Published:Updated:

காஜல், மஞ்சிமா ஓகே... தனுஷின் மூன்றாவது ஜோடி யார்? #Quickseven

காஜல், மஞ்சிமா ஓகே... தனுஷின் மூன்றாவது ஜோடி யார்? #Quickseven
காஜல், மஞ்சிமா ஓகே... தனுஷின் மூன்றாவது ஜோடி யார்? #Quickseven

காஜல், மஞ்சிமா ஓகே... தனுஷின் மூன்றாவது ஜோடி யார்? #Quickseven

 தற்பொழுது வடசென்னை படத்தில் நடித்துக் கொண்டே, பவர் பாண்டி படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இதைத்தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் " நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.  இந்தப் படத்தில் காஜல் அகர்வாலும், மஞ்சிமா மோகனும் தனுஷுடன் ஜோடி சேர போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்படத்தில் மூன்றாவது ஒரு ஹீரோயின்னும் இருக்கிறாராம். அதுயாரென்பது மட்டும் சஸ்பென்ஸில் வைத்திருக்கிறது படக்குழு. யார் அந்த தேவதை?

 சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி , தர்மதுரை, ஆண்டவன் கட்டளை,றெக்க என விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் ரிலீஸாகிவிட்டன. இந்த வருடத்திற்கான ஏழாவது படமாக "புரியாத புதிர்"   வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் தான் "மெல்லிசை" என்ற படத் தலைப்பை "புரியாத புதிர்" என படக் குழு மாற்றியது. எப்படியும் நவம்பர் இறுதிக்குள் நிச்சயம் படம் ரிலீஸ் என்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. இது ஏழு, அடி தூளு...

 சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கத்திச்சண்டை, இந்த நவம்பரில் ரிலீஸ். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தின் காமெடி அத்தியாயங்களை நிரப்பியிருப்பது வைகைப்புயல் வடிவேலு, சூரி கூட்டணி. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவரை மறந்துவிட்டனர் ரசிகர்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு, வடிவேலுவின் வருகை தான், ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. கத்திச் சண்டை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் நவம்பர் 18 இல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் இசை ஹிப் ஹாப் தமிழா வசம். கம்பேக் வடிவேலு...!
 

 கடுகு, என்னோடு விளையாடு, பொட்டு என வரிசையாக நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கும் பரத் தற்பொழுது "கடைசி பெஞ்ச் கார்த்தி " என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ரவி பார்கவன் இயக்க உள்ளார். காதலையும், காதல் சார்ந்த பிரச்னைகளையும் மையமாக இப்படம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார் இயக்குநர். பரத்தின் நிறைய படங்களை 2017 இல் எதிர் பார்க்கலாம். சீக்கிரமே முதல் வரிசைக்கு வாங்க ப்ரோ...

 ஆரண்ய காண்டம் என்ற ஒற்றைப் படத்தின் மூலம் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் எனப் பெயர் பெற்ற தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்தப்பட வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. படத்திற்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும். விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆரண்யகாண்டம் ரிலீஸாகி, ஆறுவருடத்திற்குப் பிறகு அடுத்த படத்தை இயக்கவுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. வாழ்த்துக்கள் ப்ரோ...

 நேற்று தனது 51 பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். பிறந்தநாளை ஒட்டி அவரது வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு விட, எல்லோருக்கும் நன்றி சொல்லி, மகிழ்ந்திருக்கிறார் ஷாருக். மேலும் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் உல்லாசப் படகில் தனியாக பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் ரன்பீர் கபூர், கரண் ஜோகர் , ஜோயா அக்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். வேர் இஸ் த பார்ட்டி...நடுக்கடலில் பார்ட்டி...!

 " தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்பிடிக்கும், இந்த அலெக்ஸ்பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் " என சீறிய மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. மூன்று முகத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனில் தன் முகத்தை பதிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். மூன்று முகத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கும் ராகவா லாரன்ஸ், "மொட்ட சிவா கெட்ட சிவா", "சிவலிங்கா" படப்பிடிப்புகள் முடிந்தவுடன், மூன்றுமுகம் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். ராகவா ராக்‌ஸ்... 

- க. பாலாஜி

அடுத்த கட்டுரைக்கு