Published:Updated:

'நான் யுவன் ஆகணும்!' - "நெஞ்சம் மறப்பதில்லை" செல்வராகவன் (வீடியோ)

'நான் யுவன் ஆகணும்!' - "நெஞ்சம் மறப்பதில்லை" செல்வராகவன் (வீடியோ)
'நான் யுவன் ஆகணும்!' - "நெஞ்சம் மறப்பதில்லை" செல்வராகவன் (வீடியோ)

தமிழில் 8 வருடங்களுக்குப் பிறகு 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மூலம் இணைந்திருக்கிறது செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி. இதற்கு அடுத்து சூர்யா+செல்வா+யுவன், சந்தானம்+செல்வா என எதிர்பார்க்காத காம்போக்களுடன் வரவிருக்கிறார்கள். இந்த நிலையில் #AskSelvaYuvan என்ற ஹேஷ் டேக் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும் யுவன், செல்வராகவனின் பதில்களும் இதோ...

'நான் யுவன் ஆகணும்!' - "நெஞ்சம் மறப்பதில்லை" செல்வராகவன் (வீடியோ)

Prabhuharin Tweeted: 

அடுத்த படம் சந்தானத்துடன்!!! குறிப்பிட்ட ஜானரில் உங்களை அடக்கிக் கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும். ஆனாலும், மக்கள் உங்களிடமிருந்து காமெடி படத்தை எதிர்பார்க்கமாட்டார்களே?

கரெக்ட்டா புடிச்சிட்டீங்க, அது வெறும் காமெடி படமா மட்டும் இருக்காது. ரொம்ப எக்ஸைட்டடா இருக்கும். 8 வருஷத்துக்குப் பிறகு நாங்க இணைந்து பண்ற ரொமாண்டிக் படமா இருக்கும். இடையில் யுவன்... ஒரு '7ஜி ரெயின்போ காலனி' மாதிரி. இன்னிக்கி இளைஞர்களுக்கு ஏற்றமாதிரி ஒன்னா இருக்கும். 

திரவியம் Tweeted:

'நெஞ்சம் மறப்பதில்லை'ய நான் closing the eyesஆக கேட்டால் எந்த அளவிலான அனுபவம் கிடைக்கும்?

closing eyesலாம் இல்லங்க, நீங்க படம் போய் பார்த்து அந்த மியூசிக்க படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் பண்ணனும். ஆனா, இந்த முறை புதுசா ஒரு விஷயம் ப்ளான் பண்ணியிருக்கோம். நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் சவுண்ட் டாராக்ஸை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். இது ரொம்ப நாள் கனவு எனக்கும், செல்வாக்கும். அது இந்தப் படத்தில் நிறைவேற இருக்கு. அதைக் கேட்டு நீங்களும் என்ஜாய் பண்ணலாம்.

hari krish Tweeted:

'கான்' படம் என்ன ஆனது?

'நான் யுவன் ஆகணும்!' - "நெஞ்சம் மறப்பதில்லை" செல்வராகவன் (வீடியோ)

கான் பத்தி நிறைய பேர் கேக்கறீங்க. அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்திருச்சுன்னு நினைக்கறேன். ஏன்னா அதில் எந்தப் பிரச்சனையும் இல்ல. சிம்பு எனக்கும், யுவனுக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். நடக்கும், நடக்கணும்னு நினைக்கறோம். நடக்கும் போது உறுதியா வேற மாதிரி  இருக்கும். 

Suryakrash Tweeted:

"AAA" பற்றி எதாவது அப்டேட்? என்ன மாதிரியான ட்ராக்ஸை நாங்க எதிர்பார்க்கலாம்? சிங்கிள் எப்போ ரிலீஸ்?

AAAல ஒரு சிங்கிள் இப்போ வொர்க் பண்ணிட்டிருக்கோம். பயங்கரமா வந்திருக்கு. நீங்கள்லாம் அதைக் கேட்கணும், என்ன சொல்றது, வித்தியாசம்னு சொல்ல முடியாது. அது ஒரு ஃபன்னா இருக்கும். ரொம்ப சீக்கிரமே அது வெளியாகும்.

Vijay Amirtha Raj Tweeted:

உங்களுடைய படத்தில் யுவன் இசையமைத்த எந்தப் பாடல் உங்களின் ஃபேவரைட்?

தேவதையைக் கண்டேன் பாட்டு. Very firstனா இது காதலா. அதுக்குப் பிறகு இப்போ வரைக்கும் ரொம்ப பிடிச்சதுன்னா 'இதுவரை இல்லாத'.

Ramyuvanian Tweeted:

அண்ணா, புதுப்பேட்டையில் வரும் ஒரு நாளில் பாடல் ஃபேவரைட். அதை யுவனுடன் ஷூட் பண்ணுங்க.

இந்த நிறைய நாளா கேட்டுட்டிருக்காங்க. ஒரு நாளில் வந்து ஒரு வீடியோ வேணும்னு... யுவன் பேசத்துவங்குகிறார், அது நம்பவே முடியாத ஒன்னு. ஒரு பாட்ட இவ்வளோ நாள் ஞாபகம் வெச்சிருக்காங்கங்கறது.... செல்வா தொடர்கிறார், நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா I loved to shoot music video with yuvan and dedicated to our best friend நா.முத்துக்குமார். 

Joys D nd ks love Tweeted:

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பாடல்கள் பற்றி சொல்லுங்க, எப்போ ரிலீஸ்? உங்க கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எத்தனை பாட்டு இருக்குன்னு செல்வா உங்கட்ட சொல்வார். சொல்லுய்யா... மொத்தம் நாலு பாட்டு இருக்கும். அதுல ஒன்ன சர்ப்ரைஸா இருக்கட்டும்னு வெச்சிருக்கோம். ஏதோ நான் மியூசிக் பண்ணமாதிரி என்னக் கேக்குறாரு. அதனால திருப்பி அவரே சொல்லுவாரு எனக் கேமிராவை திருப்புகிறார் செல்வா. 

Rukshan Francis Tweeted:

செல்வா சார், யுவனுக்கு சிறந்த கூட்டணி யாருன்னு ரேட் பண்ணுங்க. செல்வராகவன், விஷ்ணுவர்த்தன், ராம், வெங்கட்பிரபு.

நைஸ் கொஸ்டீன், என்னுடைய கருத்து வெங்கட்பிரபு தான்.

Harrish Naresh Tweeted:

படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ப்ரோ?

ரொம்ப தாழ்மையோட கேட்டுக்கறேன். எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க. ஓப்பன் மைண்டோடு வாங்க. படத்த என்ஜாய் பண்ணுங்க. உங்கள அது திருப்திபடுத்தும்னு நான் நம்பறேன். 

Rajan Radhamanalan Tweeted:

ஜி 500 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?

இந்த நாட்டுலயே பணக்காரரான ரெண்டு பேரோட பேசிட்டிருக்கீங்க. என் பாக்கெட்ல 200 ரூபாய் இருக்கு, ரெண்டு 100ரூபாய் நோட்டு. அவர் கிட்ட அதுகூட இருக்கான்னு தெரியல.... 'என்கிட்ட இல்ல' என யுவன் சொல்லி சிரிக்கிறார். So, we are the richest people in the nation. 

RIMA tweeted:

யுவன் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாள் எது?

ஏப்ரல் 7. என்னோட மகள் பிறந்தநாள், அதே நாள் தான் என் அம்மாவின் பிறந்தநாளும். உங்களுக்கு செல்வா? ஜனவரி 21, அதே தான். என்னோட மகள் லீலவதி பிறந்தநாள். 

Velavan Tweeted:

இன்னுமும் மற்ற இசையமைப்பாளர்களை விட யுவன் தான், உங்களுக்கு சிறந்த இசையைத் தருகிறார் என நம்புகிறீர்களா?

ஆமா, எனக்கு எப்போதும் அந்த நம்பிக்கை இருக்கும். நாங்க ஒன்னா சேர்ந்து எங்க சினிமா பயணத்தை ஆரம்பிக்கும் போது இருந்தே அந்த நம்பிக்கை இருக்கு. என்னுடைய பல படங்களில் அவரின் இசையிலிருந்து நான் இன்ஸ்பையர் ஆகியிருக்கேன். 

Carpe Noctem Tweeted:

நீங்கள் இணைந்து வேலை செய்ததிலேயே சவாலான படம் எது? புதுப்பேட்டை என நினைக்கிறீர்களா?

புதுப்பேட்டை இல்ல. அந்த நேரத்தில் எங்க ரெண்டு பேருக்கும் தேவையான மெச்சூரிட்டியும், புரிதலும் இருந்தது. சவாலானதுனா எங்களுடைய முதல் படம் 'துள்ளுவதோ இளமை' தான். 

Arul Raj Tweeted:

செல்வா சார், நீங்க யுவனை விட்டுட்டுப் போனதுக்கு அப்பறம், இப்போ இணைந்திருப்பது எப்படி இருக்கு? மற்ற இசையமைப்பாளர்களுக்கும் யுவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

ஏன்டா விட்டுட்டுப் போனோம்னு இருக்கு. எங்களுக்குள்ள ஒரு அலைவரிசை இருக்கு. 

அன்பு மதன் Tweeted:

நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ்?

ஆடியோ ரிலீஸ் கூடிய விரைவில். ஆடியோ முழுசா முடிச்சிட்டோம். தேதியை முடிவு செய்ததும் அறிவிக்கறோம். 

Sudheer Tweeted:

உங்களுக்கு ஃபேவரைட் தெலுங்கு நடிகர்?

பவன் கல்யாண், மகேஷ் பாபு.

Nivetha Tewwted:

நெஞ்சம் மறப்பதில்லை உங்கள் இருவருக்கும் எவ்வளவு ஸ்பெஷல்?

இது தான் எங்களுடைய ஸ்பெஷலான மொமண்ட்ஸ்னு என்னால சொல்ல முடியும் என செல்வா சொல்ல,  என்னாலையும் சொல்ல முடியும் என யுவன் சிரிக்கிறார்.

Guhan17 Tweeted:

செல்வா சார்! இப்போது வரும் இளம் இயக்குநர்களுக்கு உங்கள் அறிவுரை?

அறிவுரைனு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா நான் very very young, யுவனும் young தான். அதனால இத வயசான யார்கிட்டயாவது கேட்டா நல்லாயிருக்கும்.

Joys D nd ks love Tweeted:

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு எப்படி?

நீங்க அவரை எஸ்.ஜே.சூர்யாவா பார்க்க மாட்டீங்க. அவரை ராம் சேய தான் பார்ப்பிங்க. ராம் சே உங்களை ஆச்சர்யப்படுத்துவார். 

RJ Tweeted:

புதுப்பேட்டை 2விற்கு வாய்ப்பு இருக்கிறதா?

இதையும் நிறைய பேர் கேட்கறீங்க. புதுப்பேட்டை 2வில் யார் இருக்காங்களோ இல்லையோ... இவர் வேணும் (யுவன்). அவர் கால்ஷூட் குடுத்தா எப்போ வேணாலும் படம் ஆரம்பிக்கும். 

Vengat Saravanan Tweeted:

யுவன், தமிழ் எம்.ஏ படம் பற்றி சொல்லுங்களேன்.

அது எனக்கு மிகவும் பிடித்த ஆல்பங்களில் ஒன்று. எல்லோருக்கும் அந்த பாடல்கள் மிகவும் நெருக்கமானதுனு நான் நினைக்கறேன். ஏன்னா அதில் நாங்க நிறைய விஷயங்கள முயற்சி செஞ்சிருந்தோம்னு நீங்களே சொன்னீங்க. 

ASHWIN Tweeted:

ஒரு நாளில் பாடல் உருவான விதம் பற்றி சில வார்த்தைகள்...

ஒரு நாளில் பாட்டு ஒரு யுனீக் அனுபவம். அந்த டைம்ல எங்களுடை இருவரின் வாழ்க்கையுமே சோதனை காலத்தில் இருந்தது. அதனால எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக்கற மாதிரி ஒரு பாடல் பண்ணலாம்னு சொல்லிட்டு தான் பண்ணியிருந்தோம். அது இவ்வளோ ரீச் ஆன போது தான் புரிஞ்சது எல்லோரும் அந்த சோதனை காலத்தை கடந்து தான் வரணும்னு. 

Blacupt Tweeted:

யுவன், எப்போது நீங்கள் ஆரண்யகாண்டத்தில் செய்தது போன்ற பரிசோதனை முயற்சிகளை செய்வீர்கள்?

அந்த மாதிரி படங்கள் வரும் போது, என்னுடைய எல்லைகளைக் கடந்து வேலை செய்ய காத்திருக்கேன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசை அந்த மாதிரியானதுனு என்னால தைரியமா சொல்ல முடியும். 

ரகு Tweeted:

Woolfell படத்தின் இசை வேலைகளை ஆரம்பித்துவிட்டீர்களா? 

ஹாலிவுட் படத்தில் வேலை செய்யும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். Woolfell நடிகர்கள் தேர்வு செய்வதில் இறுதிகட்டத்தில் இருக்கு. அதன் பிறகு இசை வேலைகளைத் துவங்கணும்.

RIMA tweeted:

உங்களுக்கு சூப்பர் பவர் கிடைக்கும்னா, என்ன பவர் கேட்பீங்க? அதை வெச்சு என்ன செய்வீங்க?

நான் யுவன் ஆகணும்னு ஆசைப்படுவேன். இசையமைக்க ஆரம்பிப்பேன்.

Spark Tweeted:

யுவன் உங்களுடைய ஸ்ட்ரஸ் பஸ்டர் என்ன?

வீட்டுக்குப் போய் என் மகளைப் பாக்கறது தான். அப்படி இல்லைனா இசை. இது இரண்டும் தான். உங்களுக்கு செல்வா?  எனக்கும் வீட்டுக் போறது தான். அங்க போய் என் பொண்டாட்டி திட்டுவாங்க அத கேக்கறது. 

யுவன் செல்வாவின் வீடியோ உரையாடல்:

தொகுப்பு: பா.ஜான்ஸன்