Published:Updated:

மகிழ்ச்சி கதிரேசன்... நெகிழ்ச்சி ஜீவா... இட்லி கம்யூனிசம்! #2yearsofKaththi

மகிழ்ச்சி கதிரேசன்... நெகிழ்ச்சி ஜீவா... இட்லி கம்யூனிசம்! #2yearsofKaththi
மகிழ்ச்சி கதிரேசன்... நெகிழ்ச்சி ஜீவா... இட்லி கம்யூனிசம்! #2yearsofKaththi

மகிழ்ச்சி கதிரேசன்... நெகிழ்ச்சி ஜீவா... இட்லி கம்யூனிசம்! #2yearsofKaththi

21.10.2014.
இரவு 10மணி.
சத்யம் தியேட்டர்.

 கண்ணாடிகள் உடைந்து சிதறின.ரசிகர்களை கண்ட்ரோல் செய்ய பழகிய ஊழியர்களுக்கு பெட்ரோல் குண்டுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. காரணம், கத்தி படத்தை வெளியிட கூடாது என போராட்டங்கள்.

தனது ஆதர்ச நாயகனின் படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கமாக நடப்பதுதான்.ஆனால், படமே வருமா வராதா என காத்திருக்க வேண்டிய சூழல் எல்லாம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை என தமிழ் சினிமாவில் எதிர்ப்புகளை சந்தித்து வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள் சில உண்டு. அதில் முக்கியமான வரவு கத்தி.

சென்னை நகரின் முக்கிய இடங்கள் செய்தித்தாளாக மாறி,முடிவில் அது விஜயின் முகமாக மாரும் அந்த முதல் மோஷன் போஸ்டரிலே தனக்காக அடையாளத்தை பெற ஆரம்பித்தது கத்தி. துப்பாக்கியில் விஜயை ஸ்டைலாக காட்டி கிளாஸ் ஹிட் அடித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அப்போதுதான் இளசுகளின் மனசில் பச்சக் என ஒட்ட ஆரம்பித்த அநிருத் என கத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அத்தனையும் விஜய் என்ற ஒற்றை தூணின் மேல் ஏறி நின்ற போது வேற லெவலில் ஜொலித்தன.கத்தி படத்திற்காக ஆண்ட்ராய்டு கேம் கூட வெளியிட்டார்கள்

ரீமேக் அதிகம் செய்கிறார் என்ற விஜயின் இமேஜின் மீது கருப்புபெயிண்ட் அடித்தது கத்தி. தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் ரீமேக் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாவா லேங்குவேஜ் மட்டுமே பாக்கி.

ஜீவானந்தம் நெகிழ்ச்சி; கதிரேசன் மகிழ்ச்சி என டபுள் தமாக்கா விஜய். ஆங்காங்கே லேசாக நரைத்த தாடியுடன் ஜீவானந்தமாக அசத்தியிருந்தார். கதை செட் ஆனால், எல்லா கேரக்டருமே பக்கா சொக்கா என விஜய் சொல்லியடித்த படம் கத்தி.

மகிழ்ச்சி கதிரேசன் இடைவேளை காட்சியில் ஜீவாவை பற்றி தெரிந்து நெகிழ்வதும்,க்ளைமேக்ஸில் குழாயில் இருந்து வெளிவரும் கதிரேசனை பார்த்து நெகிழ்ச்சி ஜீவானனந்தம் மகிழ்வதும் இரண்டு எக்ஸ்ட்ரீம் விஷயங்கள். தனக்கே உரிய ஸ்டைலில் பாடி லேங்குவஜிலே பேசி விளாசியிருப்பார் விஜய். தன்னூத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதும் ஒவ்வொரு வீடாக சென்று ஜீவா அழும் காட்சியில் வழக்கமாக விஜய் அழுகை காட்சிகளில் ஆங்காங்கே கேட்கும் கிண்டல் சத்தங்களை கத்தி தியேட்டரில் கேட்க முடியவில்லை. அது நடிகராக விஜய்க்கு கிடைத்த டபுள்புரமோஷன்.

படத்தின் முதல் 45 நிமிடங்கள் தந்த சோர்வை அதன் பின் ஈடு கொடுத்து மாற்றியது திரைக்கதை. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து என்ன பேசினால் எடுபடும் என தெரிந்து சமூக அக்கறையோடு எடுத்த முருகதாஸுக்கு அத்தனை அப்ளாஸையும் அர்ப்பணிக்கலாம்.

கத்தியின் ஹைலைட்ஸை விரிவாக பேசுவதை விட இந்த வேர்டு கிளவுட் சொல்லும் விஷயங்கள் போதும். ஒவ்வொரு வார்த்தையும் பல சுவாரஸ்யங்களை நினைவுப்படுத்தும். அந்த ஒவ்வொரு ஆச்சர்யமும் கட்டிய அழகிய மாலைதான் கத்தி.

இன்னொரு ஜீவானந்தத்தை விஜயிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அவர் ஸ்டைலிலே சொல்லப்போனால், I am waiting.


-கார்க்கிபவா

அடுத்த கட்டுரைக்கு