Published:Updated:

கோலிவுட் மெஸ்ஸி, ரொனால்டோ யாருனு தெரியுமா ?

கோலிவுட் மெஸ்ஸி, ரொனால்டோ யாருனு தெரியுமா ?
கோலிவுட் மெஸ்ஸி, ரொனால்டோ யாருனு தெரியுமா ?

கோலிவுட் மெஸ்ஸி, ரொனால்டோ யாருனு தெரியுமா ?

தட் தமிழ் சினிமா நடிகர்கள் ஃபுட்பால் வீரர்களோடு ஒத்துப் போறாங்க மொமன்ட்! 

லியோனல் அஜித் :

தமிழ் சினிமாவில் தனக்குவரும் முக்கியமான பட வாய்ப்புகளை வேறு ஒருவருக்குத் தருவது போல் அதை நிராகரித்துவிடுகிறார் அஜித். அதே போல் ஃபுட்பாலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் அதை அவர் சுயநலத்திற்காக கோல் போடாமல் பாஸ் கொடுத்து வேறு ஒரு வீரருக்கு அந்த வாய்ப்பினைக் கொடுத்து கோல் போடவிடுகிறார் மெஸ்சி. 'நம்ம கூட இருக்கிறவங்களை நாம பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்கிறவன் நம்மைப் பார்த்துக்குவான்'.

ரொனால்டோ விஜய் :

இவரின் பெயரைச் சொன்னாலே ஞாபகம் வருவது இவரது துடிப்பான விளையாட்டுதான். அதே போல் தமிழ் சினிமாவில் தன் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய். தன் மீது வரும் சர்ச்சையைக் கண்டுகொள்ளாமல் அதைத் துடைத்து எறிந்துவிட்டு தன் விளையாட்டில் வெளிக்காட்டுபவர்  ரொனால்டோ. 'எப்போ வர்றேன்னு முக்கியம் இல்லடா கோல் எப்படி போடுறேன்னுதான் முக்கியம்'.

லூயிஸ் விக்ரம் : 

அலட்டிக்கொள்ளாமல் ஆடுவதில் வல்லவர். தன் பெயர் வெளியில் வருகிறதோ இல்லையோ அவரால் முடிந்ததை விளையாடிக்கொண்டே இருப்பார் லூயிஸ் சௌரஸ். அதே போல் தமிழ் சினிமாவில் தன் படம் ஹிட் ஆகிறதோ இல்லையோ தன் முழு முயற்சியோடு படத்தில் ஈடுபட்டு நடிப்பார் சீயான் விக்ரம். 'என் ஊரு பரமக்குடி நான் யாரு கண்டுபிடி'.

நெய்மர் தனுஷ் :

நெய்மர் தனது அப்பாவிடம் இருந்து விளையாட்டைக் கற்றுக்கொண்டு கொஞ்சம்கூட குறையாமல் தனது தந்தை போலவே விளையாட்டின் மீது ஆர்வம்கொண்டு தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதே போல் தமிழ் சினிமாவில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிடமிருந்து இயக்கத்தையும், நடிப்பையும் கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கிறார். 'சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்'

போக்பா சேதுபதி :

பௌல் போக்பா இவரது உடற்கட்டு உயரத்தையும் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஞாபகம்தான் வரும். சின்ன வயதிலிருந்தே மிகவும் சிரமப்பட்டு இப்போது ஃபுட்பாலில் கலக்கிக்கொண்டிருப்பவர் பௌல் போக்பா. அதே போல் தமிழ் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 'ப்ப்பாஆஆஆஆஆஆ'

சான்செஸ் சிவாகார்த்திகேயன் :

அலெக்சிஸ் சான்செஸ்ஸின் துரு துரு விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து என்றே சொல்லலாம். அதே போல் தமிழ் சினிமாவில் தன் நடிப்பை வெளிப்படுத்துபவர் சிவகார்த்திகேயன். இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். 'கோல் போட கஷ்டப்படுறவன் ஃபுட்பால் விளையாடவே கஷ்டப்படுறான்னு அர்த்தம்'.

கேரத் சூர்யா :

கேரத் பேல், தான் விளையாடும்போது இவர் காலில் பந்து இருந்தால், கிட்ட யாராலும் வர முடியாது. அந்த அளவிற்கு இவரது வேகம் இருக்கும். அதே போல்தான் தமிழ்  சினிமாவில் நம் சிங்கம் சூர்யா. படத்தில் ஓடிக்கொண்டே இருப்பார். படத்தின் ஒரு சீனில் வெளிநாட்டுப் போலீஸை விட அதிவேகமாக ஓடுவார். இருவரிடம் ஓட்டமும் உடற்கட்டும் ஒன்று போல் இருக்கும். 'ஓங்கி அடிச்சா ஒன்றரை கிலோமீட்டர் தாண்டி கோல் போகும்டா பார்க்குறியா'.

இனியஸ்டா ஹாசன் :

ஆண்ரீஸ் இனியஸ்டா, வயதானாலும் இவரின் விளையாட்டிற்குக் குறை இருக்காது அந்த அளவு சிறப்பாகச் செயல்படுவார். அதே போல் தமிழ் சினிமாவில் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கும் வயதானாலும் இவரின் நடிப்பில் குறை இருக்காது. ரசிகர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்கவைப்பதில் இருவரும் வல்லவர்கள். 'நாலு பேரு நல்லாருக்கணும்னா கஷ்டப்பட்டு கோல் போடுறதுல தப்பில்லை'.

ரூணி ரஜினி : 

வெயின் ரூணி இவர் விளையாடும் க்ளப் மற்றும் இன்டர்நேசனல் டீம் இரண்டுக்கும் இவர்தான் ஒரே கேப்டன். அதே போல் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். இருவருக்கும் ஒரு ஒற்றுமை வயதானாலும் இவர்களின் ஸ்டைல் இன்னும் இவர்களை விட்டுப் போகவில்லை. நடிப்பில் ரஜினி விளையாட்டில் ரூணி. 'நா ஒரு கோல் போட்டா நூறு கோல் போட்ட மாதிரி'.

ஸ்லாட்டன் சிம்பு : 

ஸ்லாட்டன் இப்ராஹிமோவிக் தனது ஆறு வயதிலிருந்தே ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்டவர் இன்றுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதே போல் நம் தமிழ் சினிமாவில் சிம்பு தனது சிறு வயதிலிருந்தே நடிப்பில் களமிறங்கிவிட்டார். இப்போதும் இவர் ஒரு சிறந்த நடிகராகவே இருக்கிறார். 'லெப்ட்டுல அடிச்சேன் ரைட்ல கோல் போகும் வர்ட்டா'.

டேவிட் விஷால் :

டேவிட் டி. ஜியா உலகின் சிறந்த கோல் கீப்பர் பட்டியலில் ஒருவர். இவரது உயரம் சுமார் ஆறு அடியிருக்கும். இவரை மீறி கோல் போடுவது என்பது எளிதான காரியமல்ல. அதே போல் தமிழ் சினிமாவில் விஷால். இவரும் அதே உயரம் இருப்பார். படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக்காட்சியில் இவர் சண்டையிட்டால் தத்ரூபமாக இருக்கும். 'நானும் மாட்ரிக்காரன்தாண்டா'.

-தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு