‘சுறா’ முதல் ‘துப்பாக்கி’ படம் வரை, விஜய் பேசிய முதல் வசனமும் அந்த காட்சியும் ஞாபகம் இருக்கா..?

விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போது அதை பார்க்கவரும் அவரது ரசிகர்கள் அதிகம் ஆவலோடு எதிர்பார்ப்பது விஜய்யின் என்ட்ரி காட்சியைத் தான். அதையும் தாண்டி படத்தில் அவர் பேசும் முதல் வசனத்தை திரையரங்கில் இருக்கும் யாரும் கேட்க முடியாத அளவுக்கு ஆரவாரம் செய்வார்கள். அப்படி ஆரவாரம் செய்ததால் பலர் கேட்கத்தவறிய அந்த முதல் வசனத்தின் தொகுப்பை பொதுநலன் கருதி வெளியிடுகிறோம்.

‘தெறி’, ‘புலி’, ‘கத்தி’, ‘ஜில்லா’, ‘தலைவா’ படங்களில் விஜய் பேசிய முதல் வசனமும் அந்த காட்சியைப் பற்றியும் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

‘துப்பாக்கி’ 

‘துப்பாக்கி’ படம் ஆரம்பிக்கும்போது, விஜய்யின் வருகைக்காக ரெயில்வே ஸ்டேஷனில் விஜய்யின் ஃபேமிலி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. விஜய் வருகிற ரயில், இன்ஜின் பிரச்னையினால் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும். அங்கு விஜய் தன் நண்பர்களோடு குத்துச்சண்டை விளையாடிக் கொண்டிருப்பார். அந்த சண்டை முடிஞ்சதும் பாட்டு. அந்த பாட்டின் நடுவில் தன் சீனியர் ஜெயராம் வந்தவுடன், சீனியரைப் பார்த்த பதற்றத்துடன், “ ஐசி 58464, கேப்டன் ஜெகதீஸ் ரிப்போர்ட்டிங் சார்”னு விஜய் சொல்லுவார். இது தான் துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய முதல் டயலாக். பிறகு பாடல் தொடரும். 

‘நண்பன்’

10 வருடங்களாக விஜய்யைத் தேடி வரும் ஜீவாவையும் ஸ்ரீகாந்தையும், சத்யன் ஏமாற்றி தன்னிடம் வர வைப்பார். அதன் பின்பு விஜய் ஊட்டியில் இருப்பதாகவும் அவரைப் பார்க்க நாம் போகலாம் என்று மூவரும் காரில் பயணிப்பார்கள். அப்போது ஸ்ரீகாந்த் அவர்களது கல்லூரி நாட்களை நினைத்துப் பார்ப்பார். அப்போது சீனியர்ஸ், ஜூனியர்ஸை ராக்கிங் பண்ணிட்டு இருப்பார்கள் அப்போது தான் விஜய் ஹாஸ்டலுக்குள்ள என்ட்ரி ஆவார். விஜய்யை அவர்கள் வம்பிழுக்கும்போது, “ஆல் இஸ் வெல், ஆல் இஸ் வெல்...”னு சொல்லுவார். இதுதான் இந்த படத்தின் முதல் டயலாக்.

‘வேலாயுதம்’ 

‘வேலாயுதம்’ படத்தில் எப்போ விஜய்யை காட்டுவீங்கனு ரசிகர்களை கொந்தளிக்கவிட்டு 15 நிமிடங்கள் கழித்து விஜய்யை காட்டுவார்கள். வாயில் அரிவாலுடன் ஓடி வந்து, ரயிலின் சீட்டில் அரிவாலை குத்தி, இடம் பிடிப்பார். இடம் பிடித்துவிட்டு, “அருவாளால ஆள மட்டும் இல்ல, சீட்டையும் போடுவோம்ல” என டயலாக் பேசிவிட்டு ரயிலின் செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவார். 

‘காவலன்’ 

‘காவலன்’ படமும் விஜய்யின் சின்ன வயது கேரக்டரில் இருந்து தான் தொடங்கும். விஜய் வளர்ந்தபிறகு, விஜய்யின் நண்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரது பெயரை பாக்ஸிங் போட்டிக்கு கொடுத்து விடுவார்கள். பாக்ஸிங் அரங்கத்துக்குள் விஜய் நுழையும்போது சியர்ஸ் கேர்ள்ஸ் உற்சாகமாக வரவேற்பார்கள். அப்போது அவர்களுக்கு விஜய், “தேங்க்யூ... தேங்க்யூ, தேங்க்யூ” என்பார். அப்போது, “என்ன பூமி, வரவேற்பு எப்படி..?” என்று வையாபுரி கேட்க, “யாருக்குடா..?” என்று விஜய் கேட்பார். இவை தான் ‘காவலன்’ படத்தில் விஜய் பேசிய ஓப்பனிங் டயலாக்ஸ்.

‘சுறா’

‘சுறா’ படத்தின் ஓப்பனிங் சீனில் கடலில் இருந்து நீந்திக்கொண்டே கரைக்கு வருவார் விஜய். கரைக்கு வந்ததும் பாட்டு. பாட்டு முடிந்ததும் விஜய், வீட்டு வாசலில் உட்கார்ந்து மீன் உரசிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு பெண் வந்து, “ என்ன சுறா நீ மீன் உரசிக்கிட்டு இருக்க..?” என்று கேட்டதற்கு “ஆ... எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அதான்” என்பார். இது தான் ‘சுறா’ படத்தின் விஜய்யோட ஓப்பனிங் டயலாக். 

- மா.பாண்டியராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!