Published:Updated:

ரஜினி, விஜய், அஜித், நயன் நடிச்ச விளம்பரங்கள்ல இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? #RareCommercials

ரஜினி, விஜய், அஜித், நயன் நடிச்ச விளம்பரங்கள்ல இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா?  #RareCommercials
ரஜினி, விஜய், அஜித், நயன் நடிச்ச விளம்பரங்கள்ல இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? #RareCommercials

எப்போதுமே சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் நடிக்கும் விளம்பரம் மக்கள் மத்தியில் பெரிய ரீச் ஆகும். அந்த வகையில் நம் சினிமா பிரலங்கள் நடித்த விளம்பரங்களின் தொகுப்பு இதோ...

ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் நடித்த முதலும் கடைசியும் விளம்பரம் இது தான். கோக்கை தடை செய்திருந்த சமயத்தில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட 'பால்ம் கோலா' பானத்துக்கான விளம்பரம் தான் இது. 

ஏ.ஆர்.ரஹ்மான்:

இந்த விளம்பரம் வந்த போது பலரது செல்ஃபோனும், 4d2, 8d2, 8d2, 4d2, 4a2, 8e2, 8f2, 8e2, 8d2, 4c2, 4e2, 8.d2 என்ற ரிங்டோன் கம்போசிங்களால் சினுங்கியது நினைவிருந்தால் உங்கள் குழந்தைப்பருவம் ஆஸமோ ஆஸம். ரஹ்மான் நடித்த இந்த கமர்ஷியல் செம வைரல். ஆனால் அந்த நாட்களில் வைரல் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லையே!

விஜய்:

விஜய் - கத்ரீனாகைஃப் ஜோடியை நாம் இதில் தான் பார்க்க முடியும். இதே சீரிஸ் விளம்பரங்களை கொஞ்சம் கிளறிப் பார்த்தால் ஸ்ரேயாவையும் நீங்கள் பார்க்கலாம்.  இசை ஹாரீஸ் ஜெயராஜ். இதில் வந்த ஒரு வார்த்தை தான் ஹசிலி-ஃபிசிலி. அது பின்னர் ஆதவன் படத்தில் இடம்பெற்றதை ஹாரீசே பல முறை சொல்லியிருப்பார். இதை இயக்கியதும் ராஜீவ் மேனன் தான்.

டோகோமோ விளம்பரத்திலும் தன் ஸ்டைலில் அசத்தியிருப்பார் விஜய்.

அஜித்:

"பாரு பாரு மியாமி குஷன் பாரு" எனத் தலையை ஆட்டிய படியே என்ட்ரி ஆவார் தல. இது பல முறை ஃபேஸ்புக்கில் நீங்கள் பார்த்தது தான். இதற்குப் பின் வந்ததுதான் ‘முழிச்சுக்கோ சன்ரைஸ் குடிச்சுக்கோ’. சிம்ரனிடம் ப்ரெப்போஸ் செய்ய காஃபி குடித்து ஐடியா பிடிப்பார். அஜித்துடன் வரும் அந்த குட்டிப் பொண்ணை நினைவிருக்கிறதா, ரமணாவில் விஜயகாந்தின் மகளாக வருவாரே... அவரே தான்.

சூர்யா:

 லாங் லாங் எகோ ஒன்ஸ் அப் ஆன் எ டைம் சூர்யா நடித்தது. இதில் ஸ்பெஷல் சூர்யா-மாதவன் காம்போ தான். காரை பார்க்கிங்கில் வரிசையாக நிற்க வைத்து ஹார்டீனில் சைரனை ஒளிரவிட்டதும் மாடியிலிருந்து பூரித்துப் போவார் ப்ரீத்தி ஜிந்தா. இதன் இந்தி வெர்ஷனில் ஷாரூக்கான், சைஃப் அலிகான் நடித்திருப்பார்கள்.

விக்ரம்:

ரயில்  டன்னலுக்குள் நுழையும் டைமிங்கில் விக்ரம் வைத்திருக்கும் கோக் காலியாகும். யார் குடித்தது என்ற சுவாரஸ்ய ட்விஸ்ட் என க்யூட் விளம்பரம்.  நன்றாக கவனித்தால் உள்ளே சமந்தாவும் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

நயன்தாரா:

சினிமா என்ட்ரிக்கு முன் நயன்தாரா நடித்த விளம்பரம். அடையாளமே தெரியாமல் செம அமெச்சூர் விளம்பரம் என்றாலும் நயன் நடித்திருப்பதால் இது கொஞ்சம் ஸ்பெஷல். 

த்ரிஷா:

தாத்தா அவனுக்கு சரியான பேருதான் வெச்சிருக்காரு... என அடிக்கடி டிவியில் ஒளிப்பரப்பான காலம் அது. அப்போது இந்தப் பொண்ணுதான் பின்னாளில் ஜெஸ்ஸியாக மாயம் செய்யப் போகிறார் என யாரும் கணித்திருக்க முடியாது, கௌதம் மேனனே கூட. "எபாங் ஒபாங் ஜபாங்" என்ற ஹார்லிக்ஸ் விளம்பரத்துக்கும் முன் இந்த ஹார்லிக்ஸ் விளம்பரம் தான் மிகப் பிரலம்.

இதற்குப் பின் த்ரிஷா நடித்த பெர்க் விளம்பரமும் செம ஹிட்.

தமன்னா:

இது தமன்னா தானா என ஆச்சர்யம் வரலாம். இதன் தமிழ் வெர்ஷனை தேடிப்பார்த்து கிடைக்காததால் இந்தி விளம்பரத்தையே பகிர்கிறோம்.

ஸ்ரேயா:

 இதன் தமிழ் வெர்ஷனும் சிக்கவில்லை. ஸ்ரேயா நடிக்க வந்த பிறகு இந்த விளம்பரம் நடித்தவர் தானே எனப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், ஸ்ரேயாவுக்கு ஜோடியாக நடித்திருப்பது 'உன்னாலே உன்னாலே' விநய் என்பது எதேச்சையாக பார்த்தபோது தான் கவனிக்க முடிந்தது. இந்த விளம்பரத்தை இயக்கியது பிங்க் படம் இயக்கிய சூஜித் ஸ்ரீகர்.

ஜெனிலியா:

இந்த விளம்பரத்தைப் போலவே, பார்கர் பென் விளம்பரத்திலும் அழகாக இருப்பார் ஜெனிலியா. அதில் அமிதாப்புடன் நடித்திருப்பார்.

தொகுப்பு: பா.ஜான்ஸன்