வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (23/11/2016)

கடைசி தொடர்பு:20:30 (23/11/2016)

'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு!' - ஆர்.ஜே.பாலாஜி

பாலாஜி

'கவலை வேண்டாம்'   படத்தை டீகே இயக்கியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்த யாமிருக்க பயமே படத்தின் இயக்குநர் இவர். ஜீவா, காஜல் அகர்வால், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை லியோன் ஜேம்ஸ். ஏற்கனவே பாடல்கள் எஃப்.எம்மில் ஹிட்டாகி, படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 கவலை வேண்டாம் படத்தின் டீசர்களும் டிரெயிலர்களும் இது ஒரு நியூ ஜென் படம் என்று அறிவிக்கின்றன.பொதுவாக வெள்ளிக்கிழமை  தான் படங்கள் வெளியாகும். புது டிரெண்டாக வியாழக்கிழமையும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.தனுஷ் நடித்த தொடரி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களைத் தொடர்ந்து, கவலை வேண்டாம் படமும்  வியாழன் (நாளை ) அன்று வெளியாகி இருக்கிறது. சில இரட்டை அர்த்த ஒன்லைனர்களுடன் யூத்ஃபுல்லாக குட்டி குட்டி டீசர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அப்படி வெளியான டீசர் ஒன்று இன்று பிரச்னையை கிளப்பியிருக்கிறது

இன்று வெளியான  டீஸரில் ஆர்.ஜே.பாலாஜி,நடிகர் தனுஷ் பற்றிய மீம்ஸை வைச்சு கிண்டல் செய்துவிட்டார்.... என யாரோ கிளப்பி விட, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த விஷயத்தை வைத்து பல மீம்ஸ்கள் சில மணி நேரங்களில் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படம் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டுவதற்காக வெளியிடப்பட்ட டீசரே பிரச்னைக்குள்ளானது.

'என்ன பிரச்னை ப்ரோ இது?' என ஆர்.ஜே.பாலாஜியிடமே கேட்டோம்,

" 'கவலை வேண்டாம்' படத்துல வர்ற இந்த சீனை நாங்க பிப்ரவரியில எடுத்தது பிரதர். இதுக்கும் கடைசியாக இரண்டு மாசமாக வர மீம்ஸுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படத்துல வர்ற ஹீரோயின் பேரு திவ்யா. அடுத்து 'மாரி' படத்துல நடித்த காஜல் தான் இந்த படத்திலயும் ஹீரோயின் என்பதால் அதை கனெக்ட் பண்ணினோம். அவ்வளவுதான் இதை ஏன் எவ்வளவு பெரிசு படுத்தறாங்கனு தெரியலையே.  இதை நான்தான் பண்ணினேன்னு சொல்லுறாங்க. படத்துக்கு ஒரு இயக்குநர் இருக்கார், ஒரு பெரிய டீம் இருக்கு. இதை ஃபெர்பார்ம் பண்ணுங்க பாலாஜினு சொன்னால், பண்ணப்போறேன். அவ்வளவுதான். இதை எல்லாம் ஏன் சம்பந்தமே இல்லாம கிளப்பிவிடுறாங்கனு தெரியலை. இங்க எது பண்ணாலும் பிரச்னை செய்யவே ஒரு கும்பல் இருக்கு. அதை சட்டை செய்யாமல், இனிமே சமுதாயத்திற்கு தேவையான விஷயத்தையும் சினிமால எப்படி சேர்க்கலாம்னு பார்க்கப்போறேன்" என்கிறார் அக்கறையாக.
தொடர்ந்து இது போல எதாவது ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருக்கிறது. மீம்ஸ் கலாட்டாக்களை ஜாலியாக எடுத்துக் கொள்ள தான் வேண்டும் என்றாலும் சில சமயங்களில் அது எல்லை மீறி போய்விடுகிறது. பிளாக் டிக்கெட், திருட்டு டி.வி.டி என பல பிரச்னைகளை சமாளித்த தமிழ் சினிமா இப்போது மீம்ஸ்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.விமர்சனம் எந்த ஒரு வடிவில் வந்தாலும் அதை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இணையத்தில் இந்த ட்ரோல் கலாசாரம் அதை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.

 

- சிபி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்