Published:Updated:

அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

.

அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன்.

இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார்?

இதே சென்னையில்... தான் உண்டு... நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன்.

ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார்.

தேடிக் கண்டுபிடித்து 'ஹாய்... ஹலோ' சொன்னால், படத்தில் பார்த்த அதே உற்சாகத்துடன் வரவேற்கிறார் ஆன்.

''20 வருஷங்கள் ஓடிப் போச்சு. அவ்வை சண்முகியில நடிச்சபோது எனக்கு 5 வயசு. எங்கண்ணன் பென்னும் நானும் அப்பவே மாடலிங் பண்ணிட்டிருந்தோம். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் பழக்கமானார். அவ்வை சண்முகியில நடிக்க குழந்தை நட்சத்திரம் தேடிக்கிட்டிருக்கிறதா சொல்லி என்னை கமல்சார்கிட்ட கூட்டிட்டுப் போனார் மாஸ்டர். கமல் சாருக்கு என்னைப் பார்த்த உடனேயே பிடிச்சுப் போச்சு. செலக்ட் பண்ணிட்டாங்க.  கமல் சார்கூடவும் மீனா ஆன்ட்டி கூடவும் செம ஜாலியா நடிச்சேன். அந்தப் படம் செம ஹிட்டாச்சு. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா எங்கம்மாவுக்கு என்னை நடிக்க வைக்கிறதுல கொஞ்சம்கூட ஆர்வமே இல்லை. அதையும் மீறி ரெண்டு, மூணு படங்கள்லயும் சில விளம்பரங்கள்லயும் நடிச்சிட்டு, இந்த இண்டஸ்ட்ரிக்கே  கும்பிடு போட்டுட்டுப் படிக்கப் போயிட்டேன்'' என்கிற ஆன், லயோலா காலேஜ் தயாரிப்பு.

''மூணாவது வருஷம் படிக்கிறபோது உலகத்துலயே நம்பர் பிசினஸ் ஸ்கூலான IESEGயில் ஸ்காலர்ஷிப் கிடைச்சது. தென்னிந்தியாவிலேருந்து இந்த காலேஜ்ல படிக்க ஸ்காலர்ஷிப் வாங்கின ஒரே பெண் நான்தான் தெரியுமா? படிப்பை முடிச்சிட்டு, இந்தியா வந்தேன். கொஞ்ச நாள் ரியல் எஸ்டேட் வேலையில  இருந்தேன். அப்புறம் வேற  வேற கம்பெனிகள்ல வேற வேற வேலைகள். ஆனா எதுவுமே சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது.. கிட்டத்தட்ட  சினிமாவையே மறந்திருந்தேன்னு வச்சுக்கோங்களேன்... அப்பவும் இடையில எப்படியாவது என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு யாராவது ஏதாவது படத்துக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. 'ஆடுகளம்' படத்துல டாப்சி பண்ணின கேரக்டர் முதல்ல எனக்குத்தான் வந்தது. அந்த டைம் எனக்கு படிப்புதான் முக்கியமா பட்டது. வேணாம்னு சொல்லிட்டு பிரான்ஸ் போயிட்டேன். படிப்பை முடிச்சிட்டு சென்னை வந்தேன். நிறைய படங்கள் பண்ணாததால என்னை யாருக்கும் பெரிசா அடையாளம் தெரியலை. என் பிரைவசி பாதிக்கப்படாம வேலைக்குப் போயிட்டு வந்திட்டிருந்தேன். இப்பகூட சென்னையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்திட்டிருக்கேன். சுருக்கமா சொல்லணும்னா என் வேலை, சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஃப்ரெண்ட்ஸ், என்னோட செல்ல நாய்க்குட்டிகள்னு வேற ஒரு உலகத்துல நிம்மதியா வாழ்ந்திட்டிருக்கேன்...'' என்கிறவர், 'அவ்வை சண்முகி'யில் நடித்த பிறகு கமலை சந்தித்தாரா?

''சில வருஷங்களுக்கு முன்னாடி கமல் சாரை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். நானா போய் என்னை அறிமுகப்படுத்திக்கிட்ட பிறகுதான் அவருக்கு அடையாளமே தெரிஞ்சது.  சினிமாவோட தொடர்பில்லாமலேயே இருக்கிறதால எனக்கு சினிமாவுல ஃப்ரெண்ட்ஸும் அதிகமில்லை...'' அழகாகச் சொல்கிற ஆன், ஹீரோயினுக்குத் தேவையான அத்தனை தகுதிகளுடனும் இருக்கிறார். 

ஏதாவது திட்டமிருக்கா?

''ஒருவேளை அப்பவே வந்த வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓ.கே சொல்லியிருக்கலாமோனு நான் என்னிக்குமே நினைச்சதில்லை. நான் மிஸ் பண்ற விஷயங்கள்ல சினிமா இல்லை. அதே நேரம் நடிப்பை நான் வெறுத்தும் ஒதுக்கலை. அவ்வை சண்முகிக்கு இணையா சூப்பரான சப்ஜெக்ட், சூப்பரான கேரக்டரோட யாராவது கேட்டாங்கன்னா யோசிக்கத் தயார். ஆனா தேடித் தேடி நடிக்கிற அளவுக்கு இப்போதைக்கு சத்தியமா எனக்கு டைம் இல்லைங்கிறதுதான் உண்மை...''

'அவ்வை சண்முகி' பார்ட் 2க்கு ஹீரோயின் ரெடி!


ஆர்.வைதேகி

அடுத்த கட்டுரைக்கு