Published:Updated:

அப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது

Vikatan Correspondent
அப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது
அப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது
அப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது

எப்போ... எப்போ பாஸ் ரிலீஸ் என்று அதீத எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. சிம்பு ஹீரோ, ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் இயக்கம் கெளதம் மேனன். இவர்களின் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டிவருவாயா செய்த மேஜிக் தான் காரணம்.

இதோ, அச்சம் என்பது மடமையடா நவம்பர் 11ம் தேதி ரிலீஸ் உறுதியாகிவிட்டது. இப்படம் சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டு, யு சான்றிதழ் பெற்றிருக்கிறது.  கெளதம்மேனன் தன்னுடைய ட்விட்டரில் “ சாஹசம் ஸ்வாசக சாகிப்போ” என்ற தெலுங்கு வெர்ஷனுடன், தமிழில் “அச்சம் என்பது மடமையடா” இரண்டுமே நவம்பர் 11ல் ரிலீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சில மாதங்கள் முன்பே ரிலீஸாகவேண்டிய இப்படம், தமிழில் சிம்புவிற்கும், கெளதமிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் வெளியாக தாமதமானது குறிப்பிடத்தக்கது. தவிர, தெலுங்கு வெர்ஷனில் நாகசைத்தன்யா நடித்திருப்பார். இரு மொழிகளிலுமே மஞ்சிமா தான் ஹீரோயின். இப்படத்துடன் தமிழில் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் “கடவுள் இருக்கான் குமாரு” படமும் ரிலீஸாகவிருக்கிறது. 

தள்ளிப்போகாதே பாடல் செம ஹிட்டுனு நமக்குத்தெரியும். ஏன் இந்தப் படம் இவ்வளவு நாள் தள்ளிப்போனது? இப்படம் வெளியீட்டில் வந்த சிக்கல் இதோ சின்ன ஃப்ளாஷ்பேக்! 

நாக சைத்தன்யா நடிப்பில் தெலுங்கு வெர்ஷன் படத்திற்கான வேலைகளை முடித்து, இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் செய்துமுடித்தார் கெளதம்மேனன். ஆனால் தமிழில்  க்ளைமேக்ஸ் காட்சிகள் உட்பட, இன்னும் ஐந்து நாட்களுக்கான படப்பிடிப்பு நடக்காமலேயே இருந்தது. அதுமட்டுமின்றி சித்ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வசீகரித்த “தள்ளிப்போகாதே...” பாடலுக்கான படப்பிடிப்பும் முடியவில்லை. இதனால் தெலுங்கில் முதலில் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று கூறப்பட்டது. 

தமிழில் தாமதமானதற்கு சிம்பு தான் காரணம் எனக்  கூறப்பட்டது. ஆரம்பக் கட்ட படப்பிடிப்பில் சரியாக கலந்துகொண்ட சிம்பு, க்ளைமேக்ஸ் காட்சிகளில் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. அந்த நேரத்தில் தனுஷின் “என்னை நோக்கி பாயும் தோட்டா” பட வேலைகளையும் கெளதம் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி, தள்ளிப்போகாதே பாடல் ஷூட்டிங்கையும், தனுஷ் பட ஷூட்டிங்கையும் ஒரே நேரத்தில் முடித்துவிட, துருக்கி சென்றது படக்குழு. அதில் தனுஷ் நேரத்திற்கு கலந்துகொண்ட நிலையில் சிம்பு வரவில்லை. இப்படியே படத்தின் வேலைகளும் தள்ளிப்போனது. 

சென்னையில் நடந்த க்ளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பின் போது, கெளதம் மேனன் உட்பட மற்ற அனைத்து கலைஞர்களும் காத்திருக்க, அன்றைய ஷூட்டிங்கிற்கே சிம்பு வரவில்லை. அதனால் படக்குழுவிற்குள் சிறு பரபரப்பு நிலவியது. அன்றிலிருந்து தமிழ் போர்ஷனுக்கான படப்பிடிப்பை பற்றி எதுவும் கெளதம் மேனன் பேசவில்லை. இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராஜேந்தரிடம் பேசியபோது, “ டிடிஎஸ்  கட்டணம் இன்னும் கட்டவில்லை. அதை கட்டியவுடன் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். ஷூட்டிங் வராததற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. மேலும் கெளதமிற்கும் சிம்புவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக கெளதம் மேனனும், சிம்புவின் சமரசநிலைக்கு சென்றதும், படத்தின் படப்பிடிப்பும், அதைத்தொடர்ந்து டப்பிங் வேலைகளையும் முடித்து படம் இன்று சென்சார் சென்றது அப்பாடா.. ஒருவழியாக படமும் ரிலீஸ்.  படம் லேட்டா வந்த என்ன பாஸ்... நிச்சயம் படம் வேற லெவல் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. #அவளும் நானும்... 

-பி.எஸ்-