Published:Updated:

என்னாச்சு 'கல்யாணம் முதல் காதல் வரை' பிரியாவுக்கு?

Vikatan Correspondent
என்னாச்சு 'கல்யாணம் முதல் காதல் வரை' பிரியாவுக்கு?
என்னாச்சு 'கல்யாணம் முதல் காதல் வரை' பிரியாவுக்கு?
என்னாச்சு 'கல்யாணம் முதல் காதல் வரை' பிரியாவுக்கு?

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மக்கள் பலரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானிஷங்கர் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக செட் ஆனதால் பலரும் இந்த ஜோடிக்கு ரசிகர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக பிரியாவுக்கு. தற்போது திடீரென 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் இருந்து விலகியுள்ளார் பிரியா பவானிஷங்கர். இந்த விலகல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாவுக்குப் பதிலாக வேறொருவர் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருமணம் முடிவானதால்தான் பிரியா சீரியலில் இருந்து விலகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பிரியா சில பேட்டிகளில் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், எதிர்கால கணவரின் போட்டோ இப்போதைக்கு வேண்டாமே எனவும் சொல்லியிருந்தார். மேலும், கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதால் சீரியலுக்கு முழுக்குப் போட்டுவிட பிரியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.