Published:Updated:

கில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா?!

கில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா?!
கில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா?!
கில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா?!

'வர்லாம்வா வர்லாம்வா' என ஒரு பக்கம் பைரவா டீசர் அதிரவிட, இன்னொரு பக்கம் சூர்யா கொலப்பசியில் சுற்றுகிறார். ரசிகர்கள் பார்க்கும் படங்களை விட டீசர்/டிரெயிலர்கள் பல மடங்கு அதிகம். நாம முதல் முதலில் பார்த்த டீசர், இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ என யோசித்து தேடியதில் சிக்கின பல படங்களின் டிரெய்லர்கள். இந்த டிரெய்லர்கள் எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா யுவர் ஆனர்? ஒவ்வொரு காலகட்டத்தில்லும் டிரெய்லர்கள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது பாருங்க!

தூள்  

இது ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு படங்களின் டெம்ப்ளேட். என்ன டெம்ப்ளேட் என கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். இல்லை என்றால் கில்லி பட டிரெய்லரில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லேசா லேசா

ஆரம்ப கால டிரெய்லர்கள் அனைத்தும் படத்தை பற்றிய சுவாரஸ்யத்தை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததோ இல்லையோ. படத்தின் டெக்னீஷியன்கள் பெயர்களை மிக சரியாக டிரெய்லர் வாயிலாக கொண்டு சேர்த்தது. இதுவும் அதற்கு ஒரு சாம்பிள்.

காக்க காக்க

சரியாக தன் படம் இது தான், இதைத் தான் படமாகவும் பார்க்கப் போகிறீர்கள் என சில வசனங்கள், அந்த நேரத்தில் எல்லோ ரேடியோக்களிலும் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருந்த பாடல்களையும் சூப்பராக எடிட் செய்யப்பட்டிருந்தது காக்க காக்க டிரெய்லர்.

பாய்ஸ் 

திருட்டு விசிடியால் ஒரு நல்ல தியேட்டர் அனுபவம் உங்களுக்கு தான் நஷ்டம் என ஆரம்பித்தது ஸ்மார்ட் மூவ். ஆனால் சேனல் நிகழ்ச்சிக்காக வைத்திருந்த ஃபுட்டேஜ் போல இவ்வளவு பெரிய டிரெய்லர் தான் மலைக்க வைக்கிறது.

திருமலை

கொஞ்சம் பாடல் கொஞ்சம் ஃபைட்டு என ரெடியாகியிருக்கிறது திருமலை டிரெய்லர். 

இயற்கை

அழகான விஷுவல்கள், அதற்கு ஏற்ற பின்னணி இசை, படம் எதைப் பற்றி என பெண் குரலில் சினாப்சிஸ் முடிவில் ஒரு பாட்டு இது தான் இயற்கை டிரெய்லர்.

விருமாண்டி

கில்லி 

ஆயுத எழுத்து

7ஜி ரெயின்போ காலனி

டிரெய்லரில் அசத்துவது யுவனின் பின்னணி இசை. டெம்ப்ளேட் டிரெய்லர்களாக பார்த்து பழகியவர்களுக்கு இது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

சச்சின்

அந்நியன்

சிவகாசி 

முழுக்க முழுக்க பாடல்களாலேயே தயாரான டிரெய்லர்.

புதுப்பேட்டை

7ஜி போன்றே புதுப்பேட்டை டிரெய்லரிலும் முழுக்க பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும்.

உனக்கும் எனக்கும் 

பாடல்கள் வைத்தே உருவாக்கி இருந்தாலும் ரசனையான எடிட்டிங் ரசிக்கும் படியாக இருக்கும்.

வேட்டையாடு விளையாடு

சில்லுனு ஒரு காதல்

முடிந்த வார்த்தையிலேயே ஆரம்பிக்கும் அடுத்த வார்த்தை என அந்தாதி கான்செப்ட்டில் உருவாகியிருக்கும் விதமே செம.

பச்சைக்கிளி முத்துச்சரம்

மொழி

பருத்திவீரன்

சிவாஜி

லவ்வர், டெரர், ஃபன் என ரஜினியை என்னென்ன விதத்தில் எல்லாம் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்ற கான்செப்ட் வைத்து உருவாக்கி அசத்தியிருப்பார்கள்.

பொல்லாதவன்

படத்தின் இரண்டு முக்கிய கதாப்பத்திரங்களின் பின்னணி, அப்போதைய ட்ரெண்டில் சம்மந்தமே இல்லாமல் நடு நடுவில் டிரெய்லரில் கட்டாயம் இடம்பிடிக்கவேண்டும் என்பதால் பாடல்கள் என கலந்து கட்டி கொடுத்திருப்பார்கள்.

அஞ்சாதே

மிஷ்கினின் ஃபேவரைட் ஷாட்கள் அத்தனையும் டிரெய்லரில் பார்க்க முடியும். இது வேற மாதிரி படம் என உணர வைக்கும்.

குருவி

தசாவதாரம்

ஏகன்

வாரணம் ஆயிரம்

அபியும் நானும்

வில்லு

ஆரண்ய காண்டம்

தன் படம் மட்டும் இல்லை படத்தின் டிரெய்லரும் மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டதில் தியாகராஜன் குமரராஜாவுக்கும், டிரெய்லர் கட் செய்த எடிட்டருக்கும் பாராட்டுகள். டிரெய்லரையும் தன் படத்துக்கான கருவியாக பயன்படுத்தி இது சாதாரண படம் இல்லை என உணர்த்திய விதத்தில் இது மிகவும் எக்ஸ்ட்ராடினரியான ஒரு டிரெய்லர். 

தொகுப்பு: பா.ஜான்ஸன்