• எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவரது குரு கோதண்டபாணி மீது அபரிமிதமான மரியாதைகொண்டவர். அதனால், தன்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு குருநாதர் பெயர் வைத்தார். வாரிசு எஸ்.பி.பி.சரண் தயாரித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால், பொருளாதார சிரமத்தில் தவிக்கிறார் பாலு. அதனால், ஆசை ஆசையாய் கட்டிய கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டரை விலை பேசி வருகிறார்!

• தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருக்கிறது கேயார்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
• 'பாரதிராஜாவைத் தோற்கடிப்பேன்!’ என்று அமீர் சவடால் விடுவதும், சரண்டர் ஆவதும் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்துத் தோற்கடிப்பதுதான் எங்கள் வேலை என்று முரளி, மஜீத் அணி கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி இருக்கிறது. இயக்குநர்கள் சங்கத்தில் பெரும்பாண்மையான வாக்குகள்கொண்ட உதவி இயக்குநர்கள் அனைவரும் பாரதிராஜா, அமீருக்கு எதிர் அணியே!
• 'தமிழ்நாடு காப்பாற்றப்பட்டது’ என்று ரஜினி பேசியதாக, தமிழக அரசு செய்தி வெளியிட்டது. இதைப் பார்த்து கருணாநிதி கடுப்பாவார் என தோட்டம் எதிர்பார்த்தது. ஆனால், நடந்தது வேறு. கோபாலபுரத்தில், ''ரஜினியை எனக்குத் தெரியாதா... திருவாரூருக்கே தேர் காட்டுறாங்கய்யா!'' என்று கூலாக கமென்ட் அடித்தாராம், கருணாநிதி!


• சூதாட்டப் படத்தை சூதானமாகத்தயாரித்து வருகிறார், மதுரைக்காரத் தம்பி. பட வெளியீட்டுக்கு முட்டுக்கட்டை போட முனைந்தனர், கரை வேட்டி கட்டியவர்கள். 'யோவ், டான் நடிகர் அம்மாவுக்கு செல்லம். யாரும் அந்தப் படத்துக்குத் தொல்லையே தரக் கூடாது’ என்று போன் வந்ததாம். அப்புறமென்ன கண்ணீர் புகையைக் கண்டது மாதிரி கலைந்துபோனார்களாம்!