Published:Updated:

‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive

‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி  ஹன்சிகா  #VikatanExclusive
‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive

ஹன்சிகா... முதல் படத்தில் குஷ்பு. இப்போது சிம்ரன் என தமிழ் ரசிகனுக்காக இளைத்தவர். க்யூட், பப்லி, ரொமாண்ட்டிக் என ஆல் ஏரியாவிலும் ஹிட்டடித்துவிட்டு பேயாகவும் மாறி பதற வைத்துவிட்டார். இந்த ஜூலியட் தான் இப்போதும் தென்னிந்திய படங்களில் மோஸ்ட் வாண்ட்டட் டூயட் பொண்ணு. பார்த்து நாளானதே என மெசெஜ் தட்டினோம். ஒகே என அழைத்தார்.

அடுத்து தமிழில் “போகன்” தானே?

ஆமாம். படம் நல்லா வந்திருக்கு. ரஷஸ் பாத்தேன். ரொம்ப கிளாஸா வந்திருக்கு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம வரவேற்பு. நான், ஜெயம் ரவியும் செம கலாட்டா ஆட்கள். எங்க கூட அர்விந்த்சுவாமி சாரும். ரோமியோ ஜூலியட்ட விட டோட்டலா வேற கலர்ல இருக்கும் போகன். எனக்கு போகன் புது படமாவே தெரில. ரோமியோ ஜூலியட்டோட இன்னொரு ஷெட்யூல் மாதிரி இருக்கு. நமக்கு பிடிச்ச ஆட்களோட வேலை செய்றது எல்லோருக்குமே ஃபன் தானே. இந்த செட்ல தான் நான் நிறைய சிரிச்சேன். தேங்க்ஸ் போகன் டீம். 

உங்கள் ரோல் என்ன?

ஹீரோவை மோட்டிவேட் பண்ற கேரக்டர்தான். ஆனா படத்தோட மெயில் பில்லரே அந்த ரோல் தான். எல்லாம் இருந்த ஹீரோ, எதுவுமே இல்லாத ஆளா மாறிடுறான். அவன மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர்ற பொறுப்பு எனக்கு. 

அர்விந்த்சுவாமி - ஜெயம் ரவி கெமிஸ்ட்ரி தனி ஒருவனில் நன்றாக வொர்க் அவுட் ஆனது. ரோமியோ ஜூலியட்டில் உங்கள் கெமிஸ்ட்ரி அது போல. போகனில்?

என்னோட ஹேர் ஸ்டைலிஸ்ட் என்கிட்ட “ஸ்பாட்ல எப்பவும் ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க. ஸ்க்ரீன்லயும் ரெண்டு பேரொட கெமிஸ்ட்ரி செம” சொன்னாங்க. அது உண்மைதான்.ஜெயம் ரவி ரொம்ப ஃப்ரெண்ட்லி.ஸ்மார்ட் பாய். அர்விந்த் சுவாமி சார் செம குட் லுக்கிங். அவரையும், ஜெயம் ரவியும் ஒண்ணா ஸ்க்ரீன்ல பாக்குறதே பொண்ணுங்களுக்கு ட்ரீட் தான். ஆனா, எங்க ரெண்டு பேரு கெமிஸ்ட்ரி வேற. டபுள் ட்ரீட்னு சொல்லுங்களேன். எதுக்கு சண்டை மூட்டி விடுறீங்க?

வழக்கமாக சுந்தர்.சி படத்தில் நடிப்பவர்களுக்கு கிளாமர் டால் இமேஜ் வரும். அரண்மனைக்கு பிறகு உங்களது நடிப்பு பேசப்பட்டது. என்ன மேஜிக்?

சுந்தர்.சி சார் எனக்கு குரு மாதிரி. எனக்கு அவர் படத்துல பெஸ்ட்தான் கிடைக்கும். அந்த ‘செல்வி’ கேரக்டர் என்னால நடிக்க முடியுமான்னு முதல்ல டவுட்டாதான் இருந்துச்சு. அவர்தான் எனக்காக, எனக்கு ஏத்த மாதிரி அந்த கேரக்டர டிசைன் பண்ணாரு. செல்விக்காக எனக்கு கிடைச்ச பாராட்டுகள் அவருக்குதான். எனக்கு பேய், பேய்ப்படங்கள்னாலே பயம். நான் பார்த்த ஒரே பேய் படம் அரண்மனையாதான் இருக்கும். அரண்மனை 2 பாக்கலையான்னு கேட்காதீங்க. (சிரிக்கிறார்)

புதுசா ஒரு ஹேர் ஸ்டைல் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தீர்களே! என்ன ஸ்பெஷல்?

அதுவா? ஒரு தெலுங்கு படத்துக்காக பண்ணது. Nerd lookனு சொல்வாங்களே. அப்படி இருந்துச்சு. சாங் சீக்வென்ஸ்க்காக ஹேர் செட் டிரை பண்ணோம். என் தலைல புதுசு புதுசா எக்ஸ்பிரிமெண்ட் பண்ணி பாப்பேன். இது நல்லா செட் ஆச்சு. அதான் ட்விட்டரில் ஒரு ஃபோட்டோ தட்டி விட்டேன்.

சோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருக்கிறீர்களே... சமூக வலைதளங்கள் பற்றி உங்கள் கருத்து...

என் ஃபேன்ஸ் கூட பேச, அவங்க நினைக்கிறத தெரிஞ்சிக்க மட்டும் தான் நான் சோஷியல் மீடியாவை யூஸ் பண்றேன்.  நான் ஒருத்தரோட ரசிகரா இருந்தா அவங்கள பத்தி, ஒரு படத்துல என்னலாம் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்க நினைப்பேன். அதையேதான் என் ஃபேன்ஸ்க்கு நான் சொல்றேன். அவ்ளோதான். என் ட்விட்டர் பக்கம் என் ரசிகர்களுக்கானது.

எங்கேயும் காதலில் இயக்குநர்...போகனில் தயாரிப்பாளர்..பிரபுதேவா பற்றி..

பிரபு மாஸ்டர்தான் என்னை தமிழில் அறிமுகப்படுத்தினாங்க. அவர் செம டான்ஸர், ரொம்ப நல்ல மனுஷன்னு என்னை விட தமிழ் மக்களுக்கு நல்லா தெரியும். அவர் வாயால பாராட்டு வாங்குறது பெரிய விஷயம். போகன் படம் பாத்துட்டு ரொம்ப அப்ரீஷியட் பண்ணாரு. தேங்க்ஸ் மாஸ்டர்.

2015 வெற்றிகரமான ஆண்டு...2016 எப்படி?

4 படங்கள் ரிலீஸ் ஆயிடுச்சு. இன்னும் 5,6 படங்கள் வந்துவிடும். அடுத்த மூணு மாசத்துக்கு வீட்டுக்கு கூட போக முடியாத அளவுக்கு நான் பிஸி. பெர்சனலா 2016 எனக்கு நிறைய பாடங்கள் சொல்லிக் கொடுத்திருக்கு.. பாஸிட்டாவாதான் நான் பாக்குறேன்..2017 இதவிட பெட்டரா இருக்கும்.

தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் 90% பேருடன் நடித்துவிட்டீர்கள். நீங்கள் அடுத்து எதிர்பார்க்கும் கேரக்டர் என்ன?

எனக்கு ஸ்க்ரிப்ட் தான் இப்போது முக்கியம். எல்லா கதைகளையும் இப்ப ஒத்துக்கிறதில்லை. செலக்டிவாதான் பண்றேன். எனக்கு அந்த மொமெண்ட்ல, அந்த கேரக்டர் இண்ட்ரெஸ்ட்டா இருக்கணும். அதுதான் என்னை இம்ப்ரெஸ் பண்ணும்.

இந்த வார்த்தைகளை கேட்டதும் உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க..

சந்தோஷம்?

என்னோட வேலை 

பயம்?

 தூங்க முடியாம போயிடுமோன்ற எண்ணம்

திருப்புமுனை?

தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தது

சாதனை?

நிறைய செய்யணும்..

முக்கியமான மனிதர்?

அம்மா

பிடித்த வாசகம்?

YOLO.. you live only once..

நிறம்?

வெள்ளை

உணவு?

இட்லி, தோசை

டைம்பாஸ்?

பாஸ் பண்ண டைமே கிடைக்கலையே ப்ரோ..

என்னது ப்ரோவா??? பேட்டியை முடித்துக் கொள்ளலாம் ஹன்ஸ்!

-கார்க்கிபவா