Published:Updated:

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

Published:Updated:
"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!


இசை உலகில் நிகரில்லாத ஓர் ஆளுமை பாலமுரளி கிருஷ்ணா. அவரின் மறைவு ஈடுசெய்யவியலாதது. கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி திரையிசைப் பாடல்கள் வழியாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இவர் பாடிய நூற்றுக்கணக்கான திரையிசைப் பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. கே.வி.மகாதேவன், இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் தமிழில் தன் இறுதிப் பாடலை, தன்னிடம் இசை பயின்ற சிஷ்யை எஸ்.ஜெ.ஜனனியின் இசையில் பாடியுள்ளார்.

தமிழ்த்திரை நிறுவனத் தயாரிப்பில், நந்தன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பிரபா' படத்தில் 'பூவே பேசும் பூவே...' எனும் பாடலை ஜனனியுடன் இணைந்து பாடியிருக்கிறார் பாலமுரளிகிருஷ்ணா. குருவுடன் பணியாற்றிய அனுபவங்களை எஸ்.ஜெ.ஜனனியிடம் கேட்டோம்.

"எத்தனை வருடங்களாக பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றீர்கள்?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பத்து வருடங்களுக்கு மேலாக குருவிடம் இசைக் கற்றேன். பாடலின் வரிகளை அவர் பாடும்போது கவனத்துடன் கேட்டாலே போதும், நாமும் சிறப்பாக பாடிவிட முடியும். அந்த ஆற்றல் அவரின் குரலுக்கு உண்டு. அவர் எனக்கு இசைக்கான குரு மட்டுமல்ல. வாழ்க்கைகான வழிகாட்டி. என்னை குழந்தையைப் போல நடத்துவார்."

"உங்கள் இசையில் அவரைப் பாட வைக்கும் எண்ணம் எப்போது தோன்றியது?"

"பிரபா படத்திற்கான இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தத்தை அவரிடம் கூறியபோது, மகிழ்ச்சியோடு வாழ்த்தினார். பிறகு, பூவே பேசும் பூவே பாடலின் மெட்டு உருவாகும்போதே, இதை குரு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். உடனே குருவிடமும் விருப்பத்தைக் கூறினேன்"

"உடனே சம்மதித்துவிட்டாரா?"

"என் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு அக்கரையுண்டு. அதனால் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தார். பாடல் ஒலிப்பதிவின்போது, பாடல் வரிகளைப் பாடிக் காட்டி, 'இது சரிதானா... மாற்றம் இருந்தால் தயக்கம் இல்லாமல் சொல்லு' என்று கேட்டார். ஆனால் நான் திருத்தம் சொல்வதற்கு ஏதுமில்லாமல் மிக அருமையாக பாடிக்கொடுத்தார்"

பூவே பேசும் பூவே பாடலை இந்த இணைப்பில் 21:45 நிமிடங்களிலிருந்து கேட்கலாம்.

"பாடலைப் பற்றி என்ன சொன்னார்?"

"'ரொம்ப ரொம்ப நல்ல ட்யூன்மா... எளிதில் ஈர்க்கும் விதத்தில் இருக்கு. நிச்சயம் எல்லோரையும் வசிகரிக்கும். பெரிய அளவில் மக்களிடையே இந்தப் பாட்டு செல்லும். உனக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு' என்று சொன்னார். ஒரு குழந்தையின் ஆசையை நிறைவேற்றி தந்த மகிழ்ச்சியுடன் அன்றைக்கு இருந்தார். பிறகு, அவரோடு பயணம் செல்லும்போதெல்லாம் காரில் இந்தப் பாடலைப் போடச் சொல்லி ரசிப்பார். கேட்கும்போதெல்லாம் ' நல்ல ட்யூன்... நல்ல ட்யூன்..' என்பார். இதைவிட எனக்கு பெரிய ஆசிர்வாதம் இருப்பதாக நினைக்கவில்லை"

"அவரின் இழப்பை எப்படி உணர்கிறீர்கள்?"

"என்னிடம் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'எல்லாம் வரும்' என்பதுதான். அதுவே எனக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும். குரு பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, இசை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பேரிழப்புதான். அவரின் இசைக்கு என்றும் அழிவில்லை"

பூவே பேசும் பூவே... பாடலை ஶ்ரீதேவி எழுதியிருக்கிறார். 'இந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா  பாடவிருக்கிறார் என இசையமைப்பாளர் ஜனனி கூறியதிலிருந்து அவர் பாடும் கணத்திற்காக காத்திருந்து ரசித்தேன்" என்றார் இயக்குநர் நந்தன்.

- வி.எஸ்.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism