Published:Updated:

இப்படிலாம் கூட லவ் புரபோஸ் பண்ணலாம் ப்ரோ..! பிரேமம் மொமென்ட்ஸ்

Vikatan Correspondent
இப்படிலாம் கூட லவ் புரபோஸ்  பண்ணலாம் ப்ரோ..!  பிரேமம் மொமென்ட்ஸ்
இப்படிலாம் கூட லவ் புரபோஸ் பண்ணலாம் ப்ரோ..! பிரேமம் மொமென்ட்ஸ்

இருக்கிறதிலேயே ரொம்பக் கஷ்டமான விஷயம், ஒரு பையன் பொண்ணுகிட்டயோ, பொண்னு பையன்கிட்டயோ லவ் புரபோஸ் பண்றதுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடந்த அழகான லவ் புரபோஸல்ஸ்  ஜிஃப் இதோ!

அலைபாயுதே :

லவ் படம் என்றாலே கண் முன் வந்து நிற்கும் முதல் படம் 'அலைபாயுதே'. இதில் சாக்லேட் பாய் மாதவன் ரயில் புறப்படும் முன் ஷாலினியிடம் சொல்லும் டயலாக் ரொம்ப ஃபேமஸ். ''நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசப்படல, நீ அழகா இருக்கேன்னு நான் நினைக்கல. ஆணா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு''னு டீ சொல்ற மாதிரி சொல்லிட்டுப் போய்டுவார். இந்த புரபோஸ் மணி ஸ்பெஷல்.

வேட்டையாடு விளையாடு :

இதில் உலகநாயகன் கமல் ஹீரோ. இவருக்கு லவ் பண்ண சொல்லிக் கொடுக்கவே தேவையில்லை. ஒரு கல்யாணத்தில் கமல்ஹாஸன், கமலினி முகர்ஜியை சந்திப்பார். இந்தப் படத்தில் இந்த டயலாக் ஃபேமஸ். ''பார்த்த உடனே ஒரு ஸ்பார்க். பட்டுனு சொல்லிட்டேன் ஐ லவ் யூ'' கமலினி ஷாக் ஆகி ''யாராவது கேட்டுடப் போறாங்க''னு சொல்ல அதற்கும் க்யூட்டாக ''வேற யாராவது கேட்கிறதுக்கு முன்னாடி நானே கேட்டுடுறேன் பொண்ணு''னு சொல்ற க்யூட்டான புரபோஸ். 
 

காக்க காக்க :

ரியல் லைஃப் ஜோடி என்பதால் லவ் புரபோஸல் எளிதாகிவிட்டது. சூர்யா, ஜோதிகாவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லி இருவரும் தனியாக நின்று கொண்டிருப்பார்கள். அப்போது சூர்யா, ஜோவைப் பார்த்து ''மாயா உனக்கு என்ன வேணும். நம்ம ரெண்டு பேருக்கும் என்ன இருக்கு?''. அதற்கு ஜோ ''நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும், உங்ககூட சேர்ந்து வாழணும், சிரிச்சுப் பேசணும், சண்டை போடணும்''னு சொல்ல பேக் கிரவுண்டில் ஹாரிஸ் மியூஸிக் ஓட இந்த புரபோஸல் சூப்பர். 

வாரணம் ஆயிரம் :

படத்தில் சூர்யா, சமீராவைக் காதலிப்பார். பின் சமீரா இறந்துவிட சூர்யா, ரம்யாவை சந்திப்பார். பேசிப் பழகிய பின்னர் ஒரு பஸ் ஸ்டாப்பில் இருவரும் மழைக்காக ஒதுங்கியிருப்பார்கள். ''மழை நின்றவுடன் போகலாமா'' என்று ரம்யாவைப் பார்த்து சூர்யா கேட்க. திடீரென்று ரம்யா ''சூர்யா ஐ ய ம் இன் லவ் வித் யூ, ரொம்ப நாளாவே... உனக்கு 17 எனக்கு 15. அப்போதுல இருந்தே'' னு ரம்யா, சூர்யாவை பார்த்து அழகாக புரபோஸ் பன்ற சீன் செம.


சர்வம் :

த்ரிஷா டாக்டராக வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் சென்று ஆரியா ''உங்ககிட்ட தனியா பேசணும்''னு சொல்லி ஒரு காபி ஷாப் போவார்கள். அங்கே சென்று ஆரியா சொல்லும் வசனம் ''நைட் ஆச்சுனா தூக்கம் வர மாட்டேங்குது, கண் மூடினா இருட்டா இருக்கு, கண் தொறந்து பார்த்தா, மேல ஃபேன் ஒடிட்டு இருக்கு, எழுந்து வெளில போய் பார்த்தா யாருமே இல்லை''னு வழக்கமா நடக்கிறதையெல்லாம் திகிலா சொல்லி ''இது எல்லாத்துக்கும் காரணம், நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்''னு சொல்ற சீன் ஆசம்.

தனி ஒருவன் :

இதில் இருவரும் போட்டி போட்டு புரபோஸ் பண்ணுவாங்க. முதலில் நயன்தாரா, ஜெயம் ரவியிடம் ''எனக்கு புரபோஸெல்லாம் பண்ணத் தெரியாது. முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ''னு சொல்லிட்டு ஆரம்பிக்கிற சீனே சூப்பர் டூப்பர். பின் ஜெயம் ரவி, நயன்தாராவிடம் காதல் சொல்ற சீனும் தாறுமாறு தக்காளி சோறு. ''நாம் பேசுவதை சித்தார்த்  கேட்டுக்கொண்டிருக்கிறான். ஐ லவ் யூ'' என்று மிக சீரியஸான காட்சியில் எழுதிக் காட்டுவார்.

வின்னைத்தாண்டி வருவாயா :

சிம்பு,  த்ரிஷாவைப் பார்த்த அடுத்த நொடியே காதல் வந்துவிடும். த்ரிஷா வேலைக்குப் போகும்போது தன் காதலைச் சொல்லிவிடலாம் என்று பின்னாடியே போவார் சிம்பு.  ''என்னைவிட நீ சின்னப்பையன்தான் யாராவது கேட்டால் எனக்குத் தம்பி'' என்று சொல்லிக்கிறேன் என்று சொல்ல அப்போது சிம்பு சொல்லும் டயலாக்,   ''இந்த உலத்துல இருக்க எல்லாப் பொண்ணுங்களையும் என் தங்கச்சியா ஏத்துக்கிறேன் இனிமேல். உன்னைத் தவிர''  ''ஏன்'' என்று த்ரிஷா கேட்க ''ஐ ய ம் இன் லவ் வித் யூ ஜெஸ்ஸி'' னு  லவ் புரபோஸ் பண்ணுவார் சிம்பு.

-தார்மிக் லீ