Published:Updated:

இணையத்தில் வெளியாகும் சைத்தான், ’ரசிகர்களே விநியோகஸ்தர்கள்’ -சூர்யா திட்டம்! #QuickSeven

Vikatan Correspondent
இணையத்தில் வெளியாகும் சைத்தான்,  ’ரசிகர்களே விநியோகஸ்தர்கள்’ -சூர்யா திட்டம்! #QuickSeven
இணையத்தில் வெளியாகும் சைத்தான், ’ரசிகர்களே விநியோகஸ்தர்கள்’ -சூர்யா திட்டம்! #QuickSeven

 தமிழ்சினிமாவில் இதுவரை நடந்திராத புதுமுயற்சியை சூர்யா நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். ஹரி இயக்கத்தில்  டிசம்பர் 16ல் வெளியாகவிருக்கிறது சிங்கம் 3. இப்படத்துக்கான (கேரளா) திருச்சூர் பகுதியின் விநியோக உரிமையை, சூர்யாவின் ரசிகர் மன்றமே கைப்பற்றியிருக்கிறது. ரசிகர்களாக முதல் நாள் காட்சியை பார்ப்பது, பாலபிஷேகம், போஸ்டர், பேனர் என்று மட்டுமில்லாமல்,  அவர்களுக்கான வருமானத்துக்கும் இது கைகொடுக்கும் என்பதால் பாராட்டப்படவேண்டிய விஷயம் தான்.

 “ஓரம்போ” , “வா” படங்களைத் தொடர்ந்து, புஷ்கர் காயத்ரி இயக்கும் மூன்றாவது படம் “விக்ரம்-வேதா”. விஜய்சேதுபதி, மாதவன் மற்றும் “கிருமி” கதிர் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வரலட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். "ஆரண்யகாண்டம்" பட ஒளிப்பதிவாளர் விநோத் மற்றும், "புரியாதபுதிர்" பட இசையமைப்பாளர் சாம் உள்ளிட்டோர் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து தொடங்கவிருக்கிறது. 

 “அச்சம் என்பது மடமையடா” ரிலீஸாகாமல் தள்ளிப்போன நாட்களில் தனுஷை வைத்து “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் முக்கால் பாக படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கெளதம். வில்லன் மற்றும் இசையமைப்பாளர் பற்றியான எந்த தகவலையும் வெளியிடமால் சீக்ரெட்டாக வைத்திருக்கிறது படக்குழு. இசையமைப்பாளரே இல்லாமல் படத்துக்கான ஐந்து பாடல்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கெளதம். பாடல்களே இல்லாமல் படப்பிடிப்பு எப்படி சாத்தியம் என்றே குழம்புகிறது சினிமா வட்டாரம், ஆனால் பாடல்கள் எப்படி அமையவேண்டும் என்ற கற்பனையிலேயே படப்பிடிப்பையும் கெளதம் முடித்துவிட்டாராம்.   

 ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி எப்பொழுது நடிப்பார் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கும்.  கபாலி சாயலில் இல்லாமல், புது ஸ்கிரிப்டாக கூட இருக்கலாம். அதற்கான பணிகளில் ரஞ்சித் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஷங்கர் 2.0 படப்பிடிப்பிலும், தனுஷ் தன்னுடைய படங்களில் பிஸியாக இருப்பதாலும் ரஜினி-ரஞ்சித் படம் பற்றி எந்த தகவலையும் வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.  இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

 இந்தவாரம் 17-ம் தேதி ரிலீஸாகவேண்டிய விஜய்ஆண்டனியின் “சைத்தான்” டிசம்பர் 2ல் ரிலீஸ். ரிலீஸ் தள்ளிப்போனதால் புதுமுயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது சைத்தான் டீம். ரிலீஸாகவிருந்த நவம்பர் 17ல் இப்படத்தின் முதல் ஐந்து நிமிடத்தினை, யூடியூப்பில் பதிவேற்றவிருக்கிறார்கள். படம் தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டவும் இந்த ஐந்து நிமிடம் கைகொடுக்குமாம். தெலுங்கிலும் அதே ஃபார்முலாவை அப்ளை செய்து, டிசம்பர் 2லே ரிலீஸ் செய்ய திட்டம். 

 எந்திரன் 2, ரோபோ 2.0 அல்லது 2.0 எப்படியென்றாலும் ஓகே... ஆனா சீக்கிரம் ரீலிஸ் பண்ணுங்க ஜி! படத்தில் சும்மாவே வெரைட்டி காட்டும் ஷங்கர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையே பிரம்மாண்ட திருவிழாவாக நடத்தவிருக்கிறார். வரும் 20-ம் தேதி மும்பையில் 2.0 படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகளும் துரிதமாக நடந்துவருகிறதாம். இந்தப் படத்துக்காக லைக்கா நிறுவனம் ஒதுக்கியிருக்கும் மொத்த பட்ஜெட் 350 கோடி... அம்மாடியோவ்

பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட  சிக்கலினால் தள்ளிப்போகி. கடந்தவாரம் ரிலீஸாகவேண்டிய “கடவுள் இருக்கான் குமாரு”, இந்த வாரம் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு நாள் தள்ளிப்போகி நவம்பர் 18-ம் தேதி ரிலீஸ் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.  அதுமட்டுமின்றி ரிலீஸுக்கு தயாராகி தள்ளிப்போன படங்களான “கவலைவேண்டாம்” நவம்பர் 24-ம் தேதியும், விஷ்ணுவிஷால் நடிக்கும் “மாவீரன் கிட்டு” டிசம்பர் 1-ம் தேதியும், “சைத்தான்” டிசம்பர் 2-ம் தேதியும் வெளியாகும். கத்திசண்டையின் ரிலீஸ் தேதி நாளைக்கு முடிவாகும் என்கிறது கோடம்பாக்கம். 

- பி.எஸ்-