Published:Updated:

கார்த்தி, விஜய் சேதுபதி, ஸ்ருதி, சூரி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?

கார்த்தி, விஜய் சேதுபதி, ஸ்ருதி, சூரி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?
கார்த்தி, விஜய் சேதுபதி, ஸ்ருதி, சூரி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?

கார்த்தி, விஜய் சேதுபதி, ஸ்ருதி, சூரி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?

பிரபல நடிகர்களின் முதல் படம் நமக்குத் தெரிஞ்ச படம் இல்லை பாஸ். அவர்களின் நிஜமான முதல் படம் என்னன்னு பார்ப்போமா? 

கார்த்தி :

நாம் அனைவருக்கும் 'பருத்திவீரன்' கார்த்தியைத்தான் தெரியும் ஆனால் அதற்கு முன் இவர் நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா? அவருடைய அண்ணன் நடிப்பில் வெளி வந்த 'ஆயுத எழுத்து' திரைப்படம்தான். அதில் ஒரு காட்சியில் சித்தார்த் அருகில் அமர்ந்திருப்பார் கார்த்தி. அது மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் டைரக்டரும்  இவர்தான்.  

விஜய் சேதுபதி :

இவரும் ஹீரோவாக நடிப்பதற்கு முன் நிறையப் படங்களில் சைடு ரோலில்தான் வந்தார். 'M. குமரன் S/O மகாலெட்சுமி', 'டிஷ்யூம்', 'புதுப்பேட்டை'. 'லீ', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடிக் குழு',  'நான் மகான் அல்ல' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.  அதற்குப் பிறகுதான் 'தென்மேற்குப் பருவக்காற்று' வந்து நமக்குப் பிடித்த ஹீரோவாய் மாறினார்.  

சிவா :

இவரை 'மிர்ச்சி' சிவாவாகவும் இப்போது ஹீரோ சிவாவாகவும் தெரியும். அதற்கு முன்பு ஷாம் நடித்த '12-B' மற்றும் 'விசில்' படத்தில் வந்து இருக்கிறார். பின்பே 'சென்னை-28' வந்து எல்லாமே மாறிப்போனது. 

அட்டக்கத்தி தினேஷ் :

இவரும் ஆரம்பக்காலத்தில் 'ஈ' 'எவனோ ஒருவன்' 'ஆடுகளம்' 'மௌனகுரு' போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'அட்டக்கத்தி' படத்தில் ஹீரோவாகி எல்லோருக்கும் பிடித்த அட்டகத்தியானார்.

சதீஷ் :

காமெடி நடிகர் சதீஷ் இப்போது சமீபத்தில் 'பைரவா' படத்தில் நடித்துவருகிறார். ஆனால் இவரின் முதல் நடிப்பில் வெளிவந்தப் படம் 'தமிழ்ப் படம்'. படத்தில் 'டெட்லி வில்லன்' டீ(பாட்டி) கூட ஜடை மண்டையுடன் ஒருவர் இருப்பாரே அவர் தான் சதீஷ். அதன்பின் 'எதிர் நீச்சல்' 'கத்தி' 'ரெமோ' போன்று பல படங்களில் நடித்துள்ளார். க்ரேஸி மோகனின் தியேட்டர் ட்ரூப்பில் 8 வருடங்கள் இருந்திருக்கிறார்.

சூரி :

'வெண்ணிலா கபடி குழு' புகழ் 'பரோட்டா சூரி' இதற்கு முன் நடித்த படங்களைச் சொன்னால் ஆச்சிரியமாக இருக்கும். அப்படி என்ன படங்கள்? 'நினைவிருக்கும் வரை' 'சங்கமம்' 'ஜேம்ஸ் பாண்டு' 'காதல்' போன்று பல படங்களில் நடித்துள்ளார் சூரி. சைடு ரோலில் வந்த சூரி இப்போது வேற லெவல். 

விமல் :

இவரை நம் எல்லோருக்கும் 'களவாணி' 'பசங்க' 'கலகலப்பு' போன்ற படங்களில் ஹீரோவாகத்தான் தெரியும், ஆனால் அதற்கு முன் 'கில்லி' 'கிரீடம்' 'குருவி' போன்ற படங்களில் சைட் ரோலில் நடித்தது நம்மில் பல பேருக்குத் தெரியாத ஒன்று.

அசோக் செல்வன் :

'சூது கவ்வும்' 'தெகிடி' 'ஆரஞ்ச் மிட்டாய்' போன்ற படங்களில் நடித்த அசோக் செல்வனின் முதல் படம் 'பில்லா-2'. பட டைட்டிலை உற்றுப் பார்த்தால் 'பில்லா-2'விற்கு ஃப்ளாஷ்பேக் போன்று க்ளிப்பிங்ஸ் வரும். அதில் சிறுவயது பில்லாவாக இவர்தான் வருவார். அஜித்தின் சாயல் லைட்டாக இருப்பதால் குட்டி பில்லாவாக இவரின் போட்டோக்கள் சில வரும்.

ஸ்ருதிஹாசன் : 

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ருதி. நடிப்பது மட்டுமின்றி பாடியும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவரின் முதல் படம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'ஹேராம்' படம்தான். அதில் அவரது அப்பாவுடன் சேர்ந்து பாடல் ஒன்றும் பாடியுள்ளார். அதில் காந்தியின் அருகில் வரும் குட்டிக் குழந்தை இவர்தான். 

ஷாம் :

'12-B' யில் அறிமுகமான ஷாமைத்தான் நமக்குத் தெரியும் ஆனால் அதற்கு முன்னே விஜய் நடிப்பில் வெளி வந்த 'குஷி' படம்தான் ஷாமுக்கு முதல் படம். படத்தை நன்றாகக் கவனித்தால் விஜய்யின் ஃப்ரெண்ட் ரோலில் வந்திருப்பார். மாடலிங் முடித்துவிட்டு நடிப்பில் களம் இறங்கியிருக்கிறார் ஷாம்.

த்ரிஷா :

இவரது முதல் படம் பிரசாந்த், சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்த 'ஜோடி' திரைப்படம்தான். அதில் சிம்ரனின் தோழியாக ஆரம்பித்த அவரின் கலைப்பயணம் இப்போது நாயகி படம் வரை தொடர்கிறது. முழு நேர ஹீரோயின் ஆனது 'மௌனம் பேசியதே' படத்தில்.  

-தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு