Published:Updated:

ரஜினி 66 #HBDRajinikanth

Vikatan Correspondent
ரஜினி 66 #HBDRajinikanth
ரஜினி 66 #HBDRajinikanth

- ரஜினிக்கு எப்போதும் பிடித்த உடை கறுப்பு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது, " ரஜினி உனக்கு வொயிட்  டிரெஸ் போட்டா நல்லா இருக்குமே" என்றார் இந்தி ஸ்டார்  அமிதாப். அதில் இருந்து, வெள்ளை உடை அணிய ஆரம்பித்தார் ரஜினி.

- தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் போனில் பேசினால்கூட எழுந்து நின்று தான் பேசுவார் ரஜினிகாந்த்.

- எம்,.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடே வாடகைக்கு தர மாட்டார்கள். ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி நாடே கொடுத்து இருக்கிறார்கள் மக்கள் என பாராட்டிப் பேசினார்

- 'அவள் அப்படித்தான்' படத்தில் ருத்ரய்யா கொடுத்த சம்பளத்தை, ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார். அந்தப் பணத்தில் ருத்ரய்யா வாங்கிய வீட்டின் மதிப்பு இன்று பல கோடி

- நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைக்க, தானே ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. சங்கத்துக்குள் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த வாய்ப்பை இழந்துவிட்டது நடிகர் சங்கம்.

- தான் நடிக்கும் சினிமாக்களின் திரைக்கதைகளில் தலையிடமாட்டார் ரஜினி. அதே நேரம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து, ஒரு சில காட்சிகள் தன்னுடைய முத்திரையை பதிப்பார்.

- அப்போதும் சரி, இப்போதும் சரி, தன்னை சந்திக்கும் வரை பிரபலங்களை வாசல் வரை வந்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதே போலவே திரும்பவும் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்கும் பழக்கம் கொண்டவர் ரஜினி

- வைகோ மதிமுக கட்சி ஆரம்பித்தபோது, தனக்கு ஆதரவு கேட்டு போயஸ் கார்டன்  போனார். அப்போது, பெரியவர் கலைஞர் இருக்கும் போது, உங்களுக்கு ஆதரவு தர இயலாது என நாசூக்காக சொல்லிவிட்டார்.

- தனது நண்பர் ஹிமாலயஸ் என்ற புத்தகத்தை அவருக்கு கொடுத்தார். அது தான் ரஜினியை இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள வைத்ததாம்.

- ஸ்டைல் என்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால்,  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான பிடித்தமான ஸ்டைலில் கலக்கியவர் ரஜினி தான்.

- கறுப்பு நிறம், கோரை முடி, சிறிய கண் என சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஒட்டுமொத்த மைனஸ்களையும் ஒருங்கே பெற்று இருந்தாலும், அதை பிளஸ்ஸாக்கி சாதித்தவர் ரஜினி.

- 'பில்லா' படத்தில் ரஜினுக்கு நாயகியாக நடிக்க மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  அழைத்தார்கள். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் ஒருபோதும் ரஜினி வாய் திறந்து பேசியதில்லை.

- ரஜினி குறித்து எவ்வளவோ பாஸிட்டிவ்வான விஷயங்கள் இருக்கின்றன. சினிமாவில் போராடிய காலகட்டதில் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு ஹீரோக்களில் ரஜினியும் ஒருவர்.
- எம்ஜி ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை', எனக்கு 'பாட்ஷா' திரைப்படம் என தன் மெகா ஹிட் படமான 'பாட்ஷா' பற்றி சிலாகிப்பார் ரஜினி.

- பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரஜினிக்கு பிறகு கமல் வந்தால், அவருக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர் இருக்கையில் அமர்ந்த பின்னர் தான், இருக்கையில் அமர்வார் ரஜினி.

- ஃபோட்டொஜெனிக் ஃபேஸ், ரஜினியின் கம்பீரங்களில் ஒன்று.

- திருவிளையாடல் படத்தில், சிவாஜி நடந்த நடையை வீரநடை என்பார்கள்., சிவாஜிக்குப் பிறகு ரசிகர்களுக்கு பெரிதும் ஈர்த்தது, ரஜினியின் நடை தான்.

- சிவாஜியை பார்த்தபோது, புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், தன் ரசிகர்கள் யாரேனும், அவரை சந்திக்க வந்தால், புகைப்படம் எடுக்க மறுக்காமல், ஓகே சொல்வார் ரஜினி.
- வில்லன்+ ஹீரோ+ காமெடியன் என எல்லா கதாபாத்திரத்துக்கும் தேவையான முக அமைப்பைப் பெற்றவர் ரஜினி.

 - அந்த காலத்தில் பி.எஸ். வீரப்பாவின்  சிரிப்பு பிரசித்தி. அதன் பிறகு பல ஆண்டுகளாக ஹிட் எனில், அது ரஜினியின் சிரிப்பு தான்.

