Published:Updated:

அஞ்சலிப் பாப்பா முதல் பொம்மி வரை - இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

அஞ்சலிப் பாப்பா முதல் பொம்மி வரை - இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?
அஞ்சலிப் பாப்பா முதல் பொம்மி வரை - இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி... 'அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!' என நம்மை ஓ போட வைத்த சில சுட்டிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்! 

(சுட்டி ஸ்டார்களின் லேட்டஸ்ட் படத்தை பார்க்க பட்டனை அழுத்தவும்)

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி:

அறிமுகமானது  'அஞ்சலி'யில். அதன் பின் 'மே மாதம்' படத்தில் மெட்ராஸைச் சுற்றும் கல்கட்டாவாக முத்திரை பதித்தார். அடுத்து கமலோடு 'சதி லீலாவதி'யில் காமெடி கதகளி ஆடினார். பின் மாயமானவர் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் டெக்கியாக வந்தபோது வாவ் என ஆச்சரியப்பட்டார்கள் ரசிகர்கள். நிஜத்தில் சார் இப்போது முன்னணி சவுண்ட் டிசைனர். 'விஸ்வரூபம்', 'குற்றமே தண்டனை', 'காற்று வெளியிடை' போன்ற படங்களுக்கு இவர்தான் சவுண்ட் டிசைனிங். 

ஷ்ரியா சர்மா:

இந்த ஏஞ்சல் குட்டி பார்பி பொம்மையாக அறிமுகமானது தெலுங்கில். தமிழின் மோஸ்ட் வான்டட் ஜோடி சூர்யா - ஜோதிகாவின் மகளாய் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடிக்க, தலையில் வைத்துக் கொண்டாடியது தமிழகம். அதன்பின் ஆண்டுக்கொன்றாய் படம் பண்ணியவர் இப்போது நெடுநெடுவென வளர்ந்து தெலுங்கில் ஹீரோயினாகவும் கால் பதித்துவிட்டார். 'நிர்மலா கான்வென்ட்' படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இப்போது, மும்பையில் சட்டம் படித்து வருகிறார்.

ஆன் அலெக்ஸியா ஆன்ரா:

பளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் 'அவ்வை சண்முகி'யில் அசரடித்த குட்டி தேவதைதான் இவர். அதன்பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி. சீக்கிரமே யாராவது இவங்களை ஸ்க்ரீன்ல காட்டுங்கப்பா!

பரத்:

'பஞ்சதந்திரம்' படத்தில் 'ஹார்ட்ல ஓட்டா' என ஜெயராம் அறிமுகப்படுத்தும் குண்டுப் பையன்தான் பரத். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 40-க்கும் மேற்பட்ட படங்கள். நாகார்ஜுனா, விஜய், தனுஷ் என வி.ஐ.பி-களோடு நடித்த படங்கள் ஏராளம். தமிழில் சில நாட்களாய் காணாமல் போயிருந்தவர் இளைத்து ஸ்லிம்மாகி ஆளே மாறிப்போய் திரும்ப வந்தார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் அனுஷ்காவோடும் நடித்தாயிற்று. படிப்பிலும் சார் பயங்கர பிஸி.

ஹேமலதா:

முதல் படமே சூப்பர்ஸ்டாரின் 'பாட்ஷா'தான். அதன்பின் தளபதியுடன் 'பூவே உனக்காக'. 'ப்ரெ......ண்ட்' என 'சூர்யவம்சம்' படத்தில் ஜூனியர் சக்திவேலாக மனதை அள்ளினார். அதன்பின் வரிசையாக நிறையப் படங்களில் நடித்தவர் வளர்ந்தபின் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். 'கனா காணும் காலங்கள்' சீரியல் அதிரிபுதிரி ஹிட். அதன்பின் ரியாலிட்டி ஷோவில் டான்ஸர் அவதாரம். கடந்த ஆண்டு வரை 'தென்றல்' சீரியலில் பிஸி. சீக்கிரம் திரும்ப வருவீங்கனு காத்திட்டிருக்கோம்.

மகேந்திரன்:

பரிச்சயமான பெயர் 'மாஸ்டர் மகேந்திரன்'. 'நாட்டாமை'யில், 'தாத்தா நான் பாத்தேன்' என என்ட்ரியாகி சினிமாவில் கால் பதித்தார். அதன்பின் தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் எக்கச்சக்கப் படங்கள். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அதிகப் படங்களில் நடித்தது இவராகத்தான் இருக்கும். விடலைப் பருவத்தில் பிரேக் எடுத்தவர் வளர்ந்த இளைஞனாய் திரும்ப வந்தார். இப்போது முழு நேர ஹீரோ!

பூர்ணிதா:

சினிமாவில் இவர் பெயர் கல்யாணி. 'அள்ளித் தந்த வானம்' படத்தில் 'சென்னப் பட்டினம்' பாட்டில் குதிக்கும் குட்டிச் சுட்டி இவர்தான். அதே சமயம் சின்னத்திரையிலும் என்ட்ரியானார். அடுத்த சில ஆண்டுகளிலேயே ஹீரோயினாகவும் ப்ரொமோஷன் வாங்கினார். பெரிதாக ரவுண்ட் வர முடியவில்லை. ஆனாலும் சின்னத்திரையில் மவுசு குறையவில்லை. இப்போதும் டாக் ஷோ, சீரியல் என சிக்ஸ் அடித்துக்கொண்டிருக்கிறார்.

பிரகர்ஷிதா:

'வேலன்' சீரியல் ஞாபகம் இருக்கிறதா? நம்பியாரின் அசுர நடிப்பிற்கு இணையாக அதில் பின்னிப் பெடலெடுத்த குழந்தையின் பெயர்தான் பிரகர்ஷிதா. 'சந்திரமுகி'யில் பொம்மி என ரஜினி வாஞ்சையாக அழைத்த குழந்தை. திடீரென காணாமல் போனவர் இப்போது காலேஜ் கோயிங் ஸ்டூடன்ட். நடிப்பை விட இப்போது டைரக்‌ஷனில்தான் இவருக்கு ஆர்வம் அதிகம். ராஜ்குமார் ஹிரானி ஸ்டைலில் படம் பண்ண வேண்டும் என்ற முடிவோடு உழைக்கிறார். வாழ்த்துகள் ஜி! 

ஷாம்லி:

இவர் எல்லோருக்கும் பரிச்சயமான 'அஞ்சலி' பாப்பாதான். மாநில விருதுகள், தேசிய விருது என குழந்தைப் பருவத்திலேயே சொல்லி அடித்த கில்லி. 2000 வரை தொடர்ந்து படங்கள் நடித்தவர் அதன்பின் சினிமாவில் இருந்து விலகினார். ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர் ரிட்டர்னானது ஹீரோயினாக. தெலுங்கு, மலையாளம், இப்போது தமிழில் 'வீர சிவாஜி' என ஒரு ரவுண்ட் வரத் தயாராக இருக்கிறார் ஷாம்லி.

-நித்திஷ்

பின் செல்ல