நாலு பேரு நாலுவிதமா பேசுறாங்களே பைரவா! #Bairavaa

பைரவா படத்து டீசர் வந்துருச்சு. நாட்டுல என்ன நடந்தாலும் சோசியல் மீடியாவுல வந்து கம்பு சுத்துறதுதானே உலகவழக்கம், டீசரை மட்டும் விடலாமா? இதைப்பத்தியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது!.

 


@புலி புவனேஷ்: இளைய தளபதி என்ட்ரி சீன்லயே தண்ணிய தெறிக்க விட்றது எதுக்கு தெரியுமா? இந்தப் படம் மூலமா வசூல தெறிக்க விடப்போறததான் குறியீடா அப்படி சொல்றார் இயக்குநர். அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான்னு சொல்லிட்டுத் திரியுறவங்களுக்குத்தான்... விஜய் சொல்ற அந்த 'விளையாடலாமா?' டயலாக். தலைவர் இந்த டீசர்ல செம ஸ்டைலிஷ் & யூத்ஃபுல். ரொமான்ஸ் கலந்த அதிரடிப் பொங்கல் எங்களுக்குக் காத்துக்கிட்ருக்கு. பட்டையக் கிளப்ப வர்லாம்... வர்லாம்... வர்லாம்... வா... பைரவா!

@நடுசென்டர் நாகராசு: டீசர் பாத்தேன் "இன்னைக்கு நிறைய பேருகிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்கு"னு விஜய் சொல்லுறாரு. அந்த கெட்ட பழக்கம் வேற ஒண்ணுமில்ல இந்த மாதிரி இழுத்து இழுத்து டயலாக் பேசுறதுதான். நடக்கப்போறதை முன்னாடியே தெரிஞ்சுக்கிற கேரக்டர் ல அழகியதமிழ்மகன் ல நடிச்சீங்க. அதுக்கப்புறம் நடந்ததைலாம்(!) நல்லா தெரிஞ்சு புரிஞ்சுதான் இதுல நடிச்சுருப்பீங்கனு நம்புறோம், அதனால ஹ்ம்ம் பாக்கலாம், நம்பிக்கை அதானே எல்லாம்!.

                                                                                                                          


@தலவெறி தம்பா : டீசர் முழுக்க பைக் சத்தம் கேட்குது ,தல ரெஃபரன்ஸ். விளையாடலாமா?னு கேட்டு ஒருத்தனை 'ஸ்பார்ட்டன்' பேட்டை கொண்டு பல்லை உடைக்கிறாரு விஜய், தல தோனி ரெஃபரென்ஸ். புல்லட்டை சைடுல உட்கார்ந்து ஓட்டிட்டு வர்றாரு, 'காதல்' பரத் ரெஃபரென்ஸ். இதே ஹேர்ஸ்டைலைத்தான் தெலுங்கு போக்கிரி படத்தில் மகேஷ்பாபு வெச்சுருப்பாரு. 'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டபழக்கம் என்கிட்ட இருக்குது?'னு வேற சொல்றாரு. அது என்ன பழக்கம்னா... ஒரு சட்டைக்கு மேல இன்னொரு சட்டையை போட்டுகிட்டு திரியுறது தான். அவனவன் அடிக்குற வெயிலுக்கு ஒரு சட்டை போட்டாலே அவியுதுனு திரியுறானுங்க. இவர் மட்டும் தான் இன்னமும் இரண்டு சட்டை போட்டுகிட்டு திரியுறார்.


@லவ்லி கீர்த்தி விக்கி : அவ ஸ்மைலு அப்பப்பா... கீர்த்தி செல்லத்துக்காகவே டீசரை ஐம்பது தடவைக்கு மேல பார்த்துட்டேன். 'தொடரி' படம் வந்தப்போ ' பேசாம போறியா? இல்ல வாயிலேயே எட்டு போடுற கீர்த்தி படத்தை காட்டவா?'னு கலாய்ச்சீங்களே, இப்போ எங்கடா போனீங்க? நயன், காஜல், தமன்னா, ஸ்ருதி ஃபேன்ஸ் ஒதுங்கி நில்லுங்க, கீர்த்தி தான் லேடி சூப்பர் ஸ்டார்னு கத்தி சொல்லுங்க. நான் இன்னொரு தடவை டீசர் பார்க்கபோறேன்...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!