Published:Updated:

கட்டபொம்மன் 3D!

கட்டபொம்மன் 3D!
கட்டபொம்மன் 3D!
கட்டபொம்மன் 3D!

சிவாஜி நடிப்பில் வெளிவந்த ' கர்ணன் ' படத்தினை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருக்கேற்றி வெளியிட்டார்கள். அப்படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் மட்டுமன்றி குடும்பத்துடன் வந்து படத்திற்கு பெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுப்படத்திற்கு வருமளவுக்கு தியேட்டர்கள் நிரம்பியது.

ராஜ் டிவி நிறுவனம் பல்வேறு படங்களின் நெகட்டிவ் உரிமைகளை வைத்துள்ளது. ' கர்ணன் ' படத்தின் உரிமை கூட அவர்களிடம் தான் இருக்கிறது.

'கர்ணன்' பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து,  சிவாஜி நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்ற இருக்கிறார்கள். அதுவும்,  3D முறையில் அப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்கு சிவாஜி EGYPT FILM FESTIVAL நிகழ்ச்சியில் முதல் வெளிநாட்டு விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3D படங்களுக்கு தற்போது பெரும் வரவேற்பால் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தினை அவ்வடிவில் வெளியிட்டால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

'கொசுறு' கபாலி : " வெற்றிவேல்.. வீரவேல்! "