Published:Updated:

பாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி

பாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி
பாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி

பாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி

லவ்... ரிலேஷன்ஷிப்... பிரேக் அப் என பாலிவுட்டுக்கு பழக்கப்பட்ட ரூட்டிலேயே இன்னொரு வெர்ஷன் காதலை கரண் ஜோகர் காட்டியிருக்கும் படம் தான் 'ஏ தில் ஹை முஷ்கில்'

எம்.பி.ஏ படிப்புக்காக லண்டன் வரும் அயான் (ரன்பீர் கபூர்) பப் ஒன்றில் அலிஸேவை (அனுஷ்கா சர்மா) சந்திக்கிறார். இருவரும் தங்களின் ஃபேமிலி, லவ் ப்ரேக்கப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். காதல் இல்லை வெறும் நட்பு தான் என அனுஷ்கா சொன்னாலும் ரன்பீருக்கு அனுஷ்கா மேல் காதல். பழைய காதலர் அலி (ஃபவத் கான்) திரும்பி வந்ததும் ரன்பீருக்கு டாட்டா சொல்லி அனுஷ்கா திருமணம் செய்து கொள்கிறார். அந்த சமயத்தில் என்ட்ரி ஆகி ரன்பீருடன் பழகி அவர் மேல் காதலில் விழுகிறார் கணவரை விவாகரத்து செய்த சாபா (ஐஸ்வர்யா ராய்). இந்த நால்வரின் காதல், நட்பு, அழுகை, காதல் ஃபீலிங்குகள் தான் மீதிக் கதை.

கரண் ஜோகருக்கு ரொம்ப பழக்கப்பட்ட ரொமான்ஸ், பிரேக்கப் களம், இதுவரை பாலிவுட்டில் பார்த்து பார்த்து சலித்த அதே ரிலேஷன்ஷிப் பிரச்சனைகள் தான் கதை. டீத்தூள் அதே தான். ஆனால் ரன்பீர், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய் என போர்டுக்கு புதுப் பெயிண்ட் அடித்திருக்கிறார் கரண். 

மிகவும் குழந்தை மனசுக்காரப் பையனாக, ஒவ்வொரு விஷயத்துக்கு வீதியில் புரண்டு அழுது புலம்புவது, 'ஏன் உனக்கு என் மேல காதல் வரல?' என அனுஷ்காவை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதுமான கதாப்பாத்திரம் ரன்பீருக்கு. 'என் வாழ்க்கைல எல்லாத்தையும் விட நீ தான் முக்கியம். ஆனா, உன்ன நான் லவ் பண்ணல' என ரன்பீருக்கு தன் உணர்வைப் புரியவைக்க முயற்சி செய்யும் ரோல் அனுஷ்கா சர்மாவுக்கு. மிகவும் தெளிவான எழுத்தாளர் பாத்திரம் ஐஸ்வர்யா ராய்க்கு. படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களான இந்த மூவரின் பெர்ஃபாமென்ஸ் தான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். குறிப்பாக ரன்பீர், அனுஷ்கா சர்மாவின் திருமணத்துக்கு செல்லும் காட்சிகள் அத்தனை அழகு.

இன்னொரு ஸ்பெஷல் படத்தின் வசனங்கள். ஐஸ்வர்யா ராயின் முன்னாள் கணவராக வரும் ஷாரூக் கானிடம் (அலியா பட்டும் ஒரு கேமியோ பண்ணியிருக்காங்க பாஸ்) ரன்பீர் 'எப்பிடி நீங்க இவங்க வேணாம்னு சொன்ன பின்னால கூட லவ் பண்றீங்க? அது உங்கள வீக் ஆக்கிடாதா? எனக் கேட்பார். 'அது தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் விஷயம், எதையும் எதிர்பார்க்காத காதல்... காதலைக் கூட. எனக்கே எனக்குனு மட்டும் அந்தக் காதல் இருக்கும்’ என்பார் ஷாரூக். 'திடீர்னு உங்க கன்னத்தில் யாராவது அறைஞ்சா எப்படி இருக்கும், அந்த அறை தான் காதல்', 'நாம யாரைக் காதலிப்போம்னு நாம முடிவு எடுக்க முடியாது. ஆனா, அந்த லவ்ல இருந்து வெளிய வரணும்னு தோணுச்சுனா, வெளிய வர்றதுக்கான முடிவ எடுக்க முடியும்', 'காதல் ஒரு உணர்வு.. ஆனா, நட்பு அமைதி .நமக்குள்ள இருக்கும் அமைதிய நான் என்னைக்கும் இழக்க விரும்பல' இப்படி படம் முழுக்க எக்கச்சக்க காதலுக்கான தெளிவுறை வசனங்கள். ஆனால் அதுவே தான் அலுப்பையும் தருகிறது.

படம் முழுக்க காதல் பற்றி ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விளக்கம் செல்வது, கடைசியா என்ன சொல்ல வர்றீங்க? பேய் இருக்கா இல்லியா, இல்ல அதுக்கு எதாவது அறிகுறி இருக்கா? என கேள்வி கேட்க வைக்கிறது. அதிலும் கடைசி ட்விஸ்டாக கேன்சரை நுழைத்து கேசரி கிண்டுவது அநியாயம் ப்ரோ. ப்ரீத்தம் இசையில் எல்லா பாடல்களும் பின்னணி இசையும் அள்ளுகிறது.

இந்த மனசு தான் எவ்வளவு கஷ்டமானது என்பதை சொல்லவந்து ஜாங்கிரி சுத்தி குழப்பியடிக்கும் கதை தான் அவ்வ்வ் ரகம், மத்தபடி வீ ஃப்ரெண்ட் யூ" கரண் ஜோகர்.

அடுத்த கட்டுரைக்கு