Published:Updated:

'அவன் சுத்தமான ஷூஸ் போடுறவனா இருக்கணும்!' - கேத்ரின் தெரசா கண்டிஷன் ! #VikatanExclusive

'அவன் சுத்தமான ஷூஸ் போடுறவனா இருக்கணும்!' - கேத்ரின் தெரசா கண்டிஷன் ! #VikatanExclusive
'அவன் சுத்தமான ஷூஸ் போடுறவனா இருக்கணும்!' - கேத்ரின் தெரசா கண்டிஷன் ! #VikatanExclusive

கணிதன், கதகளி படங்களுக்குப் பிறகு கேத்ரின் தெரசாவை தமிழ்சினிமாவில் பார்க்க முடியவில்லையே என்ன தான் ஆச்சுன்னு கேத்ரின் தெரசாவுக்கு வாட்ஸ்  அப்பினால், அதுலயே  பேட்டியை வச்சுக்கலாம்ங்க  என  ரிப்ளை அனுப்பினார், வாட்ஸ் ஆப்பில் டி20 ஆட ரெடியானோம்! 

1. தமிழை மறந்தாச்சா? 

“ யார் சொன்னது? தமிழ் சினிமாவையும்... தமிழ்நாட்டையும் மறக்க முடியுமா? கடம்பனில் ஆர்யாவோட நடிக்கிறேன். சீக்கிரமே சென்னைக்கு வருவேன்.”

2. அக்கட தேசத்தில் என்ன பண்றீங்க ? 

"இப்போக்கூட தெலுங்கு படம் ஒன்னு தான் பண்ணிட்டு இருக்கேன், தாய்லாந்துல இருந்து ஷூட்டிங்கில தான் சினிமா விகடனுக்கு  இப்போ பேட்டி தட்டிட்டு இருக்கேன். சமீபத்தில  சரைனோடு தெலுங்குல பிளாக்பஸ்டர் ஹிட். அந்தப்படத்துல எனக்கு எம்.எல்.ஏ கேரக்டர். ஹீரோயினுக்கு இப்படியொரு வித்யாசமான, போல்டான கேரக்டரை கொடுத்ததுக்காகவே அந்த டைரக்டருக்கு தேங்க்ஸ் சொல்லணும்.  ஆந்திராவுல எனக்கு பெரிய ஃபேன் கிளப்பை ஏற்படுத்திக் கொடுத்த இது தெலுங்கில் கேத்ரின்  கேரியர்ல ரொம்ப முக்கியமான படம் "

3. ஹோம்லியா? மாடர்னா... கேத்ரின்   சாய்ஸ் எது?

“நான் ஒரு என்டர்டெயினர்.  ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் மக்களுக்கு போரடிச்சிடும். நடிக்க ஸ்கோப் உள்ள எந்த கேரக்டரும் எனக்கு ஓ.கே.”

4.   படத்துல   கதை, கேரக்டர், ஹீரோ, டைரக்டர், பேனர்....எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க?

“ஒரு படத்துல கமிட் ஆகும்போது இது எல்லாத்தையுமே பார்ப்பேன். ரொம்ப முக்கியம்னா என்னோட கேரக்டர். முந்தைய படங்களோட சாயல் இருக்கக்கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். அதையும் விட முக்கியம் நான் வொர்க் பண்ற டீம். நல்ல டீம் அமையறதுமே ஒரு அதிர்ஷ்டம்தான்.”

5. நடிகையானது எப்படி? 

துபாய் பொண்ணு நான். பெங்களூர்ல காலேஜ் படிச்சப்பா, போர் அடிச்சதால, என்னோட ஹாபியான மாடலிங்  டிரை பண்ணேன், சத்தியமா நடிக்கணும்னு அப்போ ஆசையே இல்லை. கன்னடத்தில் ஷங்கர் ஐ.பி.எஸ்னு ஒரு பட வாய்ப்பு கிடைச்சது, அப்புறம் தெலுங்கு, மலையாளம் எல்லாம் போயிட்டு தான் மெட்றாஸ் மூலமா தமிழுக்கு வந்தேன். இப்போ ஹேப்பியா இருக்கேன்.

6. மெட்ராஸ் சான்ஸ் பத்தி சொல்லுங்களேன் ! 

" என்னோட படங்கள் பாத்துட்டு, மெட்ராஸ் டீம் என்னை கூப்பிட்டாங்க. டைரக்டர் ரஞ்சித்தை மீட் பண்ணேன், ஃபோட்டோ ஷூட் பண்ணினாங்க. கதையையும், என் கேரக்டரையும் சொன்னார். எனக்கு பிடிச்சிருந்துச்சு. என்னை செலெக்ட் பண்ணதா சொன்னாங்க, 

'மெட்ராஸ்' மாதிரி ஒரு படமும், கலையரசி மாதிரி ஒரு கேரக்டரும் என் எக்ஸ்பீரியன்ஸ்ல ரொம்பவே புதுசு. ”

7. டைரக்டர் பா. ரஞ்சித்...?

“ஆர்ட்டிஸ்ட்டிக் டைரக்டர். ஒரு நடிகையா எனக்கான இடத்தை அனுமதிச்ச அருமையான டைரக்டர். அவர் கொடுத்த அந்த சுதந்திரம்தான் கலையரசி கேரக்டரை பேச வச்சது. அவர்கூட ஒர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே இனிமையானது.”

8. நடிகர் கார்த்தி? 

“முதல் படம் எப்பவுமே ஸ்பெஷல்தானே... அந்த வகையில கார்த்தியும் ஸ்பெஷல்தான். நிறைய கத்துக் கொடுத்தார். இன்னைக்கு நடிகர் சங்கத்தின் பொருளாளராக கலக்கிட்டிருக்கார். பெருமையா இருக்கு.” 

9. கேத்ரின்  ஒரு டான்சராமே... அப்படியா?

“ஆமாம்.. ஐ லவ் டான்சிங். எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்கும். டான்ஸும் மியூசிக்கோட இணைஞ்சதுதானே... அதனாலயே டான்சும் பிடிக்கும். ஒவ்வொரு படத்துலயும் ஒரு டான்சரா என்னை இம்ப்ரூவ் பண்ணிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்....”

10. அல்லு அர்ஜுன் கூட கெமிஸ்ட்ரி ?

அவர் ரொம்ப கூல்... டெடிக்கேட்டட் ஆக்டர். ஹார்ட் வொர்க்கர். டான்ஸ்னா அவருக்கு அவ்ளோ பிடிக்கும். ஷூட்டிங்க்கு முன்னாடி டான்ஸுக்கு ரிஹர்சல் பண்றதையும் பிராக்டிஸ் பண்றதையும் பார்த்து வியந்து போயிருக்கேன்.  அவரோடு டான்ஸ் ஆடின எக்ஸ்பீரியன்ஸ் மறக்க முடியாது. எனக்கு ஸ்பெஷல் டிப்ஸ் தந்திருக்கார் தெரியுமா...!”

11. கிளாமர் பாலிஸி?

“உடம்பைக் காட்டறதுக்குப் பேர் கிளாமர் இல்லை. ஒரு ஹீரோயினை அழகா காட்டற விஷயம்தான் கிளாமர். கலையரசி கேரக்டர் கிளாமர்னு பா.ரஞ்சித் நம்பினார். இத்தனைக்கும் அந்தப் படத்துல எனக்கு மேக்கப் இல்லை. காஸ்ட்லியான டிசைனர் டிரெஸ் இல்லை. ஆனாலும் கலையரசி அவ்ளோ கிளாமரா தெரிஞ்சா. அப்படிப் பார்த்தா என்னோட எல்லா படங்கள்லயும் நான் கிளாமராதான் இருந்திருக்கேன். ஆர்யா கூட இப்ப நடிச்சிட்டிருக்கிற 'கடம்பன்'ல எனக்கு ட்ரைபல் கேரக்டர். இதுவரைக்கும் பார்க்காத கேத்தரினை இதுல பார்க்கப் போறீங்க. ட்ரைபல் கேரக்டர்னாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் என்னை அழகா காட்டப் போற அதுகூட கிளாமர்தான்.”

12.  சென்னையில் பிடித்த இடம் ?

“நார்த் மெட்ராஸ்... 

பீச்...... 

லீலா பேலஸ்ல உள்ள சைனீஸ் ரெஸ்டாரன்ட்.”

13. பிடித்த சவுத் இந்தியன் சாப்பாடு?

“ 'மசாலா தோசை'.

மூணு வேளையும் மசால் தோசை கொடுத்தாலும் நோ பிராப்ளம்.”

14.  அடிக்கடி பேசுற தமிழ் வார்த்தை ?

“சீக்கிரம்... கார்ல ஏறும்போதெல்லாம் என் டிரைவரை சீக்கிரம் போனு சொல்வேன். அதனாலயே அந்த வார்த்தை பிடிச்சிருச்சு.” 

15, ஸ்லிம் சீக்ரெட்ஸ்?

“ஹெல்தி சாப்பாடு... எப்பவாவது ஜங்க் ஃபுட்... ரெகுலர் எக்சர்சைஸ்... நிறைய தண்ணீர்.... நல்ல தூக்கம்.”

16. நடிகையாகாமல் இருந்திருந்தால்?

“ஏர் ஃபோர்ஸ்ல வேலைக்குப் போயிருப்பேன் இல்லைனா.. இங்கிலீஷ் டீச்சராகி இருப்பேன்.”

17. பாய் ஃப்ரெண்ட்ஸ்?

“நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதுல பொண்ணுங்களும் பசங்களும் இருக்காங்க. எல்லாரும் எனக்கு சமம்தான். நீங்க கேட்கற மாதிரியான பாய் ஃப்ரெண்டுக்கு இப்போதைக்கு டைம் இல்லை...”

18. கேத்ரினை இம்ப்ரெஸ் பண்ணணும்னா என்ன குவாலிட்டீஸ் அவசியம்?

“சின்சியரா இருக்கணும். ஹார்ட் ஒர்க் பண்ணணும். புத்திசாலியா இருக்கணும். கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேணும். முக்கியமா சுத்தமான ஷூஸ் போடறவனா இருக்கணும்.”

19. ஃபெமினிசம்?

“நீங்க யாருங்கிற புரிதலும் உங்க மேல உங்களுக்குள்ள நம்பிக்கையும்.”

20. பெட் அனிமல்ஸ் உண்டா?

“ரொம்பப் பிடிக்கும். பிராண்டி, கூப்பர், பச்சஸ்னு மூணு நாய்க்குட்டிகள் வளர்க்கறேன். வீடு இன்னும் பெரிசா இருந்தா நிறைய நாய்க்குட்டிகளை வளர்ப்பேன்.”

-ஆர்.வைதேகி