Published:Updated:

ராதாரவிக்கு ஜேசுதாஸ், விஜய்க்கு தேவா... - முரட்டு காம்பினேஷன் பாஸ்!

ராதாரவிக்கு ஜேசுதாஸ், விஜய்க்கு தேவா... - முரட்டு காம்பினேஷன் பாஸ்!
ராதாரவிக்கு ஜேசுதாஸ், விஜய்க்கு தேவா... - முரட்டு காம்பினேஷன் பாஸ்!

சில பாட்டுகள் கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கும் ஆனா பார்க்கும்போது இந்தப் பாட்டுக்கு நடிச்சவர் இவரா? என்னது இவருக்குப் பாடினது அவரா?னு அப்படியே ஜெர்க் ஆகி நிற்கவைக்கும். சில பாடகர்களோட வாய்ஸ் சில நடிகர்களுக்குப்  பொருத்தமே இல்லாம நம்மை மெரசல் ஆக்கும். அந்த பெர்ரிய்ய்ய லிஸ்ட்டுல இருந்து கொஞ்சூண்டு சாம்பிள்தான் இதெல்லாம்.

*ஜினிக்கு  எஸ்.பி.பி ஓப்பனிங் சாங் பாடினா தெறி ஹிட்டாகும்னு ஒரு குரூப் சொல்வாங்க. ஜேசுதாஸ் சோகப்பாட்டு பாடினா சும்மா அடிப்பொலியா இருக்கும்னு இன்னொரு குரூப் இன்னமும் சொல்லும். அதெல்லாம் கிடையாது ரஜினிக்கு பர்ஃபெக்ட் மேட்சிங்னா அது மலேசியா வாசுதேவன்தான்னு துண்டை விரிச்சுத் தாண்டுற குரூப்பும் இருக்கு. அதெல்லாம் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோம். இத்தனைக் குரல்கள்லயும் மாற்றி மாற்றிக் கேட்டுவிட்டு 'முத்து' படத்துல அந்த 'குலுவாலிலே' பாட்டுக்கு உதித் நாராயணன் ரஜினிக்கு வாய்ஸ் கொடுத்ததை கேட்கும்போது.. தட் ‘கடவுளே கடவுளே’ மொமண்ட்!

*ம்ஜி ஆருக்கும், சிவாஜிக்கும் அவங்கவங்க சொந்தக் குரல்லயே பாடியிருந்தாகூட அந்த அளவு செட் ஆகிருக்குமானு சொல்ற அளவுக்கு சும்மா வளைச்சு வளைச்சுப் பாடி வரலாற்றில் இடம் பிடித்தவர்  டி.எம்.எஸ். அதுலேயும் எம்ஜிஆருக்கு மத்தவங்க குரல் மேட்ச் ஆகிறது ரொம்பவே கஷ்டம். 'ஆயிரம் நிலவே வா' பாட்டுல முதன்முதலா எஸ்.பி.பி எம்.ஜி.ஆருக்காக பாடி ஓரளவு அதை சமாளிச்சிருந்தாலும் இப்பவும் நான்சிங்காவே இருக்கிற பாட்டுனா அது ஜேசுதாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய 'விழியே கதை எழுது' பாட்டுதான். கண்ணை மூடிக்கிட்டு கேட்டா வேற நடிகர் யாரோ அந்தப் பாட்டுக்கு நடிச்சிருந்த ஃபீல்தான் கிடைக்கும்.

* டுத்ததா கார்த்திக் படமான 'சொல்லத் துடிக்குது மனசு' ல வர்ற 'பூவே செம்பூவே' பாட்டுதான். ராதாரவி நல்லாதான் அந்தப் பாட்டுக்கு நடிச்சிருப்பார். ஆனா கரகர குரல்லேயே கரடுமுரடா  நடிச்சுப் பார்த்துவிட்ட ராதாரவிக்கு, பாட ஆரம்பிச்சாலே குட்நைட் ஸ்டேட்டஸ் போட வெச்சிட்டு குப்புறப் படுத்துத் தூங்க வைக்கிற மெல்லிசான கோட்டைவிட மெல்லிய குரலான ஜேசுதாஸ் குரலோட பொருத்தி வெச்சுப் பார்க்கிறதுக்கெல்லாம் எப்படித்தான் மனசு வரும்? நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.

* ப்போ மட்டுதான் இப்படியெல்லாம் இருந்திருக்குதான்னா அதுதான் இல்லை. இப்பவும்கூட விடாமல் துரத்தி வெச்சு செஞ்சுட்டுத்தான் இருக்காங்க. 'யான்' படத்து 'ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே' பாட்டு கோரியோகிராஃபிலாம் செமத்தியா பண்ணிப் பார்க்கவும் நல்லா இருக்கும். அந்த  பெப்பியான வாய்ஸை கேட்கவும் நல்லாருக்கும். ஆனா பார்த்துக்கிட்டே கேட்டீங்கனா 'ஙே' னு ஃபீல் பண்றது கண்கூடாகவே தெரியும் மக்களே. கரகர குரல் கானாபாலாவுக்கும் சாக்லேட்பாய்கூட இல்லை, சாக்லேட் சாப்பிடுற பையன் மாதிரி இருக்கிற ஜீவாவுக்கும் ஒரு மியூஸிகல் காம்போன்னா.. ஸ்ஸ்ஸ்ஸ்

* ல, தளபதிகள் கூட இந்த லிஸ்ட்டுல சிக்காம இருந்ததில்லைனா பாருங்க. யார் பாடினாலும் சரி யார் மியூஸிக் போட்டாலும் சரி  ஆஃப் ல இறங்கி வந்து அடிச்சு ஆடுற ஷேவாக் மாதிரி  அதிரிபுதிரியா பாட்டுகளை  ஹிட் பண்றதுல விஜய் எப்பவுமே கில்லிதான். ஆனாலும்  அவருக்கும் சில நேரம் செய்வினை செவத்தோரமாவே இருக்கத்தான் செஞ்சிருக்கு. உதாரணத்துக்கு 'தெறி’ படத்து  `ஜித்து ஜில்லாடி'  பாட்டு செம ஹிட்டுதான். ஆனா விஜய்க்கு தேவா வாய்ஸ்ங்கிறதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவருங்கணோவ்வ்வ்.

* `வீரம்’ படத்துல தலயோட தலையையும், தமன்னாவையும் பாத்துட்டே இதென்னடா இப்படி ஒரு காம்போவாக இருக்குதுனு நினைச்சு  அந்த ஷாக் அடங்குறதுக்குள்ளேயே  'மூச்சு நிக்குது பேச்சு நிக்குது'னு  அட்னான் சாமி வாய்ஸ் ல அஜித்துக்கு டூயட் சாங் வேற கொடுத்து ஆடச் சொல்லிருப்பாங்க. பாட்டுக்கு நடுவுல 'தங்கமே தங்கமே என்ன ஆச்சு'னு கேட்கும்போதெல்லாம் அய்யய்யோ என்னதான்யா ஆச்சுனு நம்மளுக்கே கேட்கத் தோணும்னா பாத்துக்கோங்களேன் ஃப்ரெண்ட்ஸ்!

- ஜெ.வி.பிரவீன்குமார்.