Published:Updated:

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த  கூட்டம்' படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் செந்தில். ஏழு வருடத்துக்குப் முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில் தவறி விழுந்து முதுகு எலும்பில் அடிப்பட்டு ஏழு வருடங்களாக ஓய்வில் இருந்தவர் செந்தில்.. தற்போது இந்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார், அவரிடம் பேசினோம்,

''இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?''

''ரொம்ப நல்லா இருக்கேன். என்னோட மனைவி, என்ன நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. இப்போ முழு வீச்சுல நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.''

உங்க பசங்க என்ன பண்றாங்க?

''மூத்தவர் மணிகண்ட பிரபு, மருத்துவராக இருக்காப்ல. இரண்டாவது பையன் ஹேமசந்திர பிரபு 'சிறுத்தை' இயக்குநர் சிவா கிட்ட உதவி இயக்குநரா இருக்காப்ல. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. கூட்டுக் குடும்பமா தான் இருக்கோம். மணிகண்ட பிரபுவோட பொண்ணு பேரு மிர்த்தி. அவங்களுக்கு எட்டு வயசு ஆகுது. ஹேமசந்திரனோட பொண்ணு பேரு அஷ்விதா. அவங்களுக்கு மூனு வயசாகுது. என்னோட கஷ்டங்களை சில நேரம் என்னோட பேத்திங்கதான் தீர்க்கிறாங்க.'' 

''இரண்டு பேத்திகளுக்கும் தாத்தா எந்த மாதிரி?''

''இரண்டு பேத்திகளும் நான் வீட்டுக்குப் போனதும் ஓடி வந்து கட்டிப்பாங்க. இரண்டு பேத்திகளோடையும் வாக்கிங் போவேன். தாத்தானா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.''

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

''உங்க வாழ்க்கையில் உங்களுடைய பெஸ்ட் பிரண்ட் யார்?''

''எனக்கு எப்போதுமே என்னோட மனைவி கலைச்செல்விதான் பெஸ்ட் பிரண்ட். எல்லாமே அவங்கதான். நான் ஏழு வருஷமா பெட் ரெஸ்ட்ல இருந்தப்போ என்ன ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கிட்டாங்க. கோயிலுக்குப் போகணும்னாக் கூட என்கிட்ட சொல்லிட்டுத்தான் போவாங்க. என்னோட உலகமே அவங்கதான். அவங்களுக்கும் நான் தான் உலகம். ''

''உங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உங்க மனைவி வந்திருக்காங்களா?''

''இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததே இல்ல. என்னோட எல்லாப் படங்களும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட வாழ்க்கையில நான் வாங்கிய வரம் என்னோட மனைவி. அவங்க இல்லனா நான் இல்ல.''

''இப்பவும் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்களே எப்படி? என்ன வயசாகுது?''

''எனக்கு வயசாச்சுனு யார் சொன்னா? நான் இன்னும் இளமையாதான் இருக்கேன். இன்னும் அதே வேகத்தோட, அதே போலத்தான் நடிக்கிறேன். நடிகர்களுக்கு ஏது வயசு.''

''செந்தில்கிட்ட மத்தவங்களுக்குப் பிடிச்ச விஷயம்?''

'''நான் யாரோட பிரச்னைகளிலும் தலையிட மாட்டேன். நான் உண்டு, என்னோட வேலை உண்டுனு இருப்பேன். இத்தனை வருடங்கள் ஆச்சு, எனக்கு எதிரிகள் என யாருமே இல்ல. எல்லாருமே நல்ல நண்பர்கள்தான்.''

''உங்களோட முதல் திரைப் பயணம்?''

''எங்க ஊர்ல தாத்தா, அப்பா எல்லாருமே மளிகைக் கடை வச்சு நடத்தி வந்தவங்க. எங்க ஊர் ராமநாதபுரம், முதுகுளத்தூர்ல எங்களை கடைக்காரர்னு தான் கூப்பிடுவாங்க. அப்படி இருந்தபோது என்னோட அப்பா என்னை ஒரு முறை திட்டிட்டார். அப்போ பதிமூனு வயசு இருக்கும், கோவிச்சுக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். அப்போ நடிப்புல ஆர்வம் இருந்தது. சென்னைக்கு வந்து பல வேலைகளை பார்த்தேன். அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரோட அறிமுகமாக் கிடைச்சு நாடகத்துல நடிச்சேன். பிற்காலத்துல சினிமா பிரபலங்களா இருந்த பல பேரோட நாடகத்துல நடிச்சிருக்கேன். அப்படித்தான், கவுண்டமணி அண்ணன் கூடவும் பழக்கம். அண்ணனும் நானும் சேர்ந்து நிறைய நாடகங்கள் போட்டிருக்கோம். சினிமாவுக்கு முதல் என்ட்ரி மலையாளத்துலதான். தமிழ் படங்களில் சின்னச் சின்ன ரோல் பண்ணேன். அப்படியே அடுத்தடுத்து என்னோட நடிப்பைப் பார்த்துட்டு வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இதுவரைக்கும் எத்தனைப் படங்கள் நடிச்சிருக்கேனு எனக்கேத் தெரியல. அவ்வளவு படங்கள் நடிச்சிருக்கேன். அதுல நிறையப் படங்கள் கவுண்டமணி அண்ணனோட சேர்ந்து பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு ஓடி வந்ததும், என்னை சமாதப்படுத்தி ஊருக்கு திருப்பிக் கூப்பிட்டாங்க, அப்படி திரும்பிப் போயிருந்தா இன்னிக்கு இந்த செந்திலை நீங்க பார்த்திருக்க முடியாது.'' 