- தேசிய விருது வாங்கியவர் நடிகை ஷோபா. 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார் ஷோபா, அவரை சந்திக்கும் போதெல்லாம், தங்கை என்றே அழைப்பார் ரஜினி.    
- பொதுவாக சபைகளில் நடிக்கத் தெரியாத ரஜினி, தன் மன உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.

- தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் உயரத்தில் அவரைக் கொண்டாடினாலும், இன்றுவரை பாதுகாவலரே இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் ரஜினி.

- தன் பெயரைச் சொல்லி, யாரேனும் சிபாரிசு கேட்டது ரஜினிக்கு தெரிந்துவிட்டால், அவர்கள் உடனான நட்பை கட் செய்துவிடுவார் ரஜினி..

- ரஜினிக்கு நண்டுக்கறி, தலைக்கறி தான் நான் - வெஜ்ஜில் ஃபேவரைட். ஆனால், இப்போது முழுமையாக வெஜ் உணவுக்கு மாறிவிட்டார்.

-  'அவள் ஒரு தொடர்கதை' தெலுகு பதிப்பில், ஜெய்கணேஷ் வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார் ரஜினிகாந்த்.

- தன் படத்தில் நடிக்க புதிதாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகர்களுக்கு, தானே மொபைல் செய்து வாழ்த்து சொல்வது ரஜினி ஸ்டைல்

- கிராமிய வேஷமோ , ஐஷ்வர்யா ராய்க்கு ஜோடியோ எதுவென்றாலும், கேமரா முன், நிஜத்தில் ஜொலிப்பார் ரஜினி

- 1996-ம் ஆண்டு, தனக்கு கிடைத்த அரசியல் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து உதறித் தள்ளியவர் ரஜினி.

 - திமுக, அதிமுக , கம்யூனிஸ்ட் என தமிழர்களுக்கு பல அடையாளம் உண்டு.,, நான் ரஜினி ரசிகன் என்ற அடையாளத்தை கொடுத்தவர் ரஜினி தான்

- தமிழக அரசியலில் இறங்கச் சொல்லி மறைந்த பத்திரிகையாளர் சோ அழைத்த போதும், நாசூக்காக மறுத்தவர் ரஜினி

-யார்க்கேனும் வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார் ரஜினி.

 - தன்னைவிட வயது குறைவானவராக இருந்தாலும், அவர்களை மரியாதையாக அழைப்பதே ரஜினி ஸ்டைல்.

- இப்போது தன்னை, மனரீதியாக கண்டெக்டராக நினைத்து எளிமையாக வாழ்பவர் ரஜினி.

- சினிமா இல்லாத  வெண் தாடியுடன் தான் ரஜினி இருப்பார். ஷூட்டிங் சமயங்களில் யோகா செய்து, தனது முகப்பொலிவை மீட்டெடுப்பார் ரஜினி.

- சினிமாவில் வளரும் போதும் அவருக்கு உதவியாக இருந்த பலர், இப்பொது சினிமாவில் இல்லை. ஆனாலும், அவர்களுக்கும் உரிய மரியாதை தருவதை ரஜினி நிறுத்தியதே இல்லை.

- 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானாலும்,  முதன்முதலாக முழு ஹீரோ ஆனது 'பைரவி' படம். பைரவியின் படைப்பாளி கலைஞானத்தை பார்க்கும்போதெல்லாம், எழுந்து நின்று மரியாதை செய்வார் ரஜினி.

- ஒருகாலத்தில் அருகில் இருந்து உதவி செய்த ஸ்ரீபிரியாவை, பெருந்தன்மையாக மரியாதைக்குரிய பெண்மணி என்றே தன் நெருங்கிய வட்டாராத்திடம் சொல்வார் ரஜினி.

- 'கபாலி' படத்தின் உணவு இடைவேளையின் போது மட்டுமே கேரவேன் செல்வார் ரஜினி.மற்ற நேரங்களில் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு நடித்தார்.

- தன் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் சிறப்பாக நடித்தால் , ஈகோ பார்க்காமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலே, கை தட்டி பாராட்டும் மனம் படைத்தவர் ரஜினி.

- எம்ஜிஆருக்கு வாலி பாடல் எழுதுவார், எனக்கு வைரமுத்து என சொல்லி வைரமுத்துவுக்கு எப்போதுமே ரஜினியிடம்  தனி மரியாதை உண்டு

- தன்னை எதிரியாக பாவித்த, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின்  இல்ல விஷேசங்களுக்குச் சென்று மனமார வாழ்த்தும்  நல்ல மனசுக்காரர்  ரஜினி.

- அதிமுக, திமுக இரண்டையும் தன்னுடைய நட்புக் கட்சியாக பாவித்துக் கொண்டவர் ரஜினி

- இசைஞானி இளையராஜாவை சந்தித்தால், சினிமா தவிர மணிக்கணக்கில் மற்ற விஷயங்களைத் தான் பேசுவார் ரஜினி

- தமிழகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர், "உங்களைப் பார்க்க வேண்டும்" என கூப்பிட்டால் , நானே வருகிறேன் என சொல்லி ஆச்சர்யப்படுத்துவது ரஜினி ஸ்டைல்

- விஜயின் 'திருப்பாச்சி' படத்தைப் பார்த்துவிட்டு, அவருக்கு ஆக்ஷன் + காமெடி இயல்பா வரும் என,  சாமி பட விழாவில் மனதார பாராட்டினார் ரஜினி.

