தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பேங்க் ஆபீசர்ஸ்! | Interesting bank officers characters on tamil cinema

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (12/11/2016)

கடைசி தொடர்பு:13:44 (12/11/2016)

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பேங்க் ஆபீசர்ஸ்!

'எனக்கு அப்போலல ஆள தெரியும்' என்பதுதான் போன வாரம் வரைக்கும் டிரெண்டி ஸ்டேட்மெண்ட். இந்த வாரம் "எனக்கு பேங்க் ஆஃபீஸர தெரியும்".

புதிய நோட்டுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டவுடன் சில்லறை வாங்க, பழைய தாள்களை மாற்றுவதற்கு என ஒவ்வொருவரும் வங்கிகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். போனதும் வேலையை முடித்துவிட்டு வந்துவிடலாம் எனப் பார்த்தால் கூட்டம் வரிசைகட்டி நின்றிருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஆபிசர்களை சமாளிக்க தனித்திறமைகளை வளர்த்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. அப்படி தமிழ் சினிமாவில் வந்த சில வித்யாசமான ஆபிசர் கதாபாத்திரங்களை பற்றிய சின்ன தொகுப்பு இங்கே.., 

பாஸ் என்ற பாஸ்கரன் :
எல்லோரையும் போலவே " தம்பி என்ன செய்றிங்க? " எனக்கேட்டு நாமே லோன் வேண்டாம் எனச் சொல்லும் வரை நன்றாக கலாய்த்து அனுப்புவார். 

பேங்க்

சின்ன வீடு :
"ஒரு சின்ன சமாச்சாரம்" என எப்போதும் கடலை போட்டுக் கொண்டு இருக்கும் விவகாரமான ஆபிஸர் இவர்.

எலி :
நம்ப அவசரம் புரியாமல் சலானை சரியாக ஃபில் பண்ண வைத்து நாள் முழுவதும் என்டேர்டைன்மென்ட் பண்ணுவார்.

நீ வருவாய் என :
எப்போதும் தன் கவுன்டர்களால் வங்கியை கலகலப்பாக வைத்திருக்கும் ஜாலி ஆபிஸர் இவர்.

 

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா :
அடிக்கடி இங்கிலீஷில் பழமொழி சொல்லி அதை தமிழில் டிரான்ஸிலேட் பண்ணும் அழகே ரகளையாக இருக்கும். There is no use in playing violin in back of a buffalo. 

நண்பேன்டா :
ஸ்லோ மோஷனில் அவங்க வேலை செய்யும் அழகை ஹீரோ பார்த்துக்கொண்டிருக்க அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்வது என்னவோ 'நண்பேன்டா' நண்பன் தான். 

பேங்க்

எவனோ ஒருவன் :
சரியாக ஆவணங்கள் கொடுக்கப்படாமல் லோன் கேட்டுப் போனால் ஆங்கிரி பேர்டாகும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் இவர்.

பேங்க்     

ருத்ரா :
இப்படி ஒரு ஜாலியான கொள்ளை சீனை மறந்தவர்கள் கூட இந்த ஆபிஸரை மறந்திருக்க மாட்டார்கள். 

பேங்க்

சந்தோஷ் சுப்பிரமணியம் :
தன் சொந்தக் கால்ல நிற்க வேண்டும் என லோன் கேட்டு செல்லும் ஹீரோவிடம் "ஓ அவங்க பையனா நீங்க" என கேட்பதோடு அவருடைய அப்பாவுக்கும் போன் போட்டு போட்டுக் கொடுப்பார்.

பேங்க்

சூது கவ்வும் :
பாவம், கொஞ்சம் பதட்டமான மேனேஜர். கோபப்படுத்தாமல் வேலையை முடித்துக் கொண்டு வருவது அவரின் உடல்நிலைக்கு நல்லது. 

பேங்க்

- க. பாலாஜி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்