Published:Updated:

அது ஆச்சு 21 வருஷம்...! #DDLJ

அது ஆச்சு 21 வருஷம்...! #DDLJ
அது ஆச்சு 21 வருஷம்...! #DDLJ

இந்த படம் இந்திய சினிமாவின் மைல்கல்களில் ஒன்று. தொடர்ந்து 1009 வாரங்கள் ஒட்டிய திரைப்படம். அபிதாப்,தர்மேந்திரா,போன்றவர்கள் நடித்திருந்த 'ஷோலே' படம் இந்திய சினிமாக்களில் அதிக நாள் ஓடி சாதனை படைத்திருந்த நிலையில், அந்த படத்தை அசால்ட்டாக சைடு வாங்கியது ஷாருக்கான் - கஜோல் நடிந்திருந்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படம். 

ஆண் பெண் என இரண்டு என்.ஆர்.ஐ இந்தியர்கள் ஒருவர் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர், அந்தப் பெண்ணோ தாம் விரும்பும் ஒருவரை இந்திய கலாச்சாரத்தோடு இணைந்தவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார், இரன்டு பேரும் ஒரு பெரிய ரயில் பயணத்தில் தனியாக பயணிக்கும் கட்டாயம். அதன் பின் என்ன ஆகிறது என்பது கதை.

எவர் க்ரீன் பாடல்கள் கொண்ட "தில்வாலே துல்கனியா லே ஜாயாங்கே" இந்தி சினிமா கொண்டாடிய மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று. அந்த திருவிழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம்தான் முடிந்தது.  

ஆதித்யா ஷோப்ராவின் இயக்கத்தில் யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் வெளியானது. இசையமைப்பாளர்கள்  ஜாதின் லலித் இணைந்து அமைத்த இசைதான் படத்தின் உயிர்நாடியே. இந்த படத்தின் டிட்பிட்ஸ்கள் சில 

* இதில் ஐரோப்பிய ட்ரிப் முழுவதும் ஷாருக்கான் அணிந்திருக்கும் லெதர் ஜாக்கெட்டை வாங்கிய இடம் அமெரிக்காவின் கலிபோர்னியா. இதன் தயாரிப்பாளர் யஷ் சோப்ரா தனக்காக வாங்கிய இந்த ஜாக்கெட் 400 டாலர் மதிப்புள்ளது. தனக்கு பொருந்துகிறதா என போட்டு பார்த்த ஷாருக் தாம் இதனை போட்டே நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம். பிரபல பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தயாரிப்பு இது. 

*  இந்த தலைப்பை வைத்தது இயக்குநர் ஆதித்யாவோ, தயாரிப்பாளர் யஷ் சோப்ராவோ இல்லை. இந்த படத்தில் ஷாருக்கானின் அப்பாவாக நடித்த அனுபம் கெர்ரின் மனைவி கிரன் கெர்தான் படத்தின் கதையை கேட்டுவிட்டு " பையன் வந்து பொண்ணை கூட்டிட்டு போவான்" அதானே கதை என இயக்குநர் ஆதித்யாவிடம் சொல்ல அதையே டைட்டிலாக   வைத்தாராம் அவர் .

* இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு 'நோ' சொல்லியிருக்கிறார் ஷாருக். 20 வயசுப்பையன் கேரக்டருக்கு தான் செட்டாக மாட்டேன் ( அப்போது 30 வயது ) என தெரிவித்துள்ளார். மேலும் நெகட்டிவாக, தக் (Thug) கேரக்டரில் நடிக்கும் ஆசையில் இருப்பதாக யஷ் சோப்ராவிடம் அப்போது தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பந்து சையிப் அலி கானிடம் போயிருக்கிறது. ஷாருக்கே மறுத்த சப்ஜெக்ட் என அவரும் பின்வாங்க,அப்போது பார்த்து கஜோலின் கால்ஷீட் கன்பார்ம் ஆகியிருக்கிறது. தன் நடிப்பு போட்டிக்கு சரியான ஆள் என ஷாருக் ஒப்புக்கொண்டுவிட்டார். 

*கஜோல்,ஐரோப்பா, ரயில் ட்ரிப் என படமுழுக்க ஜாலியாக நடித்தாலும் ஷாருக்கிற்கு ஏனோ பெரிய நம்பிக்கையில்லாமலேதான் இருந்துள்ளார். அந்த சமயங்களில் அளித்த பேட்டிகளில் கூட நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் பத்தோட பதினொன்றாகத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படம் முடிந்து பர்ஸ்ட் காப்பி பார்த்து முடித்தவுடன் எழுந்து இயக்குநரை கட்டிப்பிடித்துக்கொண்டு "இதுதான் என் தீவார்" ( 'தீவார்' என்பது அமிதாப்பின் "தில் வாலே துல்கனியா) என சத்தமாக தெரிவித்துள்ளார். சொல்லியபடி வெற்றிகளை குவித்தது. 

* ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் திடீரென அனுபம் கெர் ஆதித்யாவிடம் நேரடியாக சென்று எனக்கு அம்ரிஷ் பூஜாரி ரோல் கொடுங்கள் அவருக்கு ஏன் இவ்வளவும் முக்கியமான ரோல் கொடுத்தீர்கள் என சண்டையிட்டுள்ளார். "நீங்கள் நடிப்பதாக இருந்தால் நடியுங்கள் இல்லையென்றால் வேண்டாம். கஜோலின் தந்தையாக அம்ரிஷ்தான் நடிக்கிறார் இதை கதை எழுதும் போதே முடிவு செய்து விட்டேன்" என கட் அன் ரைட்டாக தெரிவித்துவிட்டாராம். அப்புறமென்ன அனுபம் மீண்டும் ஷாருக் அப்பாவாக நடிக்கப்போய்விட்டார். 

* இந்திய சினிமாக்களில் முதன் முதலில் "படம் உருவானது எப்படி" என்கிற ஆவணப்படம் வெளியானது இதற்குத்தான். இந்த படத்தின் உதவி இயக்குநர்களாக ஆதித்ய சோப்ராவின் தம்பி உதய் சோப்ராவும் , இன்றைய தயாரிப்பாளரும் நடிகருமான கரண் ஜோகரும் வேலை செய்தனர். நடிகராக கரண் ஜோகருக்கு இதுதான் முதல் படமும் கூட. 

* மேற்படி பாடல் காட்சியில் ஷாருக்கானும் கஜோலை கிழே போடும் காட்சி வரும். உண்மையில் இயக்குநரும் ஷாருக்கும் பேசி வைத்த ஒன்றுலானால் அது கஜோலுக்கு தெரியாது. எனவே கீழே போட்டவுடன் கஜோலின் கோபம் மிக இயல்பாய் இருக்கும் 

இவ்வளவு விஷயமும் தெரியற காரணமா இருந்தது இந்த அக்டோபர் 20-தான். சரியா 21 வருஷசத்துக்கு முன்னாடி இதே நாள்தான் இந்தப்படம் வெளியாகியது. அப்புறமென்ன போடுறா டேக்கைன்னு இந்திய அளவில் ட்ரெண்ட் பண்ணிட்டாங்க 'பாலிவுட் பாஷா'வின் ரசிகர்கள். நம்மளும் ஒரு வாழ்த்தை சொல்லிவைப்போம்.

-வரவனை செந்தில்


 


  

அடுத்த கட்டுரைக்கு