பைரவாவுடன் மோதும் புரூஸ் லீ | Pongal clash begins for Vijay Starrer Bairavaa and GVP starrer BruceLee

வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (16/12/2016)

கடைசி தொடர்பு:01:20 (16/12/2016)

பைரவாவுடன் மோதும் புரூஸ் லீ

பிரசாந்த் பாண்டியராஜின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்  நடித்து வரும் படம் புரூஸ் லீ. இதில் ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாக  கிருத்தி கர்பண்டா நடித்துவருகிறார். இவர் தெலுங்கு, கன்னடத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் இதுவே முதல் படம்.

'கடவுன் இருக்கிறான் குமாரு' படத்திற்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவரும் புரூஸ் லீ படம் எப்போது வெளியாகும் என அதன் இயக்குநர் பிரசாந்த் பாண்டிய ராஜன் ட்வீட் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் நடிக்கும் பைரவா திரைப்படம் வரும் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.புரூஸ் லீயும் பைரவாவோடு வெளியாகிறது.

பைரவா டீசர் வெளியான போது உற்சாகமாக ஜி.வி.பிரகாஷ் வரவேற்று டிவிட் செய்திருந்தார். இப்போது பைரவா படத்தோடு புரூஸ் லீ வெளியாவதை ஜி.வி. பிரகாஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்