Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் சினிமாவின் டப்பாசு மொமன்ட்ஸ்! #AdvanceDiwaliFolks

தீபாவளின்னா பட்டாசு வெடிச்சு மாஸ் காட்டுறது நம்ம கெத்து. தமிழ் சினிமால இதே பட்டாசைப் பயன்படுத்தி, எப்படியெல்லாம் மாஸ் காட்டி மிரட்டிருக்காங்கன்னு பார்ப்போமா!

 

 

  • எதையுமே கொஞ்சம் வித்தியாசமா செய்றவர் பாக்கியராஜ். 'ருத்ரா' படத்துல கோமாளி வேஷத்துல போய் பேங்கைக் கொள்ளையடிச்சிட்டு, பண்டல் பண்டலா இருக்குற பட்டாசைப் பத்தவச்சுட்டு வயசான கெட்டப்ல வெளிய வருவார். கடத்தல்காரங்க துப்பாக்கியால சுட்றதா சொல்லி, தமிழக காவல்துறையைத் திசை திருப்பித் தப்பித்தது மாஸ்டர் ப்ளான்!

 

 

  • சுறா படத்துல விஜய் என்ட்ரி ஆகுற சீன் மாஸ்ன்னா... வில்லனோட கள்ளக்கடத்தல் பொருட்களை சிங் வேசத்துல போய் கடத்துற சீன் மரண மாஸ்! ராக்கெட் வெடிய, ராக்கெட் லாஞ்சர் மாதிரி வெப்பனா யூஸ் பண்ணலாம்ன்னு புது ட்ரெண்ட்டே படைச்ச காட்சி அது!

  • திருப்பாச்சி பட க்ளைமேக்ஸ்ல ரவுடியிசம் பண்ற மெயின் வில்லனைக் குத்திக் கொல்லும்போது, இதோட ரவுடியிசம் முடிஞ்சதுன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக ஹேப்பி நியூ இயர்னு பின்னாடி பட்டாசு வெடிக்க வச்சிருப்பார் இயக்குநர் பேரரசு. அடுத்த படத்துக்கு சிவகாசின்னு பேர் வைக்கற அளவுக்கு இவருக்கும் பட்டாசுக்கும் முன்ஜென்ம பந்தம். லார்ட் சிவாவோட குடும்பம் ஞானப்பழத்தால பிரிஞ்சதுன்னா, சிவகாசி படத்துல பட்டாசு வெடிச்சதுல குடும்பமே பிரியும். ப்ச்!

 

 

  • ஜனகராஜ் சிகரெட்ன்னு நினைச்சு பட்டாச வாய்லவச்சு பத்தவைக்கற காமெடி(!!!) சீன் ஞாபகம் இருக்கா? அது சிகரெட் இல்ல பட்டாசுன்னு சுத்தி நின்னவங்கள்ல ஒருத்தராவது சொல்லிருந்தா நாமளும் அந்தக் கொடூரமான  காட்சியில் இருந்து தப்பிச்சிருக்கலாம். ப்ச்!

 

 

- கருப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்