Published:Updated:

ஹீரோக்களே... தியேட்டர்ல படம் பார்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?!

ஹீரோக்களே... தியேட்டர்ல படம் பார்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?!
ஹீரோக்களே... தியேட்டர்ல படம் பார்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?!

கைல இருக்கிற பழைய 500, 1000 எல்லாத்தையும் `பொதுநலன் கருதி` ஒரு வாரம் பேங்க் வாசல்ல நின்னு மாத்திட்டு, அப்பறம் தியேட்டர் கவுன்ட்டர்ல போய் அங்கேயும் லைன்ல நின்னு, புக் பண்ண டிக்கெட் எல்லாம் போக மிச்சம் இருக்கிற ஒண்ணு ரெண்டு டிக்கெட்ல ஒன்னை வாங்கி தியேட்டர் உள்ள போய் உட்கார்ந்தா, அப்பயாவது நம்மளை நிம்மதியா படம் பாக்க விடுவானுங்கனு நினைக்கிறீங்க, நெவர். கொடுமை கொடுமைனு பேங்குக்குப் போனா அங்க ஒரு கொடுமை ஐநூறோட நின்ன மாதிரி தியேட்டர்ல எந்த நல்ல சீனையும் பாக்க விடாம டார்ச்சர் பன்ணுவாங்க. இதான் பாஸு நம்மளை தியேட்டர்ல படம் பாக்கவிடாம தடுக்கிற அந்த தீயசக்திகள். எங்களை ஒழுங்கா படம் பார்க்கவிடுங்கடா.

* படம் ஆறு மணிக்கே ஆரம்பிக்கும்னு போட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு தியேட்டர்ல போய் உட்கார்ந்தா, `குடி குடியைக் கெடுக்கும்`, `புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு`, `சாப்பிடும் முன் கை கழுவவும். சுத்தத்தை நோக்கி மேலும் ஓர் அடி` னு ஆரம்பிச்சு ஊர்ல உள்ள சொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரம் எல்லாத்தையும் போட்டு ஆறே முக்காலுக்குப் பொறுமையா படத்தை ஆரம்பிப்பாங்க. பாவம் படம் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே தியேட்டர்ல உள்ள பாதிப் பேர் தூங்கி இருப்பாங்க. #முடியட்டும்_விடியட்டும்_டும்.

* படம் என்னதான் லேட்டா ஆரம்பிச்சு இருந்தாலும் கடைசி வரைக்கும் கூட்டம் வந்துகிட்டேதான் இருக்கும். தியேட்டர் முழுக்க மிஷ்கின் படம் கணக்கா இருட்டா இருக்கிறப்போ யாராவது மொபைல்ல லைட் அடிச்சு சீட்டைத் தேடிக்கிட்டே இருப்பாங்க. இதில் நிறையப் பேரு படம் முடிஞ்சுதுக்கு அப்புறமும் சீட்டைத் தேடிக்கிட்டேதான் இருப்பாங்க. #சீட்_எங்கடா?

* படத்துல எதாவது ஒரு நல்ல லவ்வபிள் லவ்வாங்கி சீன் வர்றப்போதான் பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற புருசன், பொண்டாட்டி ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்க. அங்கே லவ் டயலாக் கேட்கிறதா இல்லை இங்கே சண்டை போடுறதைக் கேட்கிறதானு டவுட்டாவே இருக்கும். இந்தச் சண்டையை பார்த்த பிறகும் நமக்கு எங்கே இருந்து லவ் மூட் வரது. #லவ்வுன்றவன்_நீ_யாருடா?

* ஆச்சர்யமா ஊர், உலகம் மொத்தமும் அமைதியா படத்தை மட்டும் பார்த்தாலும் இந்த விமர்சனம் எழுதுற குருப்ஸ் மட்டும் படத்தையும்,  மொபைல்லையும் மாற்றி  மாற்றி பார்த்துக்கிட்டே இருப்பாங்க. கண்ணால ஸ்கிரீனைப் பார்த்துக்கிட்டே கையால விமர்சனம் எழுதிட்டு  இருப்பாங்க. தியேட்டர் இருட்டா இருக்கிறதைக்கூட லைட்டிங்கே சரி இல்லை பாஸ்னு எழுதுவாங்க. #ரொம்ப கெட்டப்பசங்க சார் இந்த  ரிவ்யூவர்ஸ்.

* ஹீரோ திடீர்னு வில்லன்கிட்ட ஹஸ்கி வாய்ஸ்ல அமைதியா பேசிக்கிட்டு இருக்குறப்போதான் யாரோட பழைய கொரியன் மொபைல்ல  `அடி ஆத்தாடினு` சத்தமா ரிங் அடிக்கும். போனை அட்டெண்ட் பண்ணவன் நமக்கு மட்டும் இல்லாம ஸ்கிரீனுக்குள்ளாற இருக்கிற  ஹீரோவுக்கே கேட்கிற அளவுக்கு சத்தமாப் பேசுவாங்க. #காதுமா_ஆர்_யூ_ஓகே_பேபி?

* இந்தப் பேய் படத்துக்கு மட்டும் பொண்ணுங்ககூட போயிடவே கூடாது பாஸு. எல்.கே.ஜி. பையன் பயப்படாத சீனுக்குக்கூட        காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டே இருப்பாங்க. தமிழ் சினிமாவில் எவ்ளோதான் பேயை காமெடி பீஸா காட்டினாலும் அதுக்கும்  `ஆஆஆனு` பழைய ஹீரோயின் கணக்கா வாய்ல கையை வெச்சு சத்தம் போடுவாங்க. #எதுவும்_காரண காரியமில்லாமல்_நடக்கும்.

* படத்துல நடிப்புக்காக ஹீரோ ஆஸ்கார் அவார்டே வாங்கி இருந்தாகூட பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறவன் இது சரி இல்லை, அது சரி  இல்லை `ஏ.டி.எம்.ல பணம் வரலை, ஹீரோவுக்கு நடிப்பே வரலை'னு ஏதாவது காலை வணக்கம் கமென்ட் கணக்கா சொல்லிக்கிட்டே  இருப்பாங்க.  #நீங்க எல்லாம் எங்கே இருந்து பாஸ் வர்றீங்க?

* படத்துல ஒரு நல்ல ட்விஸ்ட் வர்றப்போதான் பக்கத்துல ஒருத்தன் ஏற்கெனவே படத்தைப் பாத்துட்டு வந்து `அடுத்த சீன் இதுதான்  மாப்புள'னு மொத்தக் கதையையும் சொல்லிட்டு இருப்பாங்க. படத்துல டைரக்டருக்கே தெரியாத சீனலாம்கூட இவங்க ஞாபகமா  சொல்வாங்க. அதெல்லாம் சரி... பாகுபலியை கட்டப்பா ஏன் பாஸு கொன்னார்? #சொல்லுங்க_சொல்லுங்க.

* நாம் என்னதான் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்கே தனியா போனாலும் மத்த எல்லாரும் 'நடுநிசி நாய்கள்' படத்துக்குக்கூட  ஜோடியாதான் வருவாங்க. தியேட்டர் வாசல்ல ஜோடி ஜோடியா எல்லாரும் செல்ஃபி எடுக்கிறப்ப நாம மட்டும் ஹீரோயின் போஸ்ட்டர்கூட  செல்ஃபி எடுப்போம். #தனிமையிலே_சினிமா_பாக்க_முடியுமா?

* நீங்க என்னதான் தல, தளபதி ஃபேனா இருந்தாலும் சரி... ரசிகர் மன்ற ஷோவுக்கு மட்டும் போய்டாதீங்க. அதையும் மீறி போனீங்கனா  படத்தோட கதையை மறுநாள் விமர்சனத்துல படிச்சுக்குங்க ப்ரோ.

அது சரி, இதனால தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு நாங்க சொல்ல வர்ற கருத்து என்னன்னா, இவ்ளோ கஷ்டப்பட்டு படம் பார்க்கிறோம். அதுக்காகவாவது கொஞ்சம் ரசிக்கிற மாதிரி படம் எடுங்க ஜி!

-லோ.சியாம் சுந்தர்