- தன்னைப்போலவே, பின்னணி எதுவும் இல்லாமல்  முன்னணி நடிகராக வந்த அஜித் மீது, ரஜினிக்கு எப்போதும் தனி ப்ரியம் உண்டு. தன்னுடைய ஹிமாலயாஸ் புத்தகத்தை கையெழுத்து போட்டு, அஜித்துக்கு பரிசளித்தார் ரஜினி

- தன் வீட்டில் உள்ள காஸ்ட்லியான கார்களை விட, அந்தக்காலத்து அம்பாஸிடர் காரை எடுத்து இரவில் சுற்றுவதில் ரஜினிக்கு அலாதியான ப்ரியம்

- தமிழில் வெளிவந்த எத்தனையோ நாவல்களை படித்து ரசித்தாலும், ரஜினியின் ஃபேவரைட் வரலாற்று புதினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்

- எம்ஜிஆருக்குப் பிறகு, அரசியலில் இறங்கச் சொல்லி, ராம. வீரப்பன், திருநாவுக்கரசர், என்று எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும், ஏனோ ரஜினி தவிர்த்துவிட்டார்

- தமிழ் சினிமாவில் ரஜினியை கே.பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்றாலும், பெரிய அளவில் தன்னை வளர்த்தவர் பஞ்சு அருணாசலம் தான் என்பதால் அவர் மீது ரஜினிக்கு அலாதி ப்ரியம்

- தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ நடிகர்கள், முன்னணியில் இருந்தாலும், சினிமா மார்க்கெட் லெவலில் ரஜினி என்ற நடிகனுக்கு போட்டி ரஜினியைத் தவிர வேறு ஒருவனும் போட்டி இல்லை

- கடந்த 25 ஆண்டுகளாக இரவு நேர படப்பிடிப்புகளில் ரஜினி கலந்து கொண்டதில்லை, அதற்குப் பிறகு இப்போது தான் கபாலி, 2.0 என தொடர்ச்சியாக இரவு நேர படபிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.

- சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில்,போயஸ் கார்டனில் ரஜினியை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே நபர் தனுஷின் கடைக்குட்டி லிங்கா தான்.

- ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில், ஸ்ரீவித்யா ரஜினிக்கு மனைவி, அதே நடிகை தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இதே ஒற்றுமை, நடிகை சுஜாதாவுக்கும் உண்டு.

- ரஜினி கமலுக்கு கடும் போட்டி நிலவிய காலம் அது,. அப்போது 'புன்னகை மன்னன்' நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டு, கமல் ரசிகர்களிடம் கரவொலி வாங்கினார் ரஜினி.

. மறைந்த சான்றோ சின்னப்ப தேவர் மீது, ரஜினிக்கு மிகுந்த மரியாதை உண்டு . மூன்று பட அட்வான்ஸை ஒரே சமயத்தில் கொடுத்து ரஜினியை புக் செய்தவர்.

- ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், சினிமாவில் நண்பர்கள் கூட்டம் மொய்த்துவிடும்.ஆனால், இன்றுவரை ரஜினிக்கு நெருக்கம் ஆனவர்கள் எல்லாம், ரஜினியின் கஷ்டமான சூழ்நிலையில் உடன் இருந்தவர்களே

நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகரனான ரஜினி, 'தெய்வ மகன்'  படத்தை 29 முறை பார்த்து இருக்கிறார்.

தமிழ், தெலுகு, இந்தி என பல மொழிகளில் நடித்தவர் ரஜினி. பிளட் ஸ்டோன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் ரஜினி

- தனது நிஜமான உடல் தோற்றம், சினிமா தோற்றம், இரண்டையும் தெளிவாக உணர்ந்து, இயல்பாக இருப்பது ரஜினியின் சிறப்பு

- அம்மாவின் பாசம் கிடைக்காத ரஜினி, அந்த உணர்வை, மனைவி லதா, மகள்களிடம் பெற்று வந்தார்.
 
- சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெறுவதைவிட, அதை தக்கவைத்துக்கொள்வதே பெரும் போராட்டம் என சொல்வார் ரஜினி

- தனது ஒவ்வொரு பிறந்தாநாளின் போதும், வீட்டில் இருக்கும் தனி அறையில் சுற்றிலும் சூழப்பட்ட கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு, சுய பரிசோதனை செய்வார் ரஜினி

- இன்று கிடைத்து இருக்கும் சினிமா புகழ்,  இறைவன் கொடுத்த வரம், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையென, இப்போதும் சிவாஜிராவாக வாழ்பவர் ரஜினி.

- எம்.குணா