Published:Updated:

“ஸ்டார், சூப்பர் ஸ்டாராக மாறுவதைப் பார்க்கிறேன்” - சமந்தா புகழ்வது யாரை? #QuickSeven

“ஸ்டார், சூப்பர் ஸ்டாராக மாறுவதைப் பார்க்கிறேன்” - சமந்தா புகழ்வது யாரை? #QuickSeven
“ஸ்டார், சூப்பர் ஸ்டாராக மாறுவதைப் பார்க்கிறேன்” - சமந்தா புகழ்வது யாரை? #QuickSeven

 நானும் ரவுடிதான் பட ஹிட்டைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. சூர்யா ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். விக்னேஷ் சிவனின் ஃபேவரைட் அனிருத் தான் இப்படத்திற்கும் இசை. தற்பொழுது ஹரி இயக்கத்தில் சிங்கம் 3-க்கான  இறுதிவேலைகளில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. எனவே, நவம்பர் 9ம் தேதி  “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கானப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சிங்கம் 3க்கான டீஸர் 7ம் தேதியும், படம் டிசம்பர் 16லும் ரிலீஸ். 

 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்துவதும், அவர்களது படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதும் தான் சசிகுமார் ஸ்டைல். கிடாரி படத்தை தொடர்ந்து மீண்டும் புதுமுக இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார் சசிகுமார். பிரகாஷ் இயக்கிவரும் இப்படத்திற்கான பெயர் அறிவிக்கப்படாமலேயே படப்பிடிப்பு நடந்துவந்தது. தற்பொழுது, “பலே வெள்ளயத் தேவா” என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்திருப்பதாக சசிகுமார் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 “என் வாழ்க்கையில் ஒரு ஸ்டார், சூப்பர் ஸ்டாராக உருவாவதைப் பார்த்ததில்லை, ஆனால் இப்பொழுது பார்க்கிறேன்... வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்" என புகழ்ந்திருப்பவர் சமந்தா. ரெமோ படத்தின் தெலுங்கு இசைவெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட சமந்தா, சிவகார்த்திகேயனைப் புகழ்ந்து தள்ள, பதிலுக்கு “ரெமோ தெலுங்கு இசையை வெளியிட்டதற்கும், உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி” என்று ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் சிவா. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 படத்திற்குப் படம், அழகு மட்டுமல்ல நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தர்மதுரை , குற்றமே தண்டனை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் என வெரைட்டியாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யாவிற்கு கோலிவுட்டில் மார்க்கெட் எகிறிக்கிடக்கிறது. இதனால் மல்லுவிட்டிலும் வாய்ப்புகள் குவிகின்றனவாம். மலையாளத்தில் துல்கர்சல்மான், அனுபமா நடித்துவரும் “ஜோமொன்டே சுவிசேஷங்கள்” படத்தில் முக்கிய ரோலில் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வித்யாசாகர் இசையமைத்துவரும் இப்படம் டிசம்பரில் ரிலீஸ். 

 10 வருடங்களாக காதலிக்கும்போது இருக்கும் அன்பும், காதலும், பாசமும் கல்யாணத்திற்குப் பிறகு எப்படி மாறும் என்பதே “கவலை வேண்டாம்” பட ஒன் லைன். டிகே இயக்கியிருக்கும் இப்படத்திற்கான ஒட்டுமொத்த படப்பிடிப்பும் குன்னூரில் 55 நாட்கள், முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் நடந்திருக்கிறது. அனைத்து நடிகர்களும், 55 நாட்களும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் கூட, முகம்சுழிக்காமல் பணியாற்றியிருக்கிறார் காஜல்அகர்வால். இதனால் காஜலை புகழ்ந்து தள்ளுகிறது படக்குழு. ஜீவா, பாபிசிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, சுனைனா என ஜாலியாக உருவாகியிருக்கிறது இந்த ‘கவலைவேண்டாம்’. 

 ‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் கடம்பன். இப்படத்திற்கான டீஸரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் மிரட்டல் ஹிட். காரணம், கடம்பன் பட டீஸரை சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் இணையத்தில் வெளியிட்டது தான். ஆர்யாவின் நட்பு வட்டத்தில் இருக்கும் பல நடிகர்களும், இவரை ட்விட்டரில் பாராட்டிவருகின்றனர். தமிழின் டார்சான், இந்த கடம்பன் என்று கொண்டாடுகிறார்கள் சக நடிகர்கள். இயற்கையுடன் நம்மை உறையவைக்கும் அதிர்ச்சியும், புது அனுபவமுமாக கடம்பன் படம் இருக்கும் என்கிறது படக்குழு. 

 பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் பிறந்த நாள் இன்று. பவுஜி, சர்க்கஸ் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றி, திவானா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் தான், இன்றைய தேதியில் உலகளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவர். கமல்ஹாசன், சல்மான் கான், ஸ்ருதிஹாசன் என்று ஒட்டுமொத்த இந்திய நடிகர்களும் அலைபேசியிலும், ட்விட்டரிலும் ஷாருக்கானிற்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். ஷாருக்கிடம் பேட்டிகளிலும், ட்விட்டரிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஷாருக் சொன்ன ஷார்ப் பதில்கள் என்னென்னு தெரிந்துகொள்ள க்ளிக்குக!

:- இந்த லிங்கில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு பாஸ்! https://goo.gl/9hYOIe

- பி.எஸ்.,க.பாலாஜி-