Published:Updated:

'இந்த 3 விஷயம்தான் என் கூந்தலின் ரகசியம்!' அனுபமா பரமேஸ்வரன் #VikatanExclusive

Vikatan Correspondent
'இந்த 3 விஷயம்தான் என் கூந்தலின் ரகசியம்!' அனுபமா பரமேஸ்வரன் #VikatanExclusive
'இந்த 3 விஷயம்தான் என் கூந்தலின் ரகசியம்!' அனுபமா பரமேஸ்வரன் #VikatanExclusive

“ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே....” அழகாகப் பாடிக்கொண்டே வரவேற்கிறார் அனுபமா பரமேஸ்வரன். செல்ஃபோன் ப்ளே லிஸ்டில் “கன்னத்தில் முத்தமிட்டால்” பாடல்களுக்குத்தான் முதல் இடம். பத்துமுறையாவது இந்தப் பாட்டை தினமும் கேட்பேன். ரோஜா, பாம்பேனு மணிரத்னம் படங்களின் தீவிர ரசிகை நான். அதுமட்டுமில்லை, எம்.ஜி.ஆரின் அம்மா சத்யாபாமாவோட திருச்சூரில் இருக்கும் இருஞ்சாலகுடா தான் என் ஊரு. அப்பா, அம்மா, குட்டி தம்பி இதான் என் குடும்பம். சர்ப்ரைஸா பிரேமம் படத்துல கிடைச்ச வாய்ப்பு, தனுஷ் கூட கொடி வரைக்கும் கொண்டு வந்துருக்கு” ஜாலியாக மலையாளமும் தமிழும் கலந்து சம்சரிக்கிறார் பிரேமம் அழகி... 

”ஒரே படம். ரொம்ப ஃபேமஸாகிட்டீங்க... பிரேமம் பட வாய்ப்பு பற்றி சொல்லுங்க?” 

சென்னைல லயோலா எப்படியோ, அந்த மாதிரி தான், கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரி. ரொம்ப கண்டிப்பான ஹாஸ்டல், தினமும் இரவு 8.15 - 8.45 வரைக்கும் தான் செல்ஃபோன் பயன்படுத்தவே முடியும்,முதல் வருடம் காலேஜ்ல படிச்சிட்டிருந்த நேரம், அப்போ தான் பேஸ்புக்குல “என் படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருக்கேன்னு” நிவின்பாலியோட போஸ்ட் போட்டிருந்தார். என் ஃப்ரெண்ட் தான், எனக்கு போன் பண்ணி உன் போட்டோவை அனுப்புன்னு சொன்னா. புரஃபெஷனல் போட்டோ ஷூட்டுலாம் ஏதும் இல்லாம, போன்லையே செல்ஃபி எடுத்து அனுப்புனேன். அதோட மறந்துட்டேன். லீவுக்கு வீட்டுக்கு போயிருக்கும் போது தான், பிரேமம் டீம்லருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்குத் தெரிஞ்சதும் அப்பா செம கோவம். பேசி சமாதானத்துக்கு வந்ததும், ஆடிஷன் போனேன். சின்ன வயசுல தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்ததுனால, சுலபமா நடிச்சிட்டேன். மற்றுமொரு ப்ளஸ் என்னுடைய கூந்தல். முதல் ஆடிஷன்லயே ஓகே சொல்லிட்டாங்க. அப்போ பிரேமம் மேரி இவ்வளவு பிரபலாகும்னு நினைச்சிக்கூட பார்க்கவில்லை. 

”தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தனுஷ் ஜோடியா நடிக்கிறீங்க... எப்படி அமைந்து இந்த வாய்ப்பு?” 

தமிழில் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் தனுஷ். அவரோட படங்கள் எதையும் மிஸ் பண்ணமாட்டேன். அவருக்கு ஜோடியா நடிக்கணும்னு அழைப்பு வந்ததுமே செம ஹாப்பி. அதுவும் வெற்றிமாறன் தயாரிக்கிறார்ன்னு சொல்லவும் கொஞ்சம் அதிர்ச்சியில் உறைஞ்சு போய்ட்டேன். சம்மதமான்னு கேட்க ஃபோன் பண்ணாங்க, எப்போ ஷூட்டிங் வரணும்னு நான் கேட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். தேங்க்ஸ் தமிழ்நாடு.

தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூன்று மொழியிலும் படம் நடிச்சிட்டீங்க, எந்த மொழியில் நடிப்பதில் சவால் இருந்ததா நினைக்கிறீங்க? 

தாய்மொழி மலையாளம்ன்றதால  ரொம்ப ஈஸியா நடிச்சிட்டேன். ஆனா தெலுங்கு, தமிழ் நடிக்கும் போது வசனம், அதற்கான பொருள் என்னங்குறவரைக்கும் உள் வாங்கி நடிக்கணும். கடின உழைப்பும், ஆர்வமும் இருந்தா மட்டும் தான் நடிக்கமுடியும். 

பிரேமம் படத்தினால், உங்க மேல மட்டுமில்லாம, உங்க கூந்தல் மேலயும் எல்லோருக்கும் கிரேஸ், என்ன சீக்ரெட்? 

எங்க வீட்டுல எல்லோருக்குமே முடி நீளம் தாங்க. அதுக்குனு தனியா பராமரிக்குறதுலாம் கிடையாது. ஒன்லி தேங்காய் எண்ணெய். எங்க ஊரு மண்ணும், சாப்பாடும், தண்ணியும் தான் என் முடிக்கான காரணமே. முக்கியமா எந்த க்ரீம்மும், செயற்கையா எடுத்துக்குறது இல்லை. ஒரு பொண்ணு பொதுவா கூந்தலை எப்படி பார்த்துப்பாங்களோ, அப்படித்தான் நானும் பராமரிக்கிறேன்.

ஆட்டோகிராஃப் படத்தோட ரீமேக் தான் பிரேமம்னு சொல்லுறாங்க, தமிழ் படங்கள்லாம் பார்ப்பீங்களா? 

இரண்டு படமுமே சூப்பரா இருக்கும். ஆட்டோகிராஃப்ல எல்லா பாட்டுமே என் ஃபேவரைட். மனசுக்குள்ளே காதல் வந்துச்சா பாடலெல்லாம் அடிக்கடி கேட்பேன். இரண்டு படத்துலயுமே நிறைய வித்தியாசங்கள் இருக்கு.  பாஸ்... மலையாளத்த விட, தமிழில் தான் நிறைய படங்கள் பார்ப்பேன். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய், ரோஜா பட மதுபாலா என வித்தியாசமான கேரக்டர்களை விரும்பி பார்ப்பேன். கதையை விட, வித்தியாசமான கதாபாத்திங்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

எந்தமாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்குறீர்கள்? 

வருஷத்துக்கு நிறைய படம் பண்ணனும்னு எந்த திட்டமும் கிடையாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் மொக்க கேரக்டர்னா நடிக்கவே மாட்டேன். வித்தியாசமா கேரக்டரா தேடி நடிக்கணும்,  ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலும் 10 படம் தான் மொத்தமா நடிச்சிருக்கேன்னு சொன்னாலும், 10 படமுமே வித்தியாசமா இருக்கணும்.  

அடுத்த திட்டம்?

தெலுங்கில் அ.ஆ.., பிரேமம் தெலுங்கு ரீமேக் இரண்டும் ரிலீஸாகிடுச்சி. மலையாளத்துல துல்கர் சல்மானுடன் “ஜேமெண்டே சுவிஷேசங்கள்” (Jomonte Suvisheshangal) ஷுட்டிங். இதுனால காலேஜ் போகமுடியவில்லை. இப்போதைக்கு நோ காலேஜ். ஃப்ரீயாகிட்டு மறுபடியும் படிக்கலாம்னு இருக்கேன்.   

பிடிச்ச நடிகர்கள் ? 

நடிப்பு ன்னா மம்முட்டி தான். ஐ லவ் ஹிம். நடிகையில் மஞ்சுவாரியார், ஷோபனா மேம். தமிழ்ல நயன்தாரானா க்ரேஸ். 

பிடிச்ச உணவு? 

டயட்லாம் ஏதும் இதுவரைக்கும் இருந்தது கிடையாது, பிரியாணி ரொம்ப பிடிக்கும். 

பொழுதுபோக்கு? 

பாடுறது... பாடுறது மட்டும் தான். சின்ன ப்ரேக் கிடைச்சாலும் பாட்டு பாடிட்டே இருப்பேன்.

- பி.எஸ்.முத்து-