Published:Updated:

‘இப்ப எப்டி ஃபீல் பண்றீங்க?’ பிச்சைக்காரன் படத்தில் நடித்தவர்களிடம் கேட்டபோது..

‘இப்ப எப்டி ஃபீல் பண்றீங்க?’ பிச்சைக்காரன் படத்தில் நடித்தவர்களிடம் கேட்டபோது..
‘இப்ப எப்டி ஃபீல் பண்றீங்க?’ பிச்சைக்காரன் படத்தில் நடித்தவர்களிடம் கேட்டபோது..


பிச்சைக்காரன் படத்திற்கு முன்பே, சிவாஜி படத்தில் சுஜாதா-ஷங்கர் சொல்லி அடித்த மேட்டர். அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பது போலவும், ஒரு மாதம் அவற்றை மாற்ற அவகாசம் அளிப்பது போலவும் கடைசியில் டைட்டில் ஸ்லைடில் வரும். அதன்பிறகு நிறைய கறுப்புப் பணம் வெளியே வந்தது என்றெல்லாம் எழுத்துகள் ஓடும். நடக்குமா, நடக்காதா, தேவையா இல்லையா என்ற சீரியஸ் விவாதங்களை அப்புறம் வைத்துக் கொள்வோம். திடுதிப்பென்று நேற்று இரவு மோடி அறிவித்தே விட்டார். 

சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திலும் இதைச் சொல்லும் காட்சி வந்தது. அந்தக் காட்சிதான் பலரது வாட்ஸ் அப்பில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ’ராஜா மெய்யப்பன்’ என்ற பிச்சைக்காரனாக நடித்திருக்கும் இயக்குநர் கோவிந்தமூர்த்தி, ‘இந்தியாவுல ஏழைகளே இல்லாம இருக்க ஒரே வழி.. ஐநூறு ரூவா, ஆயிரம் ரூவா நோட்டை ஒழிக்கறதுதான்’ என்று ரேடியோ ஜாக்கி ஒஃபீலியாவிடம் சொல்வார். ஏதோ ஃபைனான்ஸ் அனலிஸ்ட் சொல்றார் என்று எல்லாரும் கேட்க, ரேடியோ ஸ்டேஷனில் வந்திருக்கும் கெஸ்ட், ‘இந்த மாதிரி ஆளுதான் நம்ம நாட்டுக்கு ப்ரைம் மினிஸ்டரா இருக்கணும்’ என்பார்.

’சொல்லுங்க... இப்ப நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?’ என்ற வழக்கமான கேள்வியை, அந்தக் காட்சியில் நடித்த கோவிந்தமூர்த்தி, ஓஃபிலியா இருவரிடமும் கேட்டோம்.

கோவிந்தமூர்த்தி:

‘நேத்து நைட்ல ஆரம்பிச்ச ஃபோன்.. தொடர்ந்து வெய்ட்டிங்ல தான் இருக்கு பாஸ். நான் நடிக்கத் தானே செஞ்சேன்.. இதை எழுதிய சசி  சார்தான் எல்லாப் பெருமைக்கும் உரியவர். ஏற்கனவே சந்திரபாபு நாயுடு ஒருக்கா ‘500, 1000 நோட்டுக்களை தடை செய்யணும்னு எழுதிருந்தாரு. அப்பவே நான் நண்பர்கள்கிட்ட நடந்தா என்னென்ன மாற்றம் வரும்னு பேசிருக்கேன். அப்பறமா இந்தக் காட்சி படமாக்கப்பட்ட கூட கொஞ்சம் இதைப் பத்தி பேசிகிட்டிருந்தோம். என்னைப் பொறுத்தவரை, இது நல்ல முடிவுதான். வரவேற்கிறேன். தைரியமா இப்படி ஒரு முடிவை அறிவிச்சதே பெரியவிஷயம். எதிர்ப்புகள், இதுனால ஏற்படற சில சிக்கல்களைத் தாண்டி இது பேசப்படும். 

அந்த ஒரு சீன், எல்லா பக்கமும் பேசப்படறது நெனைச்சே பார்க்காததுதான். அறிவிச்சது ப்ரைம் மினிஸ்டர் அல்லவா..!’ 

ஓஃபிலியா:

’நான் வீட்டுக்கு போறப்ப ஹஸ்பெண்ட், ‘ஏய்.. நீ படத்துல நடிச்சியே.. அதை நெஜம்மாவே அறிவிச்சுட்டாங்க’ன்னார். ‘அந்த வீடியோ கட் இருந்தா எடுத்து வாட்ஸ் அப்ல போடு’ன்னார்.

‘ஓ.. நீங்கதான் ஆரம்பிச்சதா?’

‘அச்சச்சோ.. இல்லைங்க. அவரு சொல்லும்போதே எல்லா க்ரூப்லயும் அது வர ஆரம்பிச்சுடுச்சு’

‘அந்த சீன் ஷூட் பண்றப்ப, இப்படி நடக்கும்னு கொஞ்சமாச்சும் நெனைச்சீங்களா?’

’0% கூட இல்லைங்க. ஆனா, டைரக்டர் சசி சார் இது டிவில திரும்பத் திரும்ப போடற காமெடி க்ளிப்பிங்ஸ் காட்சியா வரும். காமெடியா பார்க்கப்படும். ஆனா, ரொம்ப சீரியஸான விஷயம் இது.. நீங்க கேஷுவலா ரேடியோல ஜெனரலா எப்டி பேசுவீங்களோ அப்படியே பேசுங்கன்னார். கடைசில அது நடந்துடுச்சு’ 

‘இந்த அறிவிப்பு வந்ததுமே.. வீட்ல இருக்கற பணத்தை எப்படி பதுக்கலாம்னு பதற்றமா இருந்தீங்களா.. இல்ல நாம பேசின காட்சி மாதிரி ஒண்ணு நடந்துச்சுன்னு சந்தோஷப்பட்டீங்களா?’

‘ம்ம்கும். நாலு பீரோ ஃபுல்லா வெச்சிருக்கேன் பாருங்க.. நீங்க வேற.. நாம நடிச்ச சீன்ல இருந்தமாதிரியே நடக்குதேன்னுதான் தோணுச்சு. இத்தனை வருஷமா ஆர்ஜேவா இருக்கேன், விஜேவா இருக்கேன்.. அதெல்லாம் கூட யாருக்கும் ஞாபகமில்ல. இப்ப,  ஒரு பாட்டுல பணக்காரன் ஆகற மாதிரி, ஒரே சீன்ல பிரபலமாய்ட்டேன். இல்ல?’  

ஆமாங்க.

-பரிசல் கிருஷ்ணா