Published:Updated:

தனி வீடும், மர்ம நபரும் நம்மை பயமுறுத்தினார்களா? -Shut in படம் எப்படி?

தனி வீடும், மர்ம நபரும் நம்மை பயமுறுத்தினார்களா? -Shut in படம் எப்படி?
தனி வீடும், மர்ம நபரும் நம்மை பயமுறுத்தினார்களா? -Shut in படம் எப்படி?

தனி வீடும், மர்ம நபரும் நம்மை பயமுறுத்தினார்களா? -Shut in படம் எப்படி?

லைட்ஸ் அவுட், டோன்ட் ப்ரீத் பட வரிசையில் இன்னொரு ஹாரர் படம் 'ஷட் இன்'. ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது போல் தொடங்கி, அந்த மர்மம் என்ன என்ற சுவாரஸ்யம் நம்மை கட்டிப்போடும். 'ஷட் இன்' படமும் அந்த வகைதான். 

சைக்காலஜிஸ்ட் மேரி போர்ட்மேன் (நயோமி வாட்ஸ்) விபத்து ஒன்றில் கணவரை இழந்தவர். அதே விபத்தால் அவரின் மகன் ஸ்டீவன் போர்ட்மேனுக்கு (சார்லி ஹீட்டன்) கழுத்துக்கு கீழ் எந்த பாகமும் இயங்காமல் போகிறது. மகனைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருக்கிறார் நயோமி. வீட்டுக்குள்ளேயே தனிமையில் இருக்கும் நயோமிக்கு சில பிரம்மைகள், கெட்ட கனவுகள் என பலபாதிப்புகள். இதற்கு இடையில் தன் வீட்டுக்கு வரும் சிறுவன் டாம் (ஜேக்கப் ட்ரெம்லே) காணாமல் போகிறான். அன்றிலிருந்து தன் வீட்டுக்குள் மூன்றாவதாக ஒரு நபரின் இருப்பை உணர்கிறார் நயோமி. அது யார்? என்ன நடக்கிறது அந்த வீட்டுக்குள்? 

நடிப்பை  பொறுத்தவரை குறை சொல்லும் படியாக யாரும் இல்லை. நயோமி தன் முகம் முழுக்க சோகத்தை சுமந்து, பயந்து நடுங்கி, அழுது அசத்தியிருக்கிறார். கடைசி இருபது நிமிடம் மட்டும் பெர்ஃபாம் செய்ய வேண்டிய நிலை சார்லி ஹீட்டனுக்கு. ஆனால், 'ரூம்' படத்தில் மெர்சல் செய்திருந்த, செம்ம்ம ஃபெர்ஃபாமரான குட்டிப்பையன் ஜேக்கப் ட்ரெம்லேவை டம்மியாக்கியிருப்பது வருத்தம். இவர்கள் தவிர படத்தில் இன்னும் ஐந்து ஆறு கதாப்பாத்திரங்கள், எல்லோருமே “குட் பாய்ஸ்” கேட்டகிரிதான்.. வீட்டுக்கு வெளியில் பனி, மழை என மாறிக் கொண்டே இருக்கும் வானிலை, வீட்டுக்குள் மெழுகுத்திரி வெளிச்சம் என ஒரு த்ரில்லர் மூட் கொடுத்திருக்கிறது ஏவ்ஸ் ப்ளாங்கரின் ஒளிப்பதிவு. நதாலியன் மெகாலியின் இசை மட்டுமே இந்தப் படம் ஒரு த்ரில்லர் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

தேவாங்கு ஒன்று விழும் இடத்தில் இடி விழுவது போன்ற பின்னணி கொடுத்து பயமுறுத்துவது, இருட்டில் கருப்பாக ஏதோ ஒரு உருவத்தைக் காட்டி கண்சிமிட்டும் நொடியில் மறையவைப்பது, பாதி தூக்கத்தில் திடீரென ஒரு கை வந்து நயோமியின் வாயை அடைத்து ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... என காதருகில் வந்து திகில் கிளப்புவது இப்படியான த்ரில்லர் படத்துக்கே உரிய அத்தனை க்ளிஷேக்களும் படத்தில் உண்டு. அந்த காட்சிகள் திகீர் என இருந்தாலும்... "டேய் நீங்கள்லாம் இன்னும் வளரவே இல்லையாடா" என்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. 

இது தான் அந்த திருப்பம், இது தான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொன்றையும் நெருங்கும் போது, ஹாலிவுட் வட்டாரம் முழுக்க, இந்த வருடத்தின் மிக மோசமான த்ரில்லர் படம் என குறிப்பிட்டது நியாயம் தான் எனத் தோன்றுகிறது. கதாசிரியர் க்ரிஸ்டீனா ஹாட்சனின் மிகவும் பலவீனமான ட்விஸ்ட், சுமாரான திரைக்கதை, இயக்குநர் ஃபரீன் ப்ளாக்பர்ன் கொடுத்திருக்கும் மோசமான த்ரில்லர் அனுபவம் ஆகியவை படத்தின் மிகப்பெரிய குறைகள். இதை தூக்கி சாப்பிடும் த்ரில்லர் எல்லாம் பார்த்தவர்களுக்கு, 'ஷட் இன்' ஒரு பொருட்டாகவே தெரியாது என்பது தான் படத்தின் ரிசல்ட்டும். 

அடுத்த கட்டுரைக்கு