Published:Updated:

யாகம் வளர்க்க திட்டமிட்டிருக்கும் பைரவா படக்குழு!! #Quickseven

Vikatan
யாகம் வளர்க்க திட்டமிட்டிருக்கும் பைரவா படக்குழு!! #Quickseven
யாகம் வளர்க்க திட்டமிட்டிருக்கும் பைரவா படக்குழு!! #Quickseven

வெற்றி மாறன் இயக்கத்தில் 'வட சென்னை', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' 'திருட்டு பயலே' படத்தின் இரண்டாம் பாகம் என செம்ம பிஸி ஷெட்யூலில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் அமலா பால். இவற்றுடன் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கம் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  'ஹெப்புலி' என்ற கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 'அச்சயன்ஸ்' என்ற மலையாளப் படத்திலும் , தெலுங்கில் ஒரு படத்திலும் என ஆல் ஏரியாவிலும் அமலா பால் ரிட்டர்ன்ஸ்!!

********************************************

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் பி.சி.ஸ்ரீ ராம் சங்கத்தில் முன்னாள் பொதுச் செயலாளர் சிவா பல லட்சம் ரூபாய்க்கு சரியான கணக்குகள் கொடுக்கவில்லை எனக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தற்பொழுது சிவா பெப்சி அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை கண்டித்து பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்தத்தை 
அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று எந்த திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

********************************************

னுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை தொடர்ந்து விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கவிருக்கிறாராம் கவுதம்மேனன். முதலில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக  சொல்லப்பட்டு இருவருக்குமான கருத்து வேறுபாட்டால் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. கவுதம் மேனனின் நிறுவனமே படத்தை தயாரிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   'வாலு' பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் விக்ரம்.

********************************************

தாவதொரு பெரிய சிவன் கோயிலில் பைரவர் சாமிக்கு ஸ்பெஷல் யாகம் வளர்க்க திட்டமிட்டு இருக்கிறது 'பைரவா' பட குழு. படம் நல்லபடியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் ஆகணும்னு கடவுளை வேண்டினாலும், ரிலீஸ்க்கு பிறகு 'பைரவா நல்லா இருக்கு?' 'பைரவா சுமாரா இருக்கு'னு என 'பைரவர்' என்ற சாமி பெயரை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்யலாம். அதனால், தயாரிப்பு தரப்பிற்கு எந்த பிரச்னையும் வரலாம் என்ற ஜோசியரின் ஆலோசனைப்படி இந்த யாகம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.     

********************************************

புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பால் பல்வேறு புதிய படங்களின் ரிலீஸ் தேதியும் மாறி இருந்தன. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு நடித்திருக்கும் படம் கத்திசண்டை. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்தது. இப்போது இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'பைரவா' படமும் 2017 ஜனவரி வெளியீடு என ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் சொல்லியிருந்ததால், பைரவாவுடன் கத்திசண்டை போட்டியிடப் போகிறதா என கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

********************************************

யக்குநரும், 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான லட்சுமி ராமகிருஷ்னன் வலைத்தளங்களிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்னன் " சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேற போகிறேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்,
என்னை காயப்படுத்தியவர்களுக்கும், இன்சல்ட் செய்தவர்களுக்கும் என் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.  

******************************************   

ஜித்தை ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். 'வீரம்' பட இயக்குநர் 
சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் தல57 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய விவேக் ஓபராய்.., "ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் 
நடிக்க இருக்கிறேன். அஜித் அண்ணாவுடன் இணைந்து நடிப்பதில் உண்மையிலேயே பெருமையடைகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

- க. பாலாஜி 

Vikatan