நாலு பேரு நாலு விதமா பேசுறாங்க..! அஜித் பட வில்லன் இவராம்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய் நடிக்கிறார். தகவல் தெரிந்ததும் இவர்களின் ரியாக்‌ஷன்!

'மங்காத்தா' மணி :

தலயின் 57 -வது படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கப் போகிறார். எந்த மொழியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நம்ம தல முன்னாடி எல்லோரும் டம்மி பீஸுதான். தலதான் எப்பயுமே மாஸு. தலயின் அடுத்த படத்தில் டாம் க்ரூஸே வில்லனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கெனவே, 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு நம்ம தலயை அணுகினார்கள். தற்போது தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டதால், அந்த முயற்சியைக் கைவிட்டிருக்கிறார்கள். தலயின் மாஸ் சரவெடி தொடரும். #BlackBusterThala57 #மங்காத்தா டாவ்வ்வ்!

 

ஒப்பீனியன் ஒலகநாதன் :

விவேக் ஓபராய் நடிக்கிறதெல்லாம் ஓகே. ஆனா 'மங்காத்தா' படத்துல அர்ஜூன்தான் ஹீரோ தெரியுமா?, 'என்னை அறிந்தால்' படத்துல அருண்விஜய் மட்டும் இல்லைனா அவ்வளவுதான் தெரியுமா?னு ஹீரோக்கள் வில்லன் வேஷம் போட்டாலே அது மொக்கையா இருந்தாலும், செமயா இருக்குல்லனு தூக்கி வெச்சுக்கிட்டு கொண்டாடுற ஒரு குரூப் இந்தப் படத்தைப் பாத்துட்டு என்ன சொல்லப் போகுதோனு நினைக்கும்போதுதான் கொஞ்சம் பயந்து வருது! 

 

பிளாக் கபூர் :

ஐஸ்வர்யா ராய் கூட கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகராதான் முதல்ல விவேக் ஓபராயைத் தெரியும். சுனாமியால தமிழ்நாடு பாதிக்கப்பட்டப்போ கடலூர்ல வந்து தங்கி மக்களுக்கு உதவு பண்ணினப்பவும், அவரோட அம்மா யசோதரா சென்னைக்காரங்கனு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவர் மேல மரியாதை கன்னாபின்னான்னு அதிகமாகிடுச்சு. 'ரத்த சரித்திரம்' படத்துலேயே வில்லத்தனமான கேரக்டரை அசால்ட்டா பண்ணிருப்பார். அருண்விஜய்க்கு எப்படி 'என்னை அறிந்தால்' படம் ஒரு திருப்புமுனையா இருந்துச்சோ, அதே மாதிரி விவேக் ஓபராய்க்கு இந்தப் படம் இருக்கும். ஏன்னா 'தல' ராசி அப்படி!

 

'சுறா' சுராஜ் :

இப்போதான் வில்லன் யாருங்கிற நியூஸே வந்திருக்கா? அப்போ 'தலயின் புல்லட் ரயில் வேக நடனம்', 'ஜேம்ஸ்பாண்ட் படங்களை மிஞ்சும் சண்டைக்காட்சிகள்', 'படக்குழுவினருக்கு பிரியாணி செய்து போட்ட அஜித்' , ' விவேக் ஓபராயை போட்டோ எடுத்த தல' நியூஸெல்லாம் எப்போடா வரும்? இப்படியே மசமசனு இருக்காமல் சீக்கிரம் டீசரையாவது ரிலீஸ் பண்ணுங்கய்யா. மீம் போடணும். மங்காத்தாடா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!