிச்சேன். மாஸ் மீடியால இளங்கலையும், ஜர்னலிசத்தில் முதுகலையும் முடிச்சேன். அடிப்படையில நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். அதனால எனக்கு கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல இயல்பாவே ஆர்வம் அதிகம். அதே மாதிரி நான் ஒரே பொண்ணா இருக்கறதுல வீட்டுல இருந்து என்மேல நிறைய எதிர்பார்ப்புகளும் இருந்தாலும் என் அப்பா அம்மா என் வருங்காலத்தை என் இஷ்ட்டப்படி விட்டுட்டாங்க. அவங்களுக்கு பிடிச்சதை நான் செய்யணும்னு என்னை வற்புறுத்தாதது என்னோட பெரிய அதிர்ஷ்டம்.


"கைவசம் எத்தனை படங்கள் வச்சுருக்கீங்க?நடிக்க போறீங்களா இல்ல இயக்கப்போறீங்களா?"
இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். நான் என் வாழ்க்கைல எதுமே பிளான் பண்றது கிடையாது. இதுவரை  நான்  பிளான் பண்ணது நடக்காம சம்பந்தமில்லாதது நடந்ததும் அதுக்கு காரணம். வருங்காலத்துல மாலா அக்கா மாதிரி நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கணும்கிறதுதான் இப்போதைக்கு என்னோட ஆசை. இப்போதைக்கு இளைய தளபதி விஜயோட அடுத்த படமான 'பைரவா'ல ஒரு முக்கியமான கதாபாத்திரம் பண்றேன். தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.


"நாங்க படத்துல பார்த்த மாலா அக்கா நெஜத்துல எப்படி?அப்பாவியான பொண்ணா இல்ல அதகளம் பண்ணுற பொண்ணா?"
பயணப்பட  ரொம்ப பிடிக்கும். சாப்பாடு விஷயங்கள்ல ரொம்பவே ஆர்வம் அதிகம். நீங்க படத்துல பார்த்த  மாதிரி நெஜத்துல நான் ரொம்பவே அப்பாவியா இல்லனாலும்  அப்பாவி பாதி  ஜாலி பாதி கலந்து செய்த கலவை நான். வருங்காலத்துல உதவி இயக்குநரா நான் கத்துகிட்ட விஷயங்களை வச்சு ஒரு படம் இயக்கணும்னு ஆசை இருக்கு. இருந்தாலும் நான் முன்னாடியே சொன்ன மாதிரி எதையும் பிளான் பண்ணிக்கிறதில்ல. அதனால கூலா இருக்கேன்.

                                                                                                               -லோ.இந்து