Published:Updated:

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டனர்

விகடன் விமர்சனக்குழு
நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டனர்
நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டனர்

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பொது செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் நடிகர் சங்க வாயிலில் இருபிரிவினருக்கு மோதல் ஏற்பட்டது. இதில், 21 பேரை கைது செய்தது காவல்துறை. நடிகர் கருணாஸ் காரின் பின்புற கண்ணாடியும் உடைக்கப்பட்டது.