Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`சினிமாவுல இதெல்லாம் திரும்ப நடந்தா நல்லா இருக்கும்ல?!` #OneTimeWonders

தமிழ் சினிமாவில் சில பேர் ஒரே பாட்டுலேயோ, படத்துலேயோ நல்லா ஃபேமஸ் ஆகிட்டு அப்பறம் திடீர்னு இருந்த இடமே தெரியாம காணாமப் போய்டுவாங்க. இவங்களோட பெர்ஃபார்மன்ஸ் என்னதான் எல்லோருக்கும் பிடிச்சிருந்தாலும் ஏனோ அவங்க ஃபீல்ட் அவுட்டாவே இருப்பாங்க. இந்த மாதிரி காணாமல் போன பல பேரை அதுக்குப் பிறகு பார்த்திருக்கவே மாட்டோம். இதோ லிஸ்ட். நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.

மீனாட்சி சேஷாத்திரி :

'டூயட்' படத்துல `அஞ்சலி அஞ்சலி` அப்படினு பிரபுகூட டூயட் ஆடிய அழகான ஹீரோயின்தான் மீனாக்‌ஷி சேஷாத்திரி. அந்தப் படத்துல அவங்களோட நடிப்பையும், அழகையும் என்னதான் நிறையப் பேர் பாராட்டி இருந்தாலும் அதுக்கு அப்புறம் இவங்க தமிழ்ல எந்தப் படத்திலேயும் நடிக்கவே இல்லை. தமிழ்ப் பொண்ணா இருந்தாலும் ஜார்கன்ட்ல பிறந்ததால நிறைய இந்திப் படத்துலதான் நடிச்சு இருக்காங்க.1983-லேயே இந்தியில் அறிமுகம் ஆகினாலும் தமிழ்ல்ல 1994-தான் அறிமுகம் ஆனாங்க. 1996-ல 'கதக்' அப்படிங்கிற இந்திப் படத்தோட மொத்தமா சினிமாவை விட்டே போயிட்டாங்க. இப்போ அமெரிக்காவில் ஃபேமலியோட செட்டில் ஆகிட்டாங்களாம். #கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.

 

ஷாலினி:

ஷாலினியை எல்லோருக்கும் நல்ல நடிகையா மட்டும் தெரிஞ்ச டைம்ல, `சொந்தக் குரலில் பாட`னு அழகா அவங்க சொந்தக் குரல்லேயே பாடி `எனக்கு நல்லாப் பாடவும் தெரியும்`னு ஒரே பாட்டுல நிரூபிச்சாங்க. அந்தப் பாட்டுல அவங்க குரலும் பாடின விதமும் ரொம்பவே பாராட்டப்பட்டது. ஷாலினி நடிப்பை விட அவங்களோட வாய்ஸைத்தான் நிறையப் பேர் கண்டிப்பா மிஸ் பண்ணுவாங்க.

அனிதா :

'அழகிய அசுரா அழகிய அசுரா' அப்படின்னு ஒரு தெறி ரொமாண்டிக் சாங்கைப் பாடிட்டு அதுக்கு அப்பறம் அப்படியே காணாமப் போனவங்கதான் அனிதா. அந்தப் பாட்டு வந்த புதுசுல மட்டும் இல்லை. இப்பவும் நிறையப் பேருக்கு அதான் ஃபேவரைட் சாங். அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா பாடுறதைக் குறைச்சிக்கிட்டு இப்போ டைரக்‌ஷன் பக்கம் போயிட்டாங்க. சீக்கிரமே அடுத்த பாட்டை பாடுங்க அனிதா மேடம்.

 

கஜோல் :

கஜோல் இந்தியில் நிறைய ஹிட் கொடுத்த பின்னால்தான் தமிழ்ல நடிக்க வந்தாங்க. தமிழில் ராஜிவ் மேனன், ரவி கே சந்திரன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, அர்விந்த் சுவாமினு பெரிய கூட்டணியில் நடிச்ச 'மின்சாரக் கனவு' படமும் தாறுமாறு ஹிட் அடிச்சது. அவ்ளோதான் அதோட அவங்களோட கோலிவுட் வாழ்க்கை க்ளோஸ். இப்போதான்சில நாட்களுக்கு முன்னால் இந்தியில் மறுபடியும் 'தில்வாலே' படத்துல ஷாரூக்கான்கூட நடிச்சு கம் பேக் கொடுத்தாங்க. அதே மாதிரி தமிழ்லயும் கம்பேக் கொடுத்தா நல்லாதான் இருக்கும். #வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா?

மல்லிகா ஷெராவத் :

இந்தியில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிகமான படங்களும், சீரியலும் நடிச்சிட்டு கோலிவுட்டையும் ஒரு கை பார்த்திடலாம்னு நம்ம இண்டஸ்ட்ரி பக்கம் வந்துட்டாங்க. கமலோட 'தசாவதாரம்' படத்துல டெர்ரர் வில்லியா நடிச்சதை நிறையப் பேர் பாராட்டினாங்க. ஆனா அதுக்கு அப்பறம் நம்ம ஊர் பக்கம் எட்டில்கூட பார்க்கலை. அப்புறம் 'ஒஸ்தி' படத்துல `கலாசலா` பாடிட்டு மறுபடியும் பாலிவுட்டுக்கே போயிட்டாங்க. சைனீஸ் படத்துல நடிக்கிற மல்லிகா அப்படியே நம்ம கோலிவுட்லையும் நடிக்கணும். #மல்லிகாவைக் கூப்பிடுறோம்.

 

நிவின் பாலி :

மல்லுவுட்ல நிறைய கேர்ள்ஸுக்கு ட்ரீம் பாயா இருக்கிறது நிவின் பாலிதான். கேரளாவில் கிட்டத்தட்ட விஜய்க்கு சமமா ஓப்பனிங் இருக்குற ஒரே ஹீரோ நிவின் பாலிதான். தமிழ்ல இவர் நடிச்ச 'நேரம்' படம் வித்தியாசமா இருந்ததால நிறையப் பேர் அந்தப் படத்தை பாராட்டினாங்க. அந்தப் படத்துலேயே அவர் தமிழ் கேர்ள்ஸூக்கும் ட்ரீம் பாய் ஆகிட்டார். 'பிரேமம்' படத்தைத் தமிழ்நாடே கொண்டாடினாலும் அது நேரடித் தமிழ்ப் படம் இல்லியே ப்ரோ. #வரணும் நேரம் பார்த்து வரணும் சேட்டா.

 

கமலக்கண்ணன் :

'மதுபானக் கடை' 2012-ல் படம் ரிலீஸ் ஆனப்போ நிறையப் பேர் அந்தப் படத்தைப் பற்றிப் பேசவே இல்லை. ஆனால் போகப் போக எல்லோரும் அந்தப் படத்தைப் பாரட்டவும்தான் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு நல்ல படம் கிடைச்சது தெரிஞ்சது. பொருளாதர ரீதியா படம் வெற்றி பெறவில்லைனாலும் நல்ல ரிவ்யூஸ் வாங்கின படம். ஆனா அந்தப் படத்தை எடுத்த கமலக்கண்ணன் அடுத்து படமே எடுக்கலை. #என்னாச்சு ப்ரோ, சீக்கிரமே வாங்க.

பிரியங்கா சோப்ரா :

கஜோல் மாதிரி இவங்களும் ஒரே ஒரு தமிழ்ப் படத்துல மட்டும் நடிச்சிட்டு மறுபடியும் பாலிவுட்டுக்கே போயிட்டாங்க. 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வாங்கினதும் தமிழ்நாட்டுக்கு வந்து விஜய்கூட 'தமிழன்' படம் நடிச்சாங்க. அந்தப் படம் சரியா போகலைன்னதும் பாலிவுட்டுக்குப் போயிட்டாங்க. என்னதான் ஹாலிவுட்ல நடிச்சாலும் முதல் வாய்ப்புத் தந்த தமிழ் சினிமாவுக்கு நீங்க ஒரு வாய்ப்புத் தரணும் சிஸ்.

ஷங்கர் :

ஷங்கரை எல்லோருக்கும் நல்ல டைரக்டராதான் தெரியும். ஆனா அவரும் ஒரே ஒரு பாட்டுக்கு லிரிக்ஸ் எழுதி இருக்கார். 'காதலன்' படத்துல 'பேட்டை ராப்' னு ஏ.ஆர்.ரகுமான் மியூஸிக்ல அவர் எழுதின சாங் மாஸ் ஹிட் ஆனது. அதுக்குப் பிறகு அவர் பாட்டே எழுதலை. ஒருவேளை எழுதி இருந்தா நமக்கு ஒரு பிரமாண்ட பாடல் ஆசிரியர் கிடைச்சுருப்பார்.

 

இது போல நீங்கள் சிலாகிக்கும் one time wonder-களை கமெண்ட்டில் பதியலாம் வாசகர்களே..! -

-லோ.சியாம் சுந்தர்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?