அஜித்தின் 'காட்ஃபாதர்' ரிலீஸ் ஆனதா?

ரிலீஸ்

ஜித்தின் 'காட்பாதர்', ஜெயம் ரவியின் 'சம்திங் சம்திங்' படங்கள் ரிலீஸ் ஆனதா என யாராச்சும் உங்ககிட்ட கேட்டா என்ன சொல்லுவீங்க? அதெல்லாம் ரிலீஸ் ஆகி பல வருஷம் ஆச்சே எப்போ வந்து கேக்குற என்பதாகத்தானே உங்கள் பதில் இருக்கும். நல்லா யோசிச்சு பாருங்க அந்த படங்கள் அதே பெயரிலா ரிலீஸ் ஆகின?.

'காட்ஃபாதர்' வரலாறாகவும் 'சம்திங் சம்திங்' உனக்கும் எனக்குமாகவும் ரிலீஸ் ஆகின. இப்படி வரிவிலக்குக்காக நிறைய தமிழ்ப்படங்கள் தங்கள் படப்பெயர்களை மாற்றியதும், அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தியதும் பலமுறை கோலிவுட்டில் நிகழ்ந்திருக்கிறது. 

மாசு :

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்தபடம் 'மாசு'. மாசு படத்திற்கு முதலில் ’மாஸ்’ என மாஸான டைட்டிலைத் தான் தலைப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் வரிவிலக்கு பிரச்சனையால் மாஸ் என்ற, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகி, அதன்பின் 'மாசு' ஆனது. "மாசுன்னா தூசா?" என கலாய்த்துத் தள்ளினார்கள் நெட்டிசன்கள்.

ரிலீஸ்ரிலீஸ் 

எந்திரன் :

எந்திரனுக்கு முதலில் ஷங்கர் சூட்டியது ரோபோ என்ற பெயரைத் தான். ஆமா, ரோபோவை ரோபோன்னு கூப்பிடறதுதானே சரியாக இருக்கும் என நினைத்தால் அங்கு தான் டிவிஸ்ட். ரோபோ ஆங்கிலப் பெயர் என்பதால் நல்ல தமிழ்ப் பெயரான 'எந்திரன்' எனச் சூட்டியது படக்குழு.

'வ' குவாட்டர் கட்டிங் :

'வ' என்ற தமிழ் எழுத்திற்கு கால் பங்கு என்ற அர்த்தமும் இருக்கிறது என்பதை சாமானியனுக்கு புரிய வைத்ததில் 'வ' குவாட்டர் கட்டிங் படக் குழுவுக்கும் பங்கு இருக்கிறது. குவாட்டர் கட்டிங் என இருந்த தலைப்பை வரிவிலக்குக்காக கூட 'வ'  என ரிலீஸ் செய்தார்கள்.   

ரிலீஸ்

எம் மகன் :

'எம்டன் மகன்' எனச் சொல்லி படப்பிடிப்பை ஆரம்பித்தது படக்குழு. 'எம்டன்' என்ற ஜெர்மன் போர் கப்பலின் பெயரை படத் தலைப்பில் ஏன் வைத்திருக்கிறார்கள் என பலரும் யோசிக்க. போர்க்கப்பல் அளவுக்கு கோபக்கார அப்பாவைத் தான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறோம் எனச் சொன்னார் இயக்குநர். வரி விலக்குக்காக படத்தின் தலைப்பை எம்டன் மகனிலிருந்து ' எம் - மகன் ' என மாற்றினார்கள்.    

 

தொடரி :

வழக்கமாக ஊருக்கு போகும் பொழுது ரயில் பயண ஸ்டேட்டஸ் போடும் தமிழனை 'தொடரியில் பயணம் செய்கிறேன்' என ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய வைத்தது இந்தப் படம் தான். முழுக்க ரயில் சார்ந்த கதைக்கு 'தொடரி' என அட்டகாச தமிழ் தலைப்பு பிடித்து அசத்தியது தொடரி படக்குழு.  

ஐ :

"ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ‘ஐ’களின் ஐ அவள் தானா?" என அழகை பற்றி 'ஐ' படத்தில் வரும் பாடலுக்கு மதன் கார்க்கியின் வரிகள் இவை. ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், விளம்பர உலகின் இன்னொரு முகம் என தோலுரித்துக் காட்டியதோடு கூடவே ஒரு நல்ல தமிழ் தலைப்பையும் வைத்து அழகு பார்த்தார் ஷங்கர்.

வரிவிலக்கு கிடைக்கும் என்பதைத் தாண்டி இப்படி தமிழ்ப் பெயர்களை வைப்பதால் தமிழ் வளர்ந்து விடுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சினிமாவில் நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் தானே..!?

- க. பாலாஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!