படப்படிப்பில் ஸ்டண்ட் நடிகர்கள் மரணம். அதிர்ச்சியில் கன்னட படவுலகம்!

ஸ்டண்ட் நடிகர்கள் மரணம்

கன்னட நடிகர் துனியா விஜய் நடித்த மஸ்திகுடி என்கிற படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் இன்று நடைபெற்றது. பெங்களுரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணைக்கட்டு ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில், 30 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஹீரோவுடன் இரண்டு ஸ்டண்ட் நடிகர்களும் குதிப்பது போல காட்சி படமாக்கப்பட்டது.

துனியா விஜய்யுடன், அனில் மற்றும் உதய் ஆகிய இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் நடித்தார்கள்.  அப்படி குதித்ததில், நீரில் மூழ்கி அனில், உதய் இருவரும் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட பல மணிநேரங்களாக இருவரின் உடல்களையும் தேடும் முயற்சி நடைபெற்று வருவதாக பெங்களூரு காவல்துறை அறிவித்திருகிறது. நாயகன் துனியா விஜய் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், உடனடியாக படகு சென்று அவரை மீட்டு வந்தது. மற்ற இருவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை. 

பெங்களூரு போலீஸார் படப்பிடிப்புக் குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!