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

''கவுண்டமணி அவர்களிடம் இப்போதும் பேசுவதுண்டா?''

'''கண்டிப்பா. எந்த விஷயமா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லிடுவேன். நாங்க நடிக்க ஆரம்பிச்சப்போ எப்படி பழகினாரோ, அதே போலத்தான் இப்போ வரைக்கும் என்கிட்டப் பழகிட்டு இருக்காரு. அவர் என் வாழ்க்கையில ஒரு சொந்தம்.  என்னை எப்பவும் 'செந்தில்' என பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். நான் கவுண்டமணி அண்ணனை, அண்ண்ணே, அண்ண்ணே'னுதான் கூப்பிடுவேன். 

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 


 

''நீங்க கடவுள் பக்தி உள்ளவரா?''

''எல்லா மதத்தினரும் தானே காசு கொடுக்கிறாங்க.  அதனால எல்லா மதக் கடவுளும் பிடிக்கும்.'' 

''சீரியல் பக்கம் வர ஆசை இருக்கா?''

''நான் ஏற்கெனவே, 'குண்டக்க மண்டக்க' என்கிற ஒரு சீரியல்ல நடிச்சிருக்கேன். இது போல நிறைய டிவில நடிச்சிருக்கேன். அதனால, டி.வியில நடிக்கிறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. இப்பவும், நல்ல கதை அமைந்தா நடிக்க ரெடியாவே இருக்கேன். ''

வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் என்ன வித்தியாசம்?

''பெயர்தான் வித்தியாசம். மத்தபடி இரண்டிலுமே நடிக்கணும். இரண்டிலும் ஒரே மாதிரிதானே நடிக்கப் போறோம்.'' 

''உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள்?''

''குடியிருந்த கோயில்' இயக்கிய கே. ஷங்கரைப் பிடிக்கும். அவர் ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார். பாக்யராஜை அவரோட ஹியூமர் சென்சுக்காக ரொம்ப பிடிக்கும். சுந்தராஜன் அவரோட ரசனை பிடிக்கும். வி.சேகர், ராம நாராயணன் போல பல இயக்குநர்களைப் பிடிக்கும். 

''உங்க சகோதரர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராமே?''

''ஆமா, என்னோட அண்ணன் பாண்டியன், எங்க ஊர்ல இப்போ, எம்.ஜி.ஆர் கட்சி கிளைச் செயலாளரா இருக்கார்.  எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே அவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகர். நானும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு  1989-ம் ஆண்டு சேவல் சின்னத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறேன். அப்போ இருந்த அதே ஈர்ப்பு இப்போ வரைக்கும் அ.தி.மு.கவில் என்ன இணைச்சு வச்சிருக்கு.''

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

''இதுவரையிலும் நடிக்கும்போது கஷ்டப்பட்டு நடிச்சது உண்டா?''

''நான் 13 வயதிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இயல்பாகவே எனக்கு நடிப்பு வந்ததாலயும், நிறைய நாடகங்களிலும் நடிச்சிருக்கிறதால இதுவரை ஒரே டேக்ல தான் என்னோட சீன்கள் ஓ.கே ஆகிடும். இதுவரை இரண்டு, மூனு டேக் வந்ததே இல்ல.'' 

''நீங்க நினைச்ச கேரக்டர்களில் எல்லாம் நடிச்சி முடிச்சிட்டீங்க, இதுக்கும் மேல் எதாவது ஆசை இருக்கா?''

''நாங்க விவசாயக் குடும்பம். சொந்த ஊர்ல நிறைய நிலம் இருக்கு. கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளினு நிறைய விளைய வெச்சிருக்கோம். சினிமாவுல முழுசா ஈடுபட்டதால, என்னால விவசாயத்தைப் பார்க்க முடியல. தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து பார்த்துக்க சொல்லிட்டேன். இப்போ விவசாயம் செய்யணும்னு என ஆசையா இருக்கு. கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது விவசாயம் பண்ணனும். விவசாயி மகன் என சொல்வதை பெருமையா நினைக்கிறேன்.''

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு