Published:Updated:

வேதாளம் ரீ-ரிலீஸ் இல்லை ஸ்பெஷல் ஷோ தானாம்- தெறிக்கவிட்டது போதும்ப்பா!

வேதாளம் ரீ-ரிலீஸ் இல்லை ஸ்பெஷல் ஷோ தானாம்- தெறிக்கவிட்டது போதும்ப்பா!
வேதாளம் ரீ-ரிலீஸ் இல்லை ஸ்பெஷல் ஷோ தானாம்- தெறிக்கவிட்டது போதும்ப்பா!

ஜீத் நடித்து போன வருடம் நவம்பர் 10-ல் ரிலீஸ் ஆன  'வேதாளம்' படத்தை இந்த வருடம் அதே தேதியில் ஸ்பெஷல் ஷோ திரையிடப்போறாங்களாம்..  இந்த ஸ்பெஷல் ஷோவுக்கே  தல, தளபதி ரசிகர்கள்லாம் சும்மாவா இருப்பாங்க, என்னென்ன அலப்பறைகள் பண்ணுவாங்கனு பார்க்கலாமா?

* வேதாளத்துக்குப் பிறகு படமே வராம மத்த நடிகர்களின் ஃபேன்ஸோட ஒரண்டை இழுக்குறதையே வேலையாக வெச்சிருக்கிற தல    ஃபேன்ஸ் எல்லாம் 'மறுபடியும் தெறிக்கவிடலாமா' னு டயலாக் பேசிப் பேசி அந்த வார்த்தையையே அடுத்த வாரம் முழுக்க    ட்ரெண்டிங்காக வெச்சிருப்பாய்ங்க!

* டம் ரிலீஸ் ஆனா பேசுற வசனமே புரியாத மாதிரி கத்தோ கத்துனு கத்துவாங்க. இதுல ஆல்ரெடி படம் பாத்துட்டுப் போனா சொல்லவா வேணும்? இதுக்கு அடுத்து அந்த சீன்தான் பாரேன். அதுக்கு அடுத்து அந்த சீன்தான் பாரேன்னு ரன்னிங் கமென்ட்ரி கொடுத்து ரவி சாஸ்திரியாவே மாறிடுவாங்க. (நாங்களும் ஆல்ரெடி படத்தை  பாத்தவிய்ங்கதான்யா. யாருக்குக் கதை சொல்றே?)

* ரீமேக் பண்ணின  படங்களைப் பாத்துட்டு, அந்தப் படத்தோட கம்பேர் பண்ணினா இது மொக்கை,  இதோட கம்பேர் பண்ணினா அது மொக்கைனு விமர்சனம்  பண்ற மாதிரி பழக்க தோஷத்தில் அந்த 'வேதாளம்' படம்தான் நல்லாருக்கு. இது சுமாராதான் இருக்கு; இன்னும் கொஞ்சம் நடிச்சிருக்கலாம்னு ஒரு குரூப் விமர்சனம் பண்ணினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை மக்களே!

* சும்மாவே தன் உணவை தன் கையாலேயே சாப்பிடுகிறார், தன் படத்தில் தானே நடிக்கிறார் எனச் சொல்லி நம்மை ஜென் நிலையில் உறையவைக்கும் சில தெய்வ லெவல்  அஜீத் ரசிகர்கள் இதையெல்லாம் சும்மா விடுவாங்களா? ஒரு நடிகருக்கு ஒரே படம் இரண்டு முறை அடுத்தடுத்து ரிலீஸ் ஆவது அகில உலகத்தில் இதுதான் முதன்முறை. இது எத்தனைப் பேருக்குத் தெரியும் ஃப்ரண்ட்ஸ்? என டேட்டா சேகரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் நாள் வெகுதூரத்தில் இல்லை! (ரீ ரிலீஸுங்கிறதும், ஸ்பெசல் ஷோங்கிறதும் வேறவேற இல்லையா பாஸ்? )

   * ஜீத் ஆடின 'ஆலுமா டோலுமா’ பாட்டைப் பாத்துட்டு வெளிநாட்டுல ஒரு ராணி அஜீத்தை டின்னருக்குக் கூப்பிட்டாங்கனு சொன்ன மாதிரி இந்தப் படத்துக்கு முதல்நாள் முதல் ஷோவைப் பார்க்க அந்த ராணியே வர்றாங்கனு கொளுத்திப்போட்டுட்டு வேடிக்கை பாக்க ஒரு பெரிய படையே காத்துக்கிட்டு இருக்கும். (எங்கே இருந்துய்யா நீங்கள்லாம் வர்றீங்க?)

* விஜய் ஃபேன்ஸ் மட்டும் சும்மா இருப்பாங்களா?  #வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடுச்சுனு சோசியல் மீடியாவுல ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு அதை நேஷனல் லெவல்ல கதறவிடுவாங்க. (எவ்வளவு வாங்கிருக்கோம்)

* 'வேதாளம்' படத்தின் இடைவேளையில் கையாலேயே அவ்வளவு பெரிய கண்ணாடி சுவற்றை உடைக்கிற அஜித்தையும் உடைக்கிறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்ட மெளலிவாக்கம் கட்டடத்தையும் லிங்க் பண்ணி இதை தலகிட்டயே கொடுத்துருக்கலாமேனு நவக்கிரக லெவல்ல மீம் போட்டுத் தெறிக்க விடுவாங்க!
 

ஆமா இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்னு தானே யோசிக்கிறீங்க? எவ்வளவு தல தளபதி சண்டைகளைப் பாத்திருக்கோம்!எல்லாம் சரிதான், ஆனா  ஒரு ஊர்ல, ஒரு தியேட்டர்ல, ஒரே ஒரு ஷோ ரிலீஸ் பண்ணுறதுக்குலாம் இவ்வளவு அட்ராசிட்டி பண்ணுறது கொஞ்சம் ஓவர்தான் பிரண்ட்ஸ்ஸ்..

-ஜெ.வி.பிரவீன்குமார்