Published:Updated:

நயன்தாரா போன் எப்போ கிடைக்கும்? #1YearOfNRD

நயன்தாரா போன் எப்போ கிடைக்கும்?   #1YearOfNRD
நயன்தாரா போன் எப்போ கிடைக்கும்? #1YearOfNRD

நயன்தாரா போன் எப்போ கிடைக்கும்? #1YearOfNRD

கொஞ்சம் கமர்ஷியலாகவே போய்க்கொண்டிருந்த அனிருத்தை மீட்டுக் கொடுத்த படம்... “ஃப்ரெண்ட்ஸுக்காக” என மட்டுமே நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு பூஸ்ட் தந்த படம்...”நீ திரும்ப ரேடியோவுக்கே போயிடு சிவாஜி” என சோஷியல் மீடியாக்கள் கலாய்க்க தொடங்கியபோது ஆர்.ஜே.பாலாஜியை ஆங்க்கர் அடித்து நிறுத்திய படம்... போடா போடி என்ற தோல்வியை தாண்டி வர விக்னேஷ் சிவனுக்கு உதவிய படம்... கம் பேக்கில் ஷைன் ஆகிக்கொண்டிருந்த நயனை உச்சாணியில் கொண்டு நிறுத்திய படம்.

ஒரு மாத்திரை.. எல்லாமே சரியாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போல அத்தனையையும் செய்து முடித்த படம்.. நானும் ரெளடிதான். சென்ற ஆண்டு இதே நாளில் நானும் ரவுடிதான் வெளியானபோது அவ்வளவு சத்தம் இல்லை. இரண்டே நாட்கள்தான். காதும்மாவின் காதுக்கே கேட்கும்படி அரங்குகளில் சிரிப்பு சத்தம் டாப் டெசிபலில் எகிறியது. அப்படி என்ன என்ன ரசித்தோம் இந்தப் படத்தில் என யோசித்தபோது...


1) மீசையில்லா விஜய் சேதுபதி. நல்ல நடிகன், ஆனா குட்டி குட்டி ரோலில் பார்த்து பார்த்து ரசிகன் லேசாக சோர்வடைய ஆரம்பித்த போது வந்த அந்த ஃப்ரெஷ் லுக்...நிஜமாகவே அவவ்ளவு ஃப்ரெஷ்.  'நானும் ROWDY  தான்’னு சொல்றோம். கொஞ்சம் மாஸா எதிர்பார்ப்பாங்க. மீசை, தாடி இல்லாம அமுல் பேபி மாதிரி இருந்தா நல்லா இருக்குமா? இப்பக்கூட ஒண்ணும் மோசம் போகலை. மீசை-தாடி போயிட்டா வராது விக்கி’னு கதறிய விஜய் சேதுபதியை மிரட்டியே காரியம் சாதித்திருக்கிறார் இயக்குநர். 


2) நயன்.. ஒரு டெஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர். அப்போது நயனுக்கு வயது அதிகம் என்பது அர்னால்டுக்கே தெரிந்த விஷயம். அந்த வுமன் லுக்கில் இருந்து கேர்ள் லுக்குக்கு நயனை மாற்ற நினைத்தார். எந்த சவால் கொடுத்தாலும் நரசிம்மா கேப்டன் பாணியில் “நெக்ஸ்ட்” என கேட்டு மிரட்டி இருக்கிறார் நயன். கெட் அப் சேஞ்ச், நடிப்பு என எல்லா சவால்களையும் கொடுத்த இயக்குநர் கடைசியாக கொடுத்த சேலஞ்சில் மட்டும் தான் நயன் அவுட். அது என்ன சேலஞ்ச்ன்னு நாம சொல்லவும் வேண்டுமா?


3) ஆர்.ஜே.பாலாஜி. அந்த வேட்டியும், வரிக்கு வரி அடித்த காமெடி லூட்டியும் ஆர்.ஜே பாலாஜியை ஆண்டிப்பட்டி வரை கொண்டு சேர்த்தது. ரேடியோவில் ஹிட் அடித்த ராங் கால் மேட்டரோடு தொடங்கிய காமெடி தர்பார் க்ளைமேக்ஸ் வரை கொண்டு சேர்த்ததில் அண்ணாரின் பங்கு அவ்வளவு. அதுவும் அந்த “ஆம்பிளை...ஆம்பிளை” பன்ச்சை மறக்க முடியுமா? முதல் முறையாக திரைப்படங்களுக்காக அவருக்கு விருது வாங்கி கொடுத்ததும் இந்தப் படம் தான். 


4) பப்பம்ம்ம்..பப்பம்ம்ம்.. பப்பம்ம்ம்..நானும்ம் ரவுடிதான். படத்தின் ஆகப்பெரிய தாதா அனிருத்தான். ரகளையான மெட்டுக்கள், ரசிக்கத்தக்க கம்போசிஷன் என இதில் அனிருத் நடத்தியது இசைப்போர். மெலடி முதல் மேஷ் அப் வரை ஒவ்வொரு பாட்டும் உலக லெவல் ஹிட். யுட்யூப் வியூஸ் கணக்கை பார்த்தால் வொண்டர்பார் அதற்காக கட்டிய வரியே படத்தின் பட்ஜெட்டை தாண்டும் எனும் அளவிற்கு இருக்கிறது. 

5) பார்த்திபன் : அல்வா கேரக்டர். விடுவாரா மனுஷன்? வில்லத்தனமும், காமெடியும் பீட்ஸாவும் கெட்ச் அப்புமாக கலோரிகளை அள்ளினார்.

6) ஆனந்தராஜ்... ரேப் சீன்களுக்கும், ரத்தம் தெறிக்கும் அடிதடிக்குமே இவரை பார்த்து பழகிய கண்களுக்கு காமெடி புதுசுதான்.மொட்டைத்தலையில் வழிய வழிய காமெடியை கொண்டு வந்து அதகளப்படுத்தியிருந்தார் ஆனந்த்ராஜ்.. “ அவன் கை காட்டுறத பாருங்கப்பா” என்ற அந்த ஒரு ரியாக்‌ஷன் ஓராயிரம் மீம்களுக்கு சோர்ஸ். 

7) ராகுல் தாத்தாவை மறந்துவிட்டு இந்தப் படத்தை பற்றி எழுதினால் நம் ட்விட்டர் அக்கவுன்ட்டை பிளாக் பண்ணிவிட்டு போக வேண்டியதுதான். அத்தனை பேர் அடிக்க வந்துவிடுவார்கள்.லவ் யூ தாத்தா

8) ரோஜா பூமாலை, மீ மீ ராதிகா என இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள்... ஆனால், இந்த எல்லா விஷயங்களையும் தாண்டி நானும் ரவுடிதான் என்றவுடன் என் நினைவுக்கு வரும் ஒருவர் உண்டு.. எப்போது நினைத்தாலும் முகத்தில் ஒரு சின்னப்புன்னகையை கொண்டு வந்து விடும் அவருக்கு கோடான கோடி நன்றி... டேய்...ரெட் டீ ஷர்ட்!

நயனின் ஃபோனை வைத்துக் கொண்டு விஜய் சேதுபதி ஆடிய ஆட்டம் அத்தனை சுவாரஸ்யம். சீக்கிரம் செகண்ட் சீக்வலோ, ப்ரிகுவலோ எடுத்துடுங்க பாஸ். காதும்மாவை காண காத்து கெடக்கோம்.

-கார்க்கிபவா

அடுத்த கட்டுரைக்கு