Published:Updated:

நாலு பேரும் 'அச்சம் என்பது மடமையடா' படமும்!

நாலு பேரும் 'அச்சம் என்பது மடமையடா' படமும்!
நாலு பேரும் 'அச்சம் என்பது மடமையடா' படமும்!

நாலு பேரும் 'அச்சம் என்பது மடமையடா' படமும்!

'அச்சம் என்பது மடமையடா' படமே வந்தாச்சு. காதல் திரைப்படமா? திரில்லர் திரைப்படமா? எனக் குழப்பம் வந்தாலும், சோஷியல் மீடியாவில் பல விதமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப்படத்த பத்தியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது!

ரொமான்டிக் ரெமோ :

லவ் சப்ஜெக்ட்டை ரசிக்கிற மாதிரி எடுக்க தமிழ்ல மணிரத்னம், ஜி.வி.எம் இவங்க ரெண்டு பேரையும் விட்டா ஆளே இல்லை. அதுவும் இந்தப் படத்துல சிம்பு - மஞ்சிமா கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது. ஹைவேல பைக் ரைட், லாங் ட்ராவல் - இதுதான் இப்போ இருக்கிற யங்ஸ்டர்ஸோட கனவு. அதை அப்படியே கொண்டு வந்ததுக்காகவே லவ் யூ கெளதம். இந்தப் படத்துக்கு ரஹ்மானை விட்டா, யாராலேயும் மியூஸிக் பண்ணவே முடியாது. முதல் பாதிலேயே எல்லாப் பாட்டும் வந்துடுது. ஆனாலும் யாரும் சீட்டை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அவ்ளோ சூப்பரா இருக்கு. ரெண்டாவது பாதி கொஞ்சம் இழுவைதான். ஆனாலும் பார்க்கலாம். கண்டிப்பா பாருங்க!

ஸ்ட்ரிக்ட் சேஷாத்ரி :

கெளதம் மேனன் படங்கள்னாலே லவ் போர்சன் அழகா இருக்கும். இதுலேயும் நல்லாதான் இருக்கு. முதல் பாதிலயே 5 பாட்டும் முடிஞ்சிடுது. ஒரு கட்டத்துல படத்துல வர்ற எந்த கேரக்டர் எழுந்திரிச்சு நின்னாலும், பாட்டு வரப்போகுதோன்னு பயம் வர ஆரம்பிச்சிருச்சு. ஹீரோ வீட்லேயே ஹீரோயின் ஒண்ணா தங்கறதைக்கூட பொறுத்துக்கலாம். சிம்பு சட்டை போடுறப்பல்லாம் ஹீரோயின் அவர் ரூம்ல கதவைத் தட்டாம நுழையறதையும்கூட பொறுத்துக்கலாம். ஆனா ஹீரோவோட பேரே தெரியாம ஹீரோயின் லவ்ல விழறதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ். 'விசாரணை' எஃபெக்ட்ல இந்தப் படத்துலேயும் மொட்டைத்தலை போலீஸ்தான் வில்லன். மகாராஷ்ட்ராவில் அவரைத் தவிர வேற எந்த போலீஸ் கேரக்டரையும் படத்துல காட்டலை. ஹீரோயின் குடும்பம் அட்மிட் ஆன ஹாஸ்பிட்டல்லயும் ஒருத்தரையும் காணலை. பட்ஜெட்ல துண்டு விழுந்துருச்சா? இரண்டாம் பாதியும், க்ளைமாக்ஸ்ல வர்ற ட்விஸ்ட்களும் சுவாரசியமா இருக்கிறதுக்குப் பதிலா கொட்டாவி வர வைக்குது. சிம்புவோட படம் ரிலீஸ் ஆகறதே பெரிய விஷயம்ங்கிறதால தியேட்டர் போய் படத்தைப் பாருங்க பாஸ்!

துப்பாக்கி தனபால் :

சும்மா இது என்னங்க... ரெண்டு பேரும் பைக்ல போவாங்களாம். குறுக்க லாரி வந்து இடிக்குமாம். ரெண்டு பேரும் பறக்கும்போது பாட்டு வருமாம். இந்நேரம் எங்க தளபதியா மட்டும் இருந்திருந்தா, அறுந்து தொங்குற ப்ரேக் வயரை எடுத்து வாய்ல கடிச்சுப் பறக்கப்போற மஞ்சிமாவையும் இன்னொரு கையில் எட்டிப்புடிச்சு 'நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடினு' சாங் போயிருக்கும். மொதல்ல தெய்வமா நினைக்கிற தங்கச்சியோட தோழி நமக்கும் தங்கச்சிதான். இடிக்கிறதுக்கு முன்னாடி ப்ரேக் மேல வைக்கிற நம்பிக்கையை உன் மேல வைனு பன்ச் பேசியிருப்பாரு. தியேட்டரே அதிர்ந்து போயிருக்கும். அப்பறம் சிம்பு அண்டர்கவர் போலீஸாமே! அண்டர்கவர் போலீஸ் ரோல் பண்ணனும். ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணணும்.

ஒப்பீனியன் உலகநாதன் :

படம் பாத்தேன். கெளதம் மேனன் எடுத்த எல்லாப் படங்களையும் மிக்ஸியில அடிச்சு மொத்தமாக குடிக்கக் கொடுத்த ஜூஸ் மாதிரி இருந்தாலும் இதுல என்னவோ புதுசா இருக்கு. சில நேரம் சிம்புவாக, சில நேரம் டி.ராஜேந்தராகனு ஏன் மாறி மாறி சிம்பு நடிச்சுருக்காருனுதான் தெரியலை. ஆனால், அந்த க்ளைமாக்ஸ் சீன் கெளதம் மேனன் படமா, இல்லை சிம்பு நடிச்ச 'ஒஸ்தி' படமானுதான் டவுட்டாவே இருக்குது மக்களே!

அடுத்த கட்டுரைக்கு