Published:Updated:

கோலிவுட் ஹிருத்திக் ரோஷன் யாரு தெரியுமா?

கோலிவுட் ஹிருத்திக் ரோஷன் யாரு தெரியுமா?
கோலிவுட் ஹிருத்திக் ரோஷன் யாரு தெரியுமா?

கோலிவுட் ஹிருத்திக் ரோஷன் யாரு தெரியுமா?

ந்திய சினிமாவில் இதுவரைக்கும் ஒரு படமானது அதன்  தொடர் பாகங்களாக நான்குமுறை வருவதென்பதெல்லாம் இப்போதைய சூழலில் அபூர்வத்திலும் அபூர்வம். அதையும் தாண்டி ஒரு படம் வந்திருக்கிறது என்றால் அது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த 'சி.பி.ஐ டைரிக்குறிப்பு' எனும் படம் மட்டுமே.

அடுத்தடுத்த படங்களின் தலைப்புகள் வேறு வேறாக இருந்தாலும் 1988-ல் தொடங்கிய முதல்பாகத்தில் நடித்த அதே சேதுராம ஐயர் என்கிற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்திலேயே,  இரண்டாவது பாகமான 'ஜகார்த்தா', 3-வது பாகமான 'சேதுராம ஐயர் சிபிஐ', 2005-ல் வெளியான நான்காவது பாகமான 'நேரறியான் சிபிஐ' வரை எல்லாப் படங்களிலுமே  நடித்து சாதனை படைத்தார்.

பத்து வருடங்களுக்கு முன்னாலேயே இந்தச் சாதனையைச் செய்துவிட்ட மம்முட்டியை நோக்கி விடாமல் துரத்திக்கொண்டிருப்பது வேறு யாரும் இல்லை அவரது சக தோழரும்,மலையாளத்தின் இன்னொரு பெரும் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலேதான்.ஆமாம், ராணுவக்கதைக்களம் கொண்ட படங்களை இயக்குவதில் பிரபலமான இயக்குநர் மேஜர் ரவி இயக்கிய 'கீர்த்தி சக்ரா', 'குருசேத்ரா', 'காந்தகார்' என மூன்று படத்திலுமே மேஜர் மகாதேவன் என்னும் கேரக்டரிலே நடித்திருந்தார் லாலேட்டன். இப்போது நான்காவதுபடமாக இதே காம்போ '1971' எனப் பெயரிட்ட படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதிலும் மேஜர் மகாதேவனாகவே வருகிறாராம் லால். இது மட்டும் ரிலீஸ் ஆனால் மம்முட்டியின்  நான்கு பட சாதனையைச் சமன்செய்து சேம் ஸ்வீட் எடுத்துக்கொள்வார்கள்.                                                                                 

தற்போது விஷயம் அதுவல்ல. இந்த அரிய சாதனையை முறியடிக்கப்போகும் அடுத்த ஏரியா பாலிவுட்டா, கோலிவுட்டா என்பதுதான் திரை ரசிகர்களின் இப்போதைய ட்ரில்லியன் டாலர் கேள்வி. ஆமாம், அந்த வரிசையிலே பார்த்தால் ஹிருத்திக் ரோஷனுக்கும், நம்ம சூர்யாவுக்கும்தான் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.

முதலில் 'கொய் மில் கயா',  பிறகு அதன் தொடர்ச்சியான 'க்ரிஷ்2', 'க்ரிஷ்3' என மூன்று படங்களிலுமே ஹ்ருத்திக் ரோஷனின் அப்பா  ராகேஷ் ரோஷன் இயக்க,  'க்ருஷ்ணா மேரா' என்கிற கதாபாத்திரத்திலே நடித்து பாலிவுட்டையே வியக்க வைத்தவர் ஹிருத்திக் ரோஷன் என்றால்,  இன்னொரு பக்கம் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் துரைசிங்கம் எனும் கதாபாத்திரத்தில் 'சிங்கம்', 'சிங்கம் 2' என நடித்து அடுத்து  'சிங்கம்-3'க்காக கொலைப்பசியிலே காத்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அடுத்த மாதம் 'சிங்கம்3' ரிலீஸ் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், தமிழில் சூர்யாவுக்கு இது மிகப்பெரிய சாதனை என இப்போதே பேச ஆரம்பித்து விட்டது கோலிவுட்.
 

'க்ரிஷ்' படத்தினுடைய நான்காவது பாகம் 2017 அல்லது 2018 ல் தொடங்கப்படும் எனக் கூறியிருக்கும் வேளையில் 'சிங்கம்3' வெளியாகி,  'சிங்கம்4' படத்தை விரைவிலேயே எடுத்தால் போட்டியில் ஹிருத்திக் ரோஷனைப் பின்னுக்குத் தள்ளி, அந்த மம்முட்டி, மோகன்லாலின் நான்கு பட சாதனைகள் லிஸ்ட்டில் சூர்யா முதல் ஆளாக முன்னேறி, மூன்றாவது இடத்தைப் பெறப்போவது உறுதி.

ஆனால் இந்த ஆண்டே க்ரிஷும் எடுக்கப்பட்டால் ஹிருத்திக் ரோஷனுக்கும் அந்த சாதனையை நிகழ்த்தும்  வாய்ப்பு இருக்கிறது. ஹூம்ம்..  இந்த ரேஸில் ஜெயிக்கப்போவது பாலிவுட்டா, கோலிவுட்டா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

- ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு