Published:Updated:

“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..!” - சசிகுமார்

மா.பாண்டியராஜன்
“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..!” - சசிகுமார்
“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..!” - சசிகுமார்

‘தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ என இந்த வருடத்தில் மூன்று பட ங்களை ரிலீஸ் செய்துவிட்ட நடிகர் சசிகுமார், நான்காவதாக ‘பலே வெள்ளையத்  தேவா’ படத்தையும் வருகிற டிசம்பர்-23ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார்.  படத்தில் நடித்த சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி  படத்தின் இயக்குநர் சோலை பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்ட  பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் பேசியது இதோ...

சங்கிலி முருகன்:

“ ‘பலே வெள்ளையத் தேவா’னு சொல்றதை விட ‘பலே சசிகுமார்’னு தான் சொல்லணும். ஏன்னா, படத்தோட மொத்த காட்சிகளையும் இடைவெளியே  விடாமல் தொடர்ச்சியா 50 நாட்கள் ஷூட் பண்ணி முடிக்க வைச்சுட்டார். அந்த  அளவுக்கு ப்ளான் கரெக்ட்டா பண்ணியிருந்தார். இப்போ இருக்கிற தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல ஐடியா. ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த  எல்லோருக்குமே என் பேரன் வயசு தான் இருக்கும். அந்த அளவுக்கு யங் டீமா  இருந்தாங்க. அதுனால, எனக்கும் ஒர்க் பண்ண எனர்ஜியா இருந்துச்சு. சசி குமாருக்கு கோவமே வராது. 50 நாள் ஷூட்ல 45 நாள் அவர் ரொம்ப  அமைதியா இருந்தார். நான் அவரைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். கடைசி அஞ்சு நாள் ஷூட்டிங்கை முடிக்கணும்னு டென்ஷன்ல  அப்போ அப்போ கோவப்பட்டார்.”

இயக்குநர் சோலை பிரகாஷ்:

“தீபாவளிக்கு யாரும் ஊருக்கு போகாமல் எல்லாரும் படத்தை சீக்கிரம்  முடிக்கணும்னு வேகத்தோட வேலை பார்த்தோம். சசிகுமாரும் ஒரு இயக்குநரா  இருக்கிறனால, ஒரு காட்சிக்கு எது தேவையோ அதை கரெக்ட்டா பண்ணினார்.  அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. கிராமத்துல எந்த அளவுக்கு  டெக்னாலஜி வளர்ந்திருக்கு என்பதையும், ஜெயிக்கிற ஒருத்தனை  தட்டிக்கொடுத்தால் அவன் இன்னும் பல உயரத்துக்கு போவான் என்பதையும்  சொல்கிற படம் தான் ‘பலே வெள்ளையத் தேவா’. மதுரையை மையமா வைச்சு  வர படங்கள் எல்லாத்துலையும் அருவா, கத்தி, வெட்டு, கொலை, ரத்தம்னு  தான் காட்டுறாங்க. ஆனால், இந்த படத்தில் மதுரைக்காரங்களோட நை யாண்டியை காட்டியிருக்கேன். அது ரொம்ப புதுசா இருக்கும்.”

ரோகினி:

“நான் சசியோட ரசிகையா இருந்தனால அவர் படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் ஷூட்டிங்கிற்கு கிளம்பிட்டேன். ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு அப்பறம்  நான் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஜாலியா இருந்தேன். சிரிச்சிட்டே இருந்தோம்.  அதே மாதிரி தான் இந்த படமும் வந்திருக்கு. எல்லா கஷ்டத்தையும் மறந்து  ஜாலியா சிரிச்சு, ரசிச்சு பார்க்கிற படமா இது இருக்கும். என்னோட கேரக்டர்  ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு லேடி கேரக்டர். இந்த படத்தோட டீசரை பார்த்தீங்கன்னா அதுல, என் பையனை(சசிகுமார்) ‘அடிடா அவன’னு சொல்லியிருப்பேன். தன்னோட பையனையே சண்ட போடுடானு சொல்லுகிற அளவுக்கு  போல்டான கேரக்டர். இந்த படத்தோட ஹீரோயின் தான்யா பத்தி  சொல்லணும்னா, தமிழ் பேசுற ஒரு ஹீரோயின் நமக்கு கிடைச்சிருக்காங்க.  ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க.”

தான்யா:

“நான் நடிக்கிற முதல் படமே இத்தனை சீனியர் ஆர்ட்டிஸ்ட் இருக்கிற படமா  இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை கொடுத்த  சசிகுமார் சார்க்கு ரொம்ப நன்றி.”

கோவை சரளா:

“சசிகுமார் படத்துல நடிக்கணும்னு எனக்கு அழைப்பு வந்தப்போ, ‘அவரு  ரொம்ப மொரடான ஆள் ஆச்சே, நம்ம காமெடி பீஸ். அவரு படத்தல நமக்கு  என்ன கேரக்டர் இருக்கப்போகுது’னு நெனச்சேன். ஆனால், இந்த படத்துல  எனக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். சசிகுமாரும் படத்துல தான்  மொரடா இருக்கார். நேர்ல ரொம்ப தங்கமான மனுஷன். அவரோட தயாரிப்புல  நடிக்கும் போது ஒரு நடிகை ரொமப வசதியா ஃபீல் பண்ணுவாங்க. நானும்  அப்படி தான் ஃபீல் பண்ணினேன். இனிமேல் வருஷத்துக்கு பத்து படம் சசி  தயாரிக்கணும், அந்த பத்து படத்துலையும் நான் நடிக்கணும். இப்போவே சசிக்கு  நான் கால்ஷீட் கொடுத்துடுறேன்(சிரிக்கிறார்). இந்த படத்தோட இயக்குநர் சோலை பிரகாஷை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது முதல் பட இயக்குநர்  மாதிரியே இருக்க மாட்டார். எல்லாரையும் நல்லா வேலை வாங்குவார். முதல்  படம்ங்கிற பதற்றமே அவர்கிட்ட இல்லை. சங்கிலி முருகன் சார் இந்த வயசிலும்  ரொம்ப எனர்ஜியா நடிச்சார். போதும் போதும்னு சொன்னாலும் நடிச்சிட்டே  இருப்பார். இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சதும் முடிஞ்ச மாதிரி தான்  இருந்துச்சு. அந்த அளவுக்கு ரொம்ப ஜாலியா போச்சு. போனதே தெரியலை.”

சசிகுமார்:

“இந்த படத்துல செல்ஃபி காத்தாயிங்கிற கேரக்டரை தமிழ் சினிமாவுல இரண்டு  பேரால தான் பண்ணமுடியும். ஒருத்தர் ஆச்சி மனோரமா, இன்னொருத்தர் சின்ன ஆச்சி கோவை சரளா. அவங்களை சின்ன ஆச்சினு தான் சொல்லணும். ஆச்சி மனோரமா இடத்தை கோவை சரளாவால்  தான் நிரப்ப முடியும். அதுனால தான் இந்த கேரக்டரை அவங்களுக்கு  கொடுத்தோம். அவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோ, அதுக்கப்பறம் தான் நான். அதே போல் சங்கிலி முருகன் சார்க்கும் முக்கியமான கதாபாத்திரம்.  என்னை வைச்சு படம் தயாரிக்கணும்னு அவர் ஆர்வமா இருந்தார். ஆனால்,  நான் அதுக்கு முன்னாடி அவரை வைச்சு படம் தயாரிச்சுட்டேன். ரொம்ப  எனர்ஜியா இருந்தார். இந்த படம் மூலமா, 50 நாள்ல ஒரு படம் பண்ணலாம்னு  நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”

மா.பாண்டியராஜன்

படங்கள்:அருணசுபா