Published:Updated:

சிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து! - இது யூட்யூப் கணக்கு

சிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து! - இது யூட்யூப் கணக்கு
சிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து! - இது யூட்யூப் கணக்கு

சிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து! - இது யூட்யூப் கணக்கு

இன்று வரை அதிக வீயூவர்ஸ் பெற்று டாப்பில் இருப்பது 'கபாலி' படத்தில் இடம் பெற்ற 'நெருப்பு டா' தான். இது வரை 2 கோடி பேருக்கும் மேலான வியூஸ். ஆனால், அது லிரிக் வீடியோ என்பதால், அதை அப்படியே எடுத்து ஓரமாக வைத்துவிடலாம். இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் எந்த பாடல்கள் (பாடல்கள்) எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்ற டாப் 10 லிஸ்ட் பார்க்கலாமா?

1

படம்: ரஜினிமுருகன்

பாடல்: உன் மேல ஒரு கண்ணு

பாடகர்கள்: ஜிதின் ராஜ், மஹாலக்‌ஷ்மி ஐயர்

பாடலாசிரியர்: யுகபாரதி

இசை: இமான்

பார்வையாளர்கள்: 22,834,878

பாடல் வெளியான போது எஃப்.எம்களிலும், படம் வெளியானதும் எல்லா சேனல்களிலும் இப்போது வரை தேய்ந்து கொண்டிருக்கும் பாடல். யுகபாரதி + டி.இமான் காம்போ இந்தப் பாடலிலும் ஜெயித்தது.

2

படம்: சேதுபதி

பாடல்: கொஞ்சி பேசிட வேணாம்

பாடகர்கள்: சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

பார்வையாளர்கள்:12,620,351

நிவாஸ் கே பிரசன்னாவின் ரொமாண்டிக் இசை, சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அழகு குரல்கள் என செம நம்பர் இது. டப்ஸ்மாஷ், கவர் சாங் என பல பரிமாணங்களிலும் நம் கண்ணில்பட்டுக் கொஞ்சிக் கொண்டே இருந்தது.

3

படம்: அரண்மனை 2

பாடல்: குச்சி மிட்டாய்

பாடகர்: ஆண்டனி தாசன்

பாடலாசிரியர்: ஹிப் ஹாப் தமிழா

இசை: ஹிப் ஹாப் தமிழா

பார்வையாளர்கள்: 8,651,836

படம் வருவதற்கு முன் அரண்மனேய்ய்ய் அரண்மனேய்ய்ய் என அலறிக் கொண்டிருந்த சேனல்கள் எல்லாம் படம் வெளியான பின் குச்சி மிட்டாய் பாட்டை ரிப்பீட்டியது. 

4

படம்: சேதுபதி

பாடல்: ஹவ்வா ஹவ்வா

பாடகர்கள்: கார்த்திக், சைந்தவி

பாடலாசிரியர்: எம்.கே.பாலாஜி

இசை: நிவாஸ் கே பிரசன்னா

பார்வையாளர்கள்: 7,452,050

க்யூட் ஃபேமிலி, நல்ல மெலடி, சின்ன சின்ன மொமண்ட்ஸ் என முழுக்க ஒரு புது கான்செப்டோடு அனைவரையும் ஹவ்வா ஹவ்வா பாட வைத்தது. போலீஸின் குடும்ப பின்னணிக்கு ஏற்றபடி ஒரு மெலடி பாடல். அதனாலேயே ஹிட்டும் ஆனது.

5

படம்: கதகளி

பாடல்: அழகே

பாடகர்: ஹிப் ஹாப் தமிழா

பாடலாசிரியர்: ஹிப் ஹாப் தமிழா

இசை: ஹிப் ஹாப் தமிழா

பார்வையாளர்கள்: 6,370,434

"உன்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி" என்று கேட்சி லைன்ஸ் மற்றும் இசையால் அழகாக்கியிருப்பார் ஹிப் ஹாப் தமிழா. பாடலுக்கு ஏற்றதுபோல விஷுவல்களும் அழகாக விரிகையில் இன்னும் அழகாகும் பாடல்.

6

படம்: தர்மதுரை

பாடல்: ஆண்டிபட்டி

பாடகர்கள்: செந்தில்தாஸ், சுர்முகி

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பார்வையாளர்கள்: 6,120,387

நெடுநாள் கழித்து இதமான கிராமத்து மெலடி என்ற விததிலேயே யுவனின் இசை அனைவரையும் ஈர்த்திருந்தது. கூடவே வைரமுத்துவின் வரிகளும் கூடுதல் பலம் சேர்த்திருந்தது. 

7

படம்: கபாலி

பாடல்: மாய நதி

பாடகர்கள்: அனந்து, பிரதீப்குமார், ஸ்வேதா மோகன்

பாடலாசிரியர்: உமா தேவி

இசை: சந்தோஷ் நாராயணன்

பார்வையாளர்கள்: 6,056,516

இந்த ஆல்பத்தில், ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்டில் முதல் பாடல் பலருக்கும் இதுவாகத்தான் இருக்கும். பிரிவில்.... பிரிவில்... என முடிந்து மாயநதி இன்று எனத் தொடங்கியதுமே கரையவைக்கும் அனந்து, பிரதீப்குமாரின் குரல்கள் ஒரு விதமாக ஈர்க்க, உடன் வந்து ஸ்வேதா மோகனின் குரலும் சேரும் போது அத்தனை இதம்.

8

படம்: தர்மதுரை

பாடல்: மக்க கலங்குதப்பா

பாடகர்: மதிச்சியம் பாலா

பாடலாசிரியர்: மதிச்சியம் பாலா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பார்வையாளர்கள்: 5,723,510

பாடலின் சூழல், கருத்து வேறு வேறு என்றாலும் அந்த இசையமைப்பு கிட்டத்தட்ட ஊரோரம் புளியமரம் பாடலின் இன்னொரு வெர்ஷனாக ஒலிக்கிறது இந்த மக்க கலங்குதப்பா. மிக மெதுவாக ஆரம்பித்து மெதுவாக முடியும் வரை பாடலின் துள்ளல் ஒரு இடத்திலும் குறையாமல் இருந்தது பறை இசை செய்யும் மேஜிக். அதிலும் மதிச்சியம் பாலாவின் குரல் கலகலக்கும்.

9

படம்: ஒரு நாள் கூத்து

பாடல்: அடியே அழகே

பாடகர்: ஷான் ரோல்டன்

பாடலாசிரியர்: விவேக்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

பார்வையாளர்கள்: 5,544,801

சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது, அதனாலேயே மியூசிக் ப்ளேயர்களில் வைக்கப்பட்டது தான் ரிப்பீட் மோட் ஆப்ஷன் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது போன்று வினோத சிந்தனை எல்லாம் வரக் காரணம் அடியே அழகே பாடல். ஷான் ரோல்டனின் ஒரு மென்மையான கரகரப்புக் குரலை வைத்து ஜஸ்டின் வாங்கியிருப்பது வேற லெவல் பாடல். இதன் லிரிகல் வீடியோவையும் விட அதிகம் பார்க்கப்பட்டிருப்பது வீடியோ பாடல் தான். பாடலில் இருந்த அழகை அப்படியே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

10

படம்: தெறி

பாடல்: என் ஜீவன்

பாடகர்கள்: ஹரிஹரன், சைந்தவி

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார், ஆர்.தியாகராஜன்

பார்வையாளர்கள்: 5,184,377

பாடலின் ஆரம்பம் இளையராஜாவின் 'ஒரே நாள் உனை நான்' பாடலை நினைவுபடுத்தி மீண்டும் தன் ட்ராக்கிற்குள் இழுத்துவந்திருப்பார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஹரிஹரன், சைந்தவி காமினேஷன் பக்காவாக போய்க் கொண்டிருக்க இடையில் வரும் வைக்கம்விஜயலட்சுமியின் குரலும் செம ரகம்.

- பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு