”சூப்பர் ஸ்டார் பத்தி கேள்விப்பட்டெதெல்லாம் உண்மையான்னு அவரிடமே கேட்டேன்' - கலையரசன் பேட்டி

அதே கண்கள்

இயக்குநர் விஷ்ணுவர்தனின் உதவி இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது 'அதே கண்கள்' திரைப்படம். ஃபுல் டைம் ஹீரோ ஆகிவிட்ட கலையரசனிடம் பேசினோம்...,  

’அதே கண்கள்’ பேய் படமா?

'அதே கண்கள்' ஒரு ரொமான்டிக் திரில்லர் , அதோட ஒருமுக்கோண காதல் கதையும் இருக்கு. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த படத்துல நான் ஒரு கண்ணுத் தெரியாத செஃப் ஆக நடிச்சிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு கண்ணு தெரிய ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் நடக்குற விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமா புதுமையான அனுபவமா இருக்கும்." 

இந்தக் கதைல உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு?

"இந்தப் படத்தோட  ஹீரோன்னு சொல்றத விட ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சுருக்கேன்னு தான் சொல்லணும். ஏன்னா கதையில நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. அதுல என்னோட கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானதுனு சொல்லலாம். அப்படித்தான் என் கரியர் இருக்கணும்னு நினைக்கிறேன்.

டான்ஸ், சண்டைக்காட்சிகள் உங்களுக்கு இருக்கிறதா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

"இந்தப் படத்துல ஜனனி ஐயர் மற்றும் ஷிவதானு ரெண்டு நாயகிகள் என்னோட சேர்ந்து நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேர் கூடவும் ரெண்டு பாட்டு இருக்கு. கண் தெரிய ஆரம்பிச்சதும், எனக்கு கண்ணு தெரியாதப்போ நடந்த விஷயங்களைத் தேடி போவேன். எல்லாமே புதுசா இருக்கும்.  'அதே கண்கள்' படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. எல்லோரும் பார்த்து சப்போர்ட் பண்ணனும்."   

கபாலியில் சூப்பர் ஸ்டாரோடு நடித்த அனுபவம் பற்றி..?

"ரஜினி சாரோடு நடிச்சதே என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணம். சின்ன வயசுலேர்ந்து அவரைப் பத்தி நிறைய கதைகள் கேட்டு இருப்போம். அதையெல்லாம் நேர்ல கேட்பேன், அதெல்லாம் உண்மையா சார்னு. அவரும் நிறைய விஷயங்கள் சொல்வார். ரொம்ப ஆச்சர்யமா இருக்கும் அவரு சொல்றேதெல்லாம் கேட்க. நிறைய அறிவுரைகள் சொல்வார். அந்த மாதிரியான வாய்ப்பு திரும்ப கிடைக்குமான்னு தெரியல. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்."

வேற என்ன என்ன படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க?

இந்தப் படம் தவிர 'எய்தவன்','காலக்கூத்து', 'சைனா', 'பட்டினப்பாக்கம்' முதலான படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்." 

வாழ்த்துகள் ப்ரோ..!! 

 

- க. பாலாஜி